நார்ச்சத்து அதிகமாக சாப்பிட்டால் போதுமா? மருத்துவர்கள் பரிந்துரை என்ன?
நார்ச்சத்து அதிகமாக சாப்பிட்டால் போதுமா? எவ்வகை நார்ச்சத்தை சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம்... நார்ச்சத்து என்றாலே நமது செரிமானத்துக்கு மிகவும் முக்கியமானது என்று அனைவரும் அறிந்ததே. ஆனால், நார்ச்சத்தில் இரண்டு வகைகள் உள்ளன. அதில் ஒன்று கரையக்கூடிய நார்ச்சத்து. மற்றொன்று கரையாத நார்ச்சத்து. அதன்படி ஓட்ஸ், பீன்ஸ், பருப்பு வகைகள், பழங்களில் கிடைக்கக்கூடிய கரையக்கூடிய நார்ச்சத்தை உணவில் எடுத்துக்கொள்வதால் ரத்தச் சர்க்கரை மற்றும் கொழுப்பைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் என்றும், அதே நேரம் காய்கறிகள், முழு தானியங்கள் போன்ற கரையாத நார்ச்சத்து உணவுகள் உண்பதால், குடல் இயக்கத்துக்கு உதவி மலச்சிக்கலை தவிர்க்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதனால் இரண்டு வகையான நார்ச்சத்துகளையும் உணவில் சேர்த்துகொள்ள வேண்டும் என்றும், ஆனால் திடீரென நார்ச்சத்து உணவுகளை அதிகரிக்கமால், படிப்படியாக எடுத்துகொள்வதுடன் போதுமான தண்ணீரும் அருந்த வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஒரே ஒரு நார்ச்சத்து வகையை மட்டும் எடுத்துக்கொள்ளாமல், இரண்டு வகையான நார்ச்சத்து உணவுகளையும் எடுத்துக்கொள்வதே ஆரோக்கியமான வழி.

