எடை குறைப்புக்கு பட்டினி கிடப்பது சரியா? - விளைவுகளை தெரிந்துகொள்ளுங்கள்

எடை குறைப்புக்கு பட்டினி கிடப்பது சரியா? - விளைவுகளை தெரிந்துகொள்ளுங்கள்
எடை குறைப்புக்கு பட்டினி கிடப்பது சரியா? - விளைவுகளை தெரிந்துகொள்ளுங்கள்

’அளவோடு சாப்பிட்டு வளமாக வாழுங்கள்’ என்று வாழ்த்துவதுண்டு. ஆம், அளவாக சாப்பிட்டு, போதுமான உடற்பயிற்சிகளை செய்வதுதான் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உடற்பயிற்சியுடன் முறையான டயட் முறையை பின்பற்றினால்தான் உடல் எடையை ஆரோக்கியமான வழியில் குறைக்க முடியும். அதேசமயம் இந்த செயல்முறையை அதிரடியாக நடைமுறை படுத்தாமல் படிப்படியாக வழக்கப்படுத்தவேண்டும். ஒரேயடியாக கலோரி அளவை குறைக்கும்போது இதய செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு மொத்த உடலின் இயக்கமுமே சீர்குலைந்து விடும்.

சரியான முறையைத்தான் நாம் பின்பற்றுகிறோமா என்ற சந்தேகம் பலருக்கும் எழும். சில உணவு பழக்கவழக்கங்கள் உடல் எடையை குறைப்பதற்கு பதிலாக உடலுக்கு தொந்தரவாக அமைந்துவிடும்.

உணவை தவிர்த்தல்: உடல் எடையை குறைப்பதற்கு பயன்படுத்தும் மோசமான யுக்திகளில் இதுவும் ஒன்று. எடை குறைப்புக்கு மிக முக்கியம் முறையான உணவு; பட்டினி கிடத்தல் அல்ல. உடலுக்கு போதுமான கலோரிகளும், ஊட்டச்சத்தும் கிடைக்காவிட்டால் அது கொழுப்பு செல்களை தக்கவைத்துக்கொள்ளும். இதை எடை குறைப்பை மேலும் கடினமாக்கிவிடும்.

gluten-free உணவை உண்ணுதல்: க்ளூட்டன் இல்லாத உணவு என்பது கலோரிகள் குறைவான உணவுகளாக இருக்கவேண்டிய அவசியமில்லை. இவை பதப்படுத்தப்பட்ட உணவுகளாகக்கூட இருக்கலாம். இது டயட்டை முற்றிலுமாக குழப்பிவிடும். சிலருக்கு க்ளூட்டன் உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். எனவே இவற்றை தவிர்க்கலாம் அல்லது மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ளலாம்.

கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்த்தல்: தசை மற்றும் மூளைக்கு கார்போஹைட்ரேட் மிகமிக அவசியம். அவற்றை முற்றிலுமாக தவிர்ப்பது சரியானதல்ல. உடலில் கார்போஹைட்ரேட்டுகளை சேர்க்காதபோது சர்க்கரையை எடுத்துக்கொள்ள நேரிடும். பின்னர் அனைத்து டயட் மற்றும் உடற்பயிற்சிகளும் வீணாகிவிடும்.

கொழுப்பை தவிர்த்தல்: கொழுப்பற்ற உணவை சாப்பிடுவது உடல் எடையை கட்டாயம் குறைக்கும் என்ற எண்ணம் தவறு. கொழுப்பு உணவுகள் ஒரு நிறைவான எண்ணத்தைக் கொடுக்கும். இருப்பினும் கலோரி உணவுகளுக்கும் எடைகுறைப்பில் பங்குண்டு. எலும்பு மூட்டுகள், இதயம் மற்றும் மூளையின் இயக்கத்திற்கு கொழுப்பு தேவைப்படும் என்பதை மறக்கவேண்டாம். மருத்துவர்கள் முற்றிலுமாக தவிர்க்க அறிவுறுத்தினாலொழிய கொழுப்பு உணவுகளை முற்றிலும் தவிர்க்கவேண்டாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com