\
நீரிழிவு நோய்
நீரிழிவு நோய்pt web

நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு நற்செய்தி.. ரத்தச் சர்க்கரையைக் குறைக்கும் பாதப் பயிற்சி.!

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நீண்ட நேரம் அமர்ந்து பணியாற்றுபவர்களுக்கும் ஒரு நற்செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழில் வெளியான கட்டுரை குறிப்பிடும் தகவல்களைப் பார்க்கலாம்.
Published on
Summary

சோலியஸ் தசையைச் செயல்படுத்துவதன் மூலம், நீரிழிவு நோயாளிகள் ரத்தச் சர்க்கரையை குறைக்க முடியும் என புதிய ஆய்வு கூறுகிறது. இந்த பயிற்சி, உணவுக்குப் பின் செய்யப்படும்போது, சர்க்கரை அளவை 52% வரை குறைக்க உதவுகிறது. உடற்பயிற்சி செய்ய முடியாதவர்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும்.

நம் காலின் பின்பகுதியில் உள்ள சோலியஸ் என்ற தசையைச் செயல்படுத்துவதன் மூலம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை வியக்கத்தக்க வகையில் குறைக்க முடியும் எனப் புதிய ஆய்வு கூறுகிறது.

சோலியஸ் புஷ்-அப் எனப்படும் இந்தப் பயிற்சியை எப்படிச் செய்வது? நாற்காலியில் அமர்ந்தபடி, பாதத்தின் முன் பகுதியைத் தரையில் ஊன்றி, குதிகாலை மட்டும் மேலே தூக்கி, பின் கீழே இறக்க வேண்டும். சாதாரண நடைப்பயிற்சியைவிட, இது ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை விரைவாக எரிக்க உதவுகிறது. உணவருந்திய பின் இந்தப் பயிற்சியைச் செய்வதன் மூலம், சர்க்கரை அளவு 52 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சோலியஸ் தசை
சோலியஸ் தசைPt web

உடற்பயிற்சி நிலையத்துக்கு செல்ல முடியாதவர்களுக்கும் அல்லது கடினமான உடற்பயிற்சி செய்ய முடியாத முதியவர்களுக்கும், அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும் இது ஒரு மிகச்சிறந்த தீர்வாகும். உட்கார்ந்த இடத்திலேயே ஆரோக்கியத்தைப் பேண உதவும் இந்த எளிய முறையை எல்லோரும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரை கூறுகிறது.

நீரிழிவு நோய்
உயிரிழப்பை உருவாக்கும் உடல்பருமன்.. இந்தியாவில் 25.4 கோடி பேர் பாதிப்பு.. அதிர்ச்சித் தகவல்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com