மழைக்கால வெள்ளம் | சுகாதார பிரச்னைகள், தொற்றுநோய்களில் இருந்து தப்பிக்க என்ன செய்யவேண்டும்?

மழைக்காலத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்ன என்பது குறித்து விளக்குகிறார் மருத்துவர் கல்யாண சுந்தர பாரதி.
சென்னை மழை
சென்னை மழைகோப்புப்படம்

கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் தாண்டவம் ஆடிய மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. பல்வேறு இடங்களில் உணவு, மருந்து, அத்தியாசிய பொருட்கள் கூட இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை பாதிக்கப்பட்டனர். வீட்டில் உட்புறங்களில் சாக்கடை நீரும் புகுந்து மக்களை பெரும் அவதியில் ஆழ்த்தியது. ஒருசில இடங்களில் நீரில் இறந்த உயிரினங்கள்கூட (எலி, பாம்பு போன்றவை உட்பட) மிதந்துள்ளன. இப்படி பல இடங்களில் தேங்கிய நீரானது நோயை ஏற்படுத்தும் வண்ணம் அமைகிறது.

மருத்துவர் கல்யாண சுந்தர  பாரதி
மருத்துவர் கல்யாண சுந்தர பாரதிபுதிய தலைமுறை

இவற்றை கருத்தில்கொண்டு மழைக்காலத்தில் ஏற்படும் நீர் தேக்கத்தின் மூலம் உண்டாகும் பாதிப்புகள் என்னென்ன என்பது குறித்து விளக்குகிறார் மருத்துவர் கல்யாண சுந்தர பாரதி.

”வெள்ளத்தால் ஏற்படக்கூடிட பாதிப்புகளில், தேங்கிய தண்ணீரில் உருவாகும் கொசுக்கள் போன்றவற்றால் பரவக்கூடிய பாதிப்பு அதிகமாக உள்ளது.

குறிப்பாக மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சல் பாதிப்புகள் அதிகம் ஏற்படலாம். மேலும் ஈரமான ஆடைகளை தொடர்ந்து அணிந்தால் தோல் அழற்சி போன்றவை ஏற்படும்.

சுகாதாரமற்ற குடிநீர் பருகுவதால் வயிற்றுப் போக்கு போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே தண்ணீரை நன்றாக பருக வேண்டும். காய்ச்சி வடிகட்டிய நீரை பருக வேண்டும்.

குளோரின் மாத்திரைகள் மூலம் தண்ணீரை சுத்தப்படுத்தலாம். கொசுக்கடியிலிருந்து தற்காத்துக் கொள்ளும் முறையை பின்பற்ற நம்மை தற்காத்து கொள்ளலாம்”

இவற்றுடன், அரசுத்தரப்பில் மழை வெள்ள நீக்க நடவடிக்கைக்குப்பின் சுகாதார மையங்கள் அமைக்கப்பட்டு காய்ச்சல் - தொற்றுநோய்களால் பாதிக்கப்படுவோரை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இப்போது பல இடங்களில் நீர் வடிந்துவிட்டாலும், குப்பைகள் மலைபோல் ஆங்காங்கே உள்ளது. அதனாலும் நோய்ப்பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. ஆகவே அவற்றையும் விரைந்து அகற்ற கோரிக்கைகள் வலுக்கின்றன.

சென்னை மழை
சென்னை: சாலையில் மலைபோல் குவிந்த குப்பைகள்...!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com