alangu trailer
alangu trailerx

அன்புமணி ராமதாஸ் மகள் தயாரித்துள்ள ‘அலங்கு’ படம்.. ட்ரெய்லரை பார்த்து வாழ்த்திய ரஜினி!

அன்புமணி ராமதாஸின் மகளான சங்கமித்ரா அலங்கு என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ளர். இப்படம் இந்த மாதம் திரைக்கு வர உள்ள நிலையில், அப்படத்தின் ட்ரெய்லரை ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.
Published on

உறுமீன், பயணிகள் கவனிக்கவும் முதலிய படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.பி. சக்திவேல் இயக்கத்தில் புதியதாக உருவாகியிருக்கும் படம் ’அலங்கு’. இப்படத்தை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸின் மகளான சங்கமித்ரா அன்புமணி தயாரித்துள்ளார். இதன்மூலம் தயாரிப்பாளராக திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.

இப்படத்தில் மலையாள நடிகர் செம்பன் வினோத், காளி வெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா, கொற்றவை, ரெஜின் ரோஸ், சண்முகம் முத்துசாமி என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் நாய் ஒன்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. படத்துக்கு எஸ் பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் நிலையில், அஜீஷ் இசை அமைத்துள்ளார்.

இந்த படம் வருகின்ற டிசம்பர் 27-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் நிலையில், படத்தின் ட்ரெய்லரை இன்று ரஜினிகாந்த் வெளியிடுவார் என கூறப்பட்டது. அதன்படி இன்று நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்த படக்குழு, ட்ரெய்லரை அவரிடம் காட்டியுள்ளது. அவரும் தன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

alangu trailer
செம்மையா இருக்கே.. இது சீயானின் வேற ரகம்.. விக்ரமின் 'வீர தீர சூரன்' பட டீசர் வெளியீடு!

்டரெய்லரை பார்த்து படக்குழுவுக்கு வாழ்த்து சொன்ன ரஜினி..

அலங்கு திரைப்படத்தை பொறுத்தவரையில் புலம்பெயர்ந்து தொழில் செய்யும் பழங்குடியினரின் வாழ்க்கையை பதிவு செய்யும் விதமாகவும் தமிழ்நாடு மற்றும் கேரளா எல்லை பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்தும் உருவாக்கப்பட்டுள்ளது. நாய் மீதான பாசத்தை மையக்கருவாக கொண்டு திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

alangu
alangu

மனிதர்களுக்கும், நாய்களுக்கும் இருக்கும் பாசம், உறவு எப்படி ஒரு சம்பவத்தின் மூலம் ஒரு பகையாக மாறுகிறது என்பதை சுற்றி படம் நகர்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள கடைசிவசனம் ‘இந்த நாய் இல்லனா இவ்வளவு பிரச்னை இல்லை’ என இடம்பெற்றுள்ளது.

மலைப்பகுதியினரை சார்ந்த படம் என்பதால் படம் முழுவதும் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் படமாக்கப்பட்டுள்ளது. அலங்கு என்றால் ராஜராஜ சோழன் படைப்பிரிவில் இருந்த நாட்டு நாய் இனத்தின் பெயர் என கூறப்படுகிறது.

அலங்கு படத்தின் படக்குழுவினரை நேரில் சந்தித்த ரஜினி, ட்ரெய்லரை பார்த்து இயக்குநர் எஸ்.பி. சக்திவேல் மற்றும் தயாரிப்பாளர் சங்கமித்ரா அன்புமணி உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுவருகிறது.

alangu trailer
5 நாளில் ரூ.1000 கோடியை நெருங்கும் வசூல்.. முதல் இந்திய சினிமாவாக வரலாற்று சாதனை படைக்கும் புஷ்பா 2!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com