ரத்த தட்டுப்பாடு நிலவுவதில் இந்தியா முதலிடம்!
உலகிலேயே நோயாளிகளுக்கு தருவதற்கான ரத்த தட்டுப்பாடு நிலவுவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லான்செட் மருத்துவ இதழில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரையில் இந்தியாவில் 4 கோடியே 10 லட்சம் யூனிட் ரத்த பற்றாக்குறை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரத்தத்தின் தேவைக்கும் விநியோகத்திற்கும் 4 மடங்கு இடைவெளி இருப்பதாகவும் அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு 2 நொடி இடைவெளியில் ஒரு யூனிட் ரத்தம் தேவைப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. ரத்ததானம் செய்வது ஒரு உயிரை காப்பது மட்டுமல்லாமல் தானம் அளிப்பவரின் இதயத்திற்கும் நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர். ரத்த தானத்திற்கு முன் பல்வேறு பரிசோதனைகள் செய்யப்படும் என்றும் அப்போது தெரியவரும் தகவல்கள் மூலம் இதயத்தில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்று முன்கூட்டியே அறியலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.