மனித விந்தணுக்களில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸா? ஆய்வு தரும் அதிர்ச்சி தகவல்! காத்திருக்கும் பெரிய ஆபத்து!

மனித விந்தணுக்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் உள்ளது என சமீபத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த பிளாஸ்டிக் துகள்கள் ஆண்மைக்குறைவு பிரச்னையை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
மனித விந்தணுக்கள்
மனித விந்தணுக்கள்முகநூல்

மனித விந்தணுக்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் உள்ளது என சமீபத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த பிளாஸ்டிக் துகள்கள் ஆண்மைக்குறைவு பிரச்னையை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

நியூ மெக்சிகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து UNM செவிலியர் கல்லூரியின் பேராசிரியரான சியாங்ஜோன் ஜான் யூ தலைமையில் இந்த ஆராய்ச்சியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம், 47 நாய்கள் மற்றும் 23 மனித விரைகளில் 12 வகையான மைக்ரோபிளாஸ்டிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றது.

இது குறித்து பேராசிரியரான சியாங்ஜோன் ஜான் யூ தெரிவிக்கையில், “ இந்த மாதிரிகள் அனைத்திலும், மைக்ரோபிளாஸ்டிக் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை ஆண்களுக்கு ஏற்படும் ஆண்மை குறைவு பிரச்னைக்கான காரணங்களுக்கு காரணமாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

ஆரம்பத்தில், மைக்ரோபிளாஸ்டிக்ஸ் இனப்பெருக்க அமைப்பில் ஊடுருவ முடியுமா? என்று நான் சந்தேகித்தேன். ஆனால்,இந்த ஆய்வின் மூலம் நாய்களில் செய்யப்பட்ட சோதனை முடிவுகளை பார்த்தபோது மிகவும் ஆச்சரியப்பட்டேன். இதைவிட, மனிதர்களின் ஆய்வு முடிவுகளை கண்டபோது இன்னும் ஆச்சரியத்தினை உண்டாக்கியது.

மனித விந்தணுக்கள்
கொட்டாவியால் இப்படியெல்லாம் நடக்குமா? ஆச்சரியத்தை உண்டாக்கும் உண்மை நிகழ்வு!

இதன்மூலம், இந்த மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் சுற்று சூழலில் பரவி, மனிதர்களின் உணர்திறன் கொண்ட பகுதிகளை மிகவும் தாக்குகிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. மேலும், இந்த பிளாஸ்டிக்ஸ் ஆண்களில் ஆண்மைக்குறைவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பதை கண்டறிய கூடுதல் ஆய்வுகள் தேவை.” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com