பாராசிட்டமால் அதிகம் எடுத்துகொள்வது ஆபத்து - ஏன் தெரியுமா? மருத்துவர் விளக்கம்

பாராசிட்டாமால் மாத்திரைகளை அதிகபட்சம் எவ்வளவு எடுத்து கொள்ளலாம்? அதிகம் எடுத்துக்கொண்டால் கல்லீரல் பாதிப்பு ஏற்படுமா? போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்கிறார் பொதுநல மருத்துவர் அருணாச்சலம்.
மருந்து
மருந்துfreepik

வலி நிவாரணியாக இருக்கும் பாராசிட்டமால் மாத்திரை பல பக்கவிளைவுகளை தன்னகத்தே கொண்டுள்ளது என்று சமீபத்திய ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், பாராசிட்டமால் மாத்திரைகளால் கல்லீரல் பாதிப்பு ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.

மாத்திரை
மாத்திரை

இதையடுத்து ‘பாராசிட்டமால் மாத்திரை கல்லீரல் பாதிப்பினை இது ஏற்படுத்துமா...?’ என்பதுகுறித்த கேள்வியை பொதுநல மருத்துவர் அருணாச்சலம் முன் வைத்தோம். அவர் கூறிய பதில்கள், இதோ...

மருந்து
இதயம்-மூளை-ரத்தம் தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்துமா COVID VACCINE? ஆய்வுமுடிவும் மருத்துவ பார்வையும்

“குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே உடல் வலி, தலைவலி, காய்ச்சல் போன்ற நேரங்களில் சுயமாகவே எடுத்துக்கொள்ளும் மாத்திரையாக இருக்கிறது பாராசிட்டமால். உலகமெங்கும் பயன்படுத்தும் மருந்தாக இது இருப்பதால், இவற்றை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

பாரசிட்டமால் அளவு

ஒருவரின் எடைக்கு ஏற்றவாறுதான் பாராசிட்டமால் மாத்திரையின் அளவை நாங்கள் பரிந்துரைப்போம். அளவுக்கு மீறிய டோஸ் எடுத்தால் பக்கவிளைவுகள் மோசமாக இருக்கும். அந்த அளவை பொதுமக்கள் சுயமாக கணிக்காமல், மருத்துவரிடமே ஆலோசனை பெறுவது நல்லது.

பொது நல மருத்துவர் அருணாச்சலம்
பொது நல மருத்துவர் அருணாச்சலம்

பாரசிட்டமால் - எதற்கெல்லாம் பயன்படும்?

இவை NON STERODIAL ANTI - INFLAMMATORY வகையை சார்ந்த மருந்துகள் என்பதால் காய்ச்சலுக்கு மட்டுமன்றி உடல் வலி, வீக்கம், தலைவலி போன்றவற்றை குறைப்பதற்கும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும். அதேநேரம் பாராசிட்டமால் மாத்திரை காய்ச்சலை கட்டுப்படுத்துமே தவிர, குணப்படுத்தாது.

பக்கவிளைவுகள் - வயிறு எரிச்சல், சிறுநீரக, கல்லீரல் பிரச்னை

பாராசிட்டாமல் வயிற்றெரிச்சலை பக்கவிளைவாக ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. ஆகவேதான் உணவு உண்ட பின் இம்மாத்திரைகளை எடுத்துகொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கப்பர். இதுபோன்ற நேரங்களில் நிறைய தண்ணீர் அருந்தினால் வயிற்றெரிச்சலை தவிர்க்கலாம்.

பெரும்பாலானவர்கள் வலி நிவாரணிகளாக கருதப்படும் diclofenac, aceclofenac, ibuprofen போன்ற மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி தானாகவே எடுத்து கொள்கின்றனர். இப்படி செய்வதால் அந்த மாத்திரை முதலில் சிறுநீரகத்தினை பாதிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த மாத்திரைகளுடன் ஒப்பிடுகையில் ஓரளவிற்கு சுயமாக ஏற்றக்கொள்ளக்கூடிய மருந்து என பாராசிட்டமால் சொல்லப்படுகிறது.

பாராசிட்டமால்
பாராசிட்டமால்

ஆனாலும் 60 கிலோ எடை இருப்பவர்களுக்கு 4 கிராமுக்கு மேல் ஒருநாளில் பாராசிட்டமால் எடுக்கக்கூடாது. மீறி எடுத்தால் ஹெபடோடாக்சிசிட்டி (கல்லீரல் பாதிப்பு) ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

மருந்து
சிசேரியன் செய்த பெண்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் அதிகமா? ஆய்வு முடிவு சொல்வதென்ன?

வெறும் வயிற்றல் மாத்திரை சாப்பிட கூடாது

பரிந்துரையின்றி பாரசிட்டமால் மாத்திரை அடிக்கடி உட்கொண்டால் கல்லீரல் பாதிப்பு, இரைப்பையில் புண், உணவு குழாய் புண், வயிற்றுப்பிரச்னை, சிலருக்கு தோலில் அழற்சி கூட ஏற்படுத்தலாம்.

காய்ச்சல், தலைவலி ஏற்படும் நேரத்தில் அதிக அளவு தண்ணீர் உடலுக்கு தேவை என்பதால், அந்த நேரத்தில் தண்ணீர் குடிப்பது அவசியம். மேலும் மாத்திரைகள் உட்கொள்ளும்போது வெறும் வயிற்றல் சாப்பிட கூடாது.

வயிறு பிரச்னைகள்
வயிறு பிரச்னைகள்

ஒரு மடங்கு தண்ணீரில் மாத்திரை சாப்பிடாமல், 1 டம்ளர் தண்ணீரில் சாப்பிட வேண்டும். எந்த மாத்திரையாக இருந்தாலும் மருத்துவரின் பரிந்துரையின் பேரில்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்..” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com