சென்னை : காய்ச்சல் பாதிப்பால் சிறுவன் உயிரிழப்பு

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் டெங்கு அறிகுறியுடன் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்தார்.

சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி அருகே உள்ள சென்னீர்குப்பம் பகுதியை சேர்ந்த புவியரசன் என்பவரின் வயது மகன் சக்தி சரவணன். சென்னீர்குப்பத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்த சக்தி சரவணன், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளளார். அவரை கடந்த 11ம் தேதி எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்துள்ளனர்.

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை

அங்கு தொடர்ந்து சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு டெங்கு அறிகுறிகள் இருந்தது என்றும், ஆனால், டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்படவில்லை என்றும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்த சிறுவன்
"நாள்தோறும் 300 முதல் 400 நபர்கள் டெங்குவால் பாதிக்கப்படுகின்றனர்" - ககன்தீப்சிங் பேடி

ஒரு வாரம் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்த சிறுவன், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். டெங்கு அறிகுறியுடன் சிறுவன் உயிரிழந்ததையடுத்து அப்பகுதியில் நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com