சமையல் எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சூடாக்கி பயன்படுத்தினால் புற்றுநோய் உண்டாகும்! ICMR எச்சரிக்கை!

சமையல் எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சூடாக்கி பயன்படுத்தினால் புற்றுநோய் உண்டாகும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் முகநூல்

சமையல் எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சூடாக்கி பயன்படுத்தினால் புற்றுநோய் உண்டாகும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் இணைந்து இந்தியர்களிடையே ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு ஏற்ற உணவுப் பழக்கங்களை கடைபிடிக்க வலியுறுத்தி புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், சமையல் எண்ணெய்கள் அல்லது கொழுப்பு நிறைந்த எண்ணெய்களை மீண்டும் மீண்டும் சூடாக்கி பயன்படுத்துவது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. அதை சூடாக்கும்போது நச்சு கலவைகள் மற்றும் ட்ரான்ஸ் கொழுப்புகள் உருவாகின்றன. இது இதய நோய்கள் மற்றும் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்
“வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகள் கூட ஆரோக்கியமற்றதாக இருக்கும்”- ஐசிஎம்ஆர் எச்சரிக்கை

உணவு எண்ணெய்யை ஒன்று அல்லது 2 நாட்களுக்கு மட்டும் பயன்படுத்துவதே பாதுக்காப்பானது என்றும், அதற்கு மேல் சேமித்து வைத்து பயன்படுத்துவது ஆபத்தில் முடியும் எனவும் மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com