antibiotics in meat
antibiotics in meatweb

1 கிலோ இறைச்சியில் இவ்வளவு ஆபத்து சேர்க்கப்படுகிறதா? NonVeg பிரியர்களுக்கு அதிர்ச்சி! வெளியான தகவல்!

நாம் உட்கொள்ளும் இறைச்சிகளில் வெறும் ரத்தமும், சதையும் மட்டுமில்லை, நோய் தடுப்பு வேதியியல் பொருட்களும் கலந்து இருக்கிறது. ஒவ்வொரு கிராம் இறைச்சிக்காகவும் 114 மில்லிகிராம் ஆண்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்தப்படுவது ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
Published on

நவீன காலகட்டத்தில் ஆண்டிபயாடிக் எனும் நோய் எதிர்ப்பு மருந்துகளின் பயன்பாடு தவிர்க்க முடியாத அம்சமாகி விட்டது. என்றாலும், பண்ணைகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, கோழிகளுக்கு கொடுக்கப்படும் ஆண்டிபயாடிக் மருந்துகள் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தி இந்து ஆங்கில நாளிதழில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரை பல அதிர்ச்சிகரமான உண்மைகளை எடுத்துவைக்கிறது.

antibiotics in meat
அன்புமணி ராமதாஸ் மகள் தயாரித்துள்ள ‘அலங்கு’ படம்.. ட்ரெய்லரை பார்த்து வாழ்த்திய ரஜினி!

70% ஆண்டிபயாடிக் மருந்துகள் பயன்பாடு..

நடத்தப்பட்ட ஆய்வின்படி உலகம் முழுவதும் 70 விழுக்காடு ஆண்டிபயாடிக் மருந்துகள் பண்ணை விலங்களுக்கு கொடுக்கப்படுவது தெரியவந்துள்ளது.

ஆண்டிபயாடிக் மருந்துகள் அதிகப்படியான பயன்பாடு தொடர்பாக விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு மட்டுமல்லாது மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு ஆண்டிபயாடிக் மருந்துகள் எந்தளவுக்கு கொடுக்கப்படுகிறது என்பதை ஒரு கிலோ இறைச்சியை கொண்டு ஆய்வாளர்கள் மதிப்பீடு செய்தனர்.

antibiotics in meat
’தம்மாதுண்டு ஆங்கர்தான்..’ அமெரிக்க செஸ் கிராண்ட்மாஸ்டரை வீழ்த்திய 9 வயது இந்திய சிறுவன்! #NewRecord

எந்த இறைச்சிகளில் எவ்வளவு ஆண்டிபயாடிக்..?

ஆய்வுகளில் முடிவில் செம்மறி ஆடுகளுக்கு அதிகளவு ஆண்டிபயாடிக் மருந்துகள் கொடுப்பது தெரியவந்துள்ளது.

  • ஒரு கிலோ செம்மறி இறைச்சிக்காக 243 மில்லி கிராம் ஆண்டிபயாடிக் மருந்து பயன்படுத்தப்படுகிறது.

  • ஒரு கிலோ பன்றி இறைச்சிக்கு 173 மில்லி கிராம் ஆண்டிபயாடிக் மருந்துகளும்,

  • மாடுகளின் ஒரு கிலோ இறைச்சிக்காக 60 மில்லி கிராமும்,

  • கோழி இறைச்சிக்காக 35 மில்லி கிராமும் ஆண்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்தப்படுவது, 2020-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

190 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, பண்ணை விலங்களுக்கான ஆண்டிபயாடிக் மருந்துகள் பயன்பாட்டில் சர்வதேச அளவில் இந்தியா 30 ஆவது இடத்தில் இருக்கிறது.

antibiotics in meat
மெசேஜ் கவனிக்கவில்லையென உறவுகளுடன் மோதல் வருகிறதா? இதோ தீர்வு.. வந்தாச்சு அசத்தல் Whatsapp Update!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com