\
Tamil Nadu Sees a Rising Diabetes Burden | Health Data
Diabetes Reuters

தமிழ்நாட்டில் 1 கோடியைக் கடந்த நீரிழிவு - சுகாதாரத்துறை புள்ளி விவரம்!!

2026 செப்டம்பர் மாதம் வரையிலான கணக்கின்படி, மாநிலத்தில் 1 கோடியே 17 லட்சத்துக்கும் அதிகமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Published on: 

தமிழ்நாட்டில் நீரிழிவு நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

2026 செப்டம்பர் மாதம் வரையிலான கணக்கின்படி, மாநிலத்தில் 1 கோடியே 17 லட்சத்துக்கும் அதிகமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதாவது, ஐந்து பேரில் ஒருவருக்கு நீரிழிவு பாதிப்பு என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2023- 24ஆம் ஆண்டில் 72 லட்சத்து 24 ஆயிரமாக இருந்த நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை, 2024-25இல் ஒரு கோடியே 2 ஆயிரமாகவும், 2025-26இல் ஒரு கோடியே 13 லட்சமாகவும் உயர்ந்துள்ளது.

Reuters

இந்நிலையில், 2026 செப்டம்பர் மாத நிலவரப்படி இந்த எண்ணிக்கை ஒரு கோடியே 17 லட்சத்து 55 ஆயிரத்து 305 ஆக அதிகரித்துள்ளது. இது 19.5 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் 59 லட்சத்து 88 ஆயிரம் பேர் அரசு மருத்துவமனைகளிலும், 57 லட்சத்து 66 ஆயிரம் பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட இணை நோய்கள் இல்லாமல், டைப்-2 நீரிழிவு மட்டும் பாதித்தவர்கள் 60 லட்சத்து 21 ஆயிரத்து 788 பேர். அதேபோல், நீரிழிவுடன் உயர் ரத்த அழுத்தமும் சேர்ந்து பாதித்தவர்கள் 57 லட்சத்து 33 ஆயிரத்து 517 பேர். இந்த இரு பிரிவுகளும் மாநில மக்கள் தொகையில் முறையே 10 சதவீதம் மற்றும் 9 .5 சதவீதமாக உள்ளன.

கர்ப்பிணிப் பெண்களையும் நீரிழிவு நோய் விட்டுவைக்கவில்லை. 2025-26இல் பரிசோதிக்கப்பட்டவர்களில் 64 ஆயிரத்து 413 பேருக்கு மகப்பேறு நீரிழிவு கண்டறியப்பட்ட நிலையில், 2026-27இல் செப்டம்பர் வரை 25 ஆயிரத்து 40 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது 7 சதவீதமாகும். மேலும், இன்சுலின் சுரப்பைப் பாதிக்கும் டைப்-1 நீரிழிவு நோயால் 5 ஆயிரத்து 795 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கே ஆண்டுகளில் நீரிழிவு பாதிப்பு 12 சதவீதத்திலிருந்து 19.5 சதவீதமாக உயர்ந்திருப்பது, தமிழகத்தின் பொது சுகாதாரத்துக்கு விடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

Tamil Nadu Sees a Rising Diabetes Burden | Health Data
இந்தியாவில் அதிகம் பேர் காசநோயால் பாதிப்பு.. WHO எச்சரிக்கை!!