தமிழ்நாட்டில் சிசேரியன் பிரசவம் இவ்வளவு மடங்கு அதிகரித்துவிட்டதா? - ஐஐடி ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி!

தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை மூலம் மகப்பேறு நடப்பது 3 மடங்கு அதிகரித்துள்ளதாக சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஐஐடி ஆய்வு
ஐஐடி ஆய்வுமுகநூல்

செய்தியாளர்:பால வெற்றிவேல்

தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை மூலம் மகப்பேறு நடப்பது 3 மடங்கு அதிகரித்துள்ளதாக சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சென்னை ஐஐடியின் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறை சார்பில் பேராசிரியர்கள் வர்ஷினி நீதிமோகன், டாக்டர் பி.சிரிஷா, டாக்டர் கிரிஜா வைத்தியநாதன், பேராசிரியர் விஆர் முரளிதரன் ஆகியோரை உள்ளடக்கிய குழுவினர் தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கரில் 2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை மகப்பேறு குறித்தான ஆய்வில் ஈடுபட்டனர்.

இந்தியாவிலேயே மருத்துவ கட்டமைப்பில் சிறப்பாக இருக்கும் மாநிலங்கள் என்கிற அடிப்படையில் தமிழ்நாடும் பழங்குடியின மக்களும் மருத்துவ கட்டமைப்பும் இல்லாத மாநிலமாக விளங்கும் சத்தீஸ்கரும் ஆய்வுக் களமாக எடுத்துக்கொள்ளப்பட்டது. இரண்டு மாநிலங்களிலும் சேர்த்து சுமார் 2.5 லட்சம் தாய்மார்களிடம் மகப்பேறு குறித்தான ஆய்வு விவரங்கள் சிகிச்சை முறைகள் குறித்தான விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

5 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் அறுவை சிகிச்சை மகப்பேறுகள் பரவலாகி 17.2 சதவிகிதத்தில் இருந்து 21.5 சதவிகிதமாகஅதிகரித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை முறையில் மகப்பேறு நடந்ததன் எண்ணிக்கை 43.1 சதவிகிதத்தில் இருந்து 49.7 சதவிகிதமாக உயர்ந்துள்ளதுள்ளது தெரியவந்திருக்கிறது. குறைந்த எடையுள்ள பெண்களை விட அதிக எடை கொண்ட பெண்களுக்கு இருமடங்கு அதிகமாக அறுவை சிகிச்சை மகப்பேறுகள் நடக்கின்றன.

35-49 வயதுடைய பெண்கள் இரு மடங்கு அதிகமாக தங்கள் பிரசவங்களை அறுவை சிகிச்சை முறையில் நடைபெறவே விரும்புகின்றனர். 35-49 வயதுக்கு இடைப்பட்ட வயதுடையவர்கள் குழந்தை பெறுவது 11.1 சதவீதத்தில் இருந்து 10.9 சதவீதமாக குறைந்திருப்பதையும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஐஐடி ஆய்வு
அமெரிக்கா | புற்றுநோய் என நினைத்து கீமோதெரபி சிகிச்சை... இறுதியில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

சத்தீஸ்கரில் அறுவை சிகிச்சை பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனைகளை நாடும் பெண்கள் எண்ணிக்கை 10 மடங்கும், தமிழ்நாட்டில் 3 மடங்கும் அதிகரித்துள்ளது. மருத்துவ காரணங்களைத் தாண்டி நல்ல நேரம் பார்ப்பது, ஜோதிடத்தை பின்பற்றி குழந்தையை பெற்றெடுப்பது, கலாசார காரணங்கள் போன்றவற்றால் மகப்பேறு அறுவை சிகிச்சை மேற்கொள்வது உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சென்னை ஐஐடி ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com