இருபதுக்கு இரண்டு’ விதிpt
ஹெல்த்
நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்கிறீர்களா? ’இருபதுக்கு இரண்டு’ விதி உங்களுக்குதான்
’இருபதுக்கு இரண்டு’ விதி என்றால் என்ன? பார்க்கலாம்.
பணியிடத்திலோ வீட்டிலோ நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க வேண்டியிருப்பது பல வகையான உடல்நல பிரச்சினைகளுக்குக் காரணமாகிறது.
இதனைத் தவிர்க்க ’ இருபதுக்கு இரண்டு’ என்ற எளிய விதியைப் பின்பற்றலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். நீண்ட நேரம் அமர்ந்திருக்கும்போது ஒவ்வொரு இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை இரண்டு நிமிடங்கள் நடப்பது அல்லது கை, கால்களை நீட்டி மடக்குவது போன்ற எளிய உடற்பயிற்சிகளை செய்வதுதான் ’இருபதுக்கு இரண்டு’ விதி.
இவ்வாறு செய்வதன் மூலம் உணவு சாப்பிட்டதற்குப் பிறகு உடலில் சேரும் சர்க்கரையின் அளவு 25 விழுக்காடுவரை குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள். கண்கள் தொடங்கி கால்கள் வரைக்கும் அது நல்லது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.