உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயா?.. ஆறுதல் அளிக்கும் செய்தி இதோ!
உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் இந்தியர்களை வெகுவாக பாதித்துள்ள நிலையில் அவர்களுக்கு நல்ல செய்தி ஒன்று வந்துள்ளது. இவ்விரு பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் உலகப்புகழ் பெற்ற மருந்து இந்திய சந்தைகளில் அறிமுகமாகியுள்ளது.
மவுஞ்சாரோ என்ற இந்த அருமருந்தை Eli Lilly என்ற நிறுவனம் களமிறக்கியுள்ளது. இங்கிலாந்து, ஐரோப்பாவில் மவுஞ்சாரோ மருந்து பயன்பாட்டில் உள்ள நிலையில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. மேலும், முறையான மருத்துவ ஆலோசனைக்கு பிறகே எடைக்குறைப்பு மருந்தினை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று Eli Lilly நிறுவனம் தெரிவித்துள்ளது.
திரவ வடிவிலான இம்மருந்தை உடல் பருமனை குறைக்க விரும்புபவர்களும் 2ஆம் வகை சர்க்கரை நோய் உள்ளவர்களும் ஊசி வடிவில் உடலுக்குள் செலுத்திக்கொள்ள வேண்டும். இந்த மருந்து உணவுக்கான ஆர்வத்தை கட்டுப்படுத்துவதோடு உடலில் உள்ள இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தி எடையை குறைக்க உதவுகிறது. எனினும் இதன் விலை என்ன என்பது தெரிவிக்கப்படவில்லை.
இந்தியாவில் கள்ளச்சந்தைகளில் இவ்வகை மருந்துகள் ஏற்கெனவே அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சூழலில், அதனை தடுக்க லில்லி நிறுவனம் நேரடியாக களமிறங்குகிறது. சூழலில், அதனை தடுக்க லில்லி நிறுவனம் நேரடியாக களமிறங்குகிறது.