எம்.பாக்ஸ் வைரஸ்முகநூல்
ஹெல்த்
கேரளாவில் உறுதி செய்யப்பட்ட எம்.பாக்ஸ் வைரஸ் தொற்று: தீவிர கண்காணிப்பில் கன்னியாகுமரி!
கேரள மாநிலம் மலப்புரத்தில் ஒருவருக்கு எம்.பாக்ஸ் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கன்னியாகுமரி மாவட்ட கேரள எல்லையில் 2ஆவது நாளாக கண்காணிப்புப் பணி நடைபெற்றது.
கேரள மாநிலம் மலப்புரத்தில் ஒருவருக்கு எம்.பாக்ஸ் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கன்னியாகுமரி மாவட்ட கேரள எல்லையில் 2ஆவது நாளாக கண்காணிப்புப் பணி நேற்று நடைபெற்றது.
குரங்கம்மைகோப்புப்படம்
களியக்காவிளை, கொல்லங்கோடு ஆகிய எல்லைப் பகுதிகளில் மேற்கொண்ட சோதனையில் இதுவரை யாருக்கும் தொற்று அறிகுறி கண்டறியவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். முன்னதாக மலப்புரத்தைச் சேர்ந்த ஒருவர் வெளிநாட்டில் வேலை செய்து விட்டு சொந்த ஊர் திரும்பிய போது காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவருக்கு ரத்த பரிசோதனை செய்ததில் எம்.பாக்ஸ் வைரஸ் தொற்று உறுதியானது. இந்நிலையில், கேரள மாநில எல்லை பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது