“வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகள் கூட ஆரோக்கியமற்றதாக இருக்கும்”- ஐசிஎம்ஆர் எச்சரிக்கை

வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகளில் அதிக கொழுப்பு, அதிக சர்க்கரை, அதிக உப்பு கொண்டு சமைக்கப்பட்டால் அது உடலுக்கு ஆரோக்கியமானது இல்லை என்று இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.
ஐசிஎம்ஆர்
ஐசிஎம்ஆர்முகநூல்

‘ஹோட்டல்ல சாப்பிட்டா நல்லதில்ல’ என்று சொல்வதும், ‘வீட்டு சாப்பாடு சாப்டா எந்த பிரச்னையும் வராது’ என்று கூறுவதும் காலம் காலமாக நாம் கேட்கும் ஒன்று. ஆனால், ஆரோக்கியமானதாக கருதப்படும் வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகூட ஆரோக்கியமற்றதாக இருக்கும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே, வெயில் நேரத்திலும் உணவிற்குப் பிறகும் தேநீர், காபி அருந்தவேண்டாம், சரிவிகித உணவுகுறித்த 17 வழிகாட்டு நெறிமுறைகள் என தொடர்ந்து உடல் நலம் சார்ந்த செய்திகளை வழங்கிவரும் ஐசிஎம்ஆர் தற்போது, வீட்டில் தயாரித்த உணவுகளில் உள்ள ஆரோக்கியமற்ற தன்மையை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மருத்துவ கவுன்சிலின் அறிக்கையில்,

வீட்டில் சமைத்த உணவுகளில் அதிக கொழுப்போ, அதிக சர்க்கரையோ, அதிக உப்போ இருந்தால் வீட்டில் சமைத்த உணவுகள் கூட உடலுக்கு தீங்கு விளைவிக்கும். காரணம் இவை பெரும்பாலும் அதிக அளவு கலோரிகளையும், குறைந்த அளவு நார்ச்சத்து, ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கியது.

மேலும் உண்வில் கொழுப்பு மற்றும் சர்க்கரை அதிகமாக இருக்கும்போது, அவை அதிக அளவு கலோரிகளை கொண்டிருப்பதால் உடல் பருமன் போன்ற உபாதைகளை உடலில் உருவாகக்கூடும்.

இந்த மாதிரியான உணவுகளால் ஒருவரின் உடலுக்கு தேவையான மேக்ரோநியூட்ரியண்ட்ஸ் (அமினோ அமிலங்கள் மற்றும் கொழுப்புகள்), நார்ச்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் போன்ற வைட்டமின்கள், தாதுக்கள், பைட்டோநியூட்ரியண்ட்கள், பயோ-ஆக்டிவ் போன்ற சத்துக்கள் கிடைப்பதில்லை.

இந்த அத்தியவசியமான அமினோ அமிலங்களும் ஃபேட்டி ஆசிட்களும் நுண்ணூட்டச்சத்துக்களும் ஒருவருக்கு உணவின் மூலம் கிடைக்கப்பெறவில்லை என்றால் அவருக்கு ரத்தசோகை, மூளையின் செயல்பாட்டில் பாதிப்பு, கற்றல் திறன் மற்றும் நினைவாற்றல் திறன்களில் பாதிப்பு, இராண்டாம் நிலை நீரிழிவு, உடல் பருமன் போன்றவை ஏற்படலாம்.

அதிக கொழுப்பு அல்லது அதிக சர்க்கரை கொண்ட உணவுகள் உள்ளுறுப்புகள் வீக்கத்தை ஏற்படுத்துவதுடன் குடலில் உள்ள நுண்ணுயிரிகளையும் பாதிக்கிறது. அதிக அளவு உப்பு கொண்ட உணவுகள் உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்னையை ஏற்படுத்தும்.

ஒரு நாளைக்கான 2000 கலோரி டயட்டில், நிறைவற்ற கொழுப்புகள் 10 கிராமுக்கு மேலே இருந்தால், அவை உடலுக்கு நல்லது அல்ல. ஏனெனில் நிறைவற்ற கொழுப்புகள் ஒபிசிட்டி போன்ற உடல் பருமன் அபாயத்தை அதிகரிக்கும்.

(எ.கா: நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய், பாமாயில், வனஸ்பதி போன்ற உணவுப்பொருட்கள்)

ஐசிஎம்ஆர்
"உங்கள் தட்டில் இந்த உணவெல்லாம் இருக்கிறதா" - 17 வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கிய ICMR! செம்ம டிப்ஸ்!

ஒரு நாளைக்கான உப்பு உட்கொள்ளுதல் அளவு என்பது 5 கிராமுக்கு மேல் போகல்க்கூடாது (சோடியம் ஒரு நாளைக்கு 2 கிராமுக்கு மேல் போகக்கூடாது). சிப்ஸ், சாஸ்கல், பிஸ்கட்கள், போக்கரி பொருட்கள், ஊறுகாய் போன்றவற்றில் உப்பின் அளவு அதிகளவு இருக்கலாம்.

சர்க்கரையின் அளவை பொறுத்தவரை ஒரு நாளைக்கு 25 கிராம் பரிந்துரை செய்யப்படுகிறது. ஆகவே, கலோரிகள் என்பது வைட்டமின்கள், தாது உப்புகள், நார்ச்சத்துக்கள் அடங்கியதாக இருந்தால் மட்டுமே அது ஆரோக்கியமானதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com