அரிசி கழுவும் தணணீர்
அரிசி கழுவும் தணணீர்முகநூல்

தோல் பிரச்னை முதல் முடி பிரச்னை வரை... அரிசி கழுவும் தண்ணீரில் இவ்வளவு நன்மைகளா?

நாம் குப்பையில் போடும் பலவற்றில் கண்ணுக்கே தெரியாத பல நன்மைகள் மறைந்திருக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. அப்படி அரிசி கழுவும் தண்ணீரில் பல தாதுக்கள் உள்ளன. அவற்றை, இங்கே காணலாம்...
Published on

நாம் குப்பையில் போடும் பலவற்றில் கண்ணுக்கே தெரியாத பல நன்மைகள் மறைந்திருக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. அப்படி அரிசி கழுவும் தண்ணீரில் பல தாதுக்கள் உள்ளன. அதுமட்டுமல்ல.. பல அமினோ அமிலங்களும் நிறைந்து கிடக்கின்றன. அவற்றை, இங்கே காணலாம்...

அமினோ அமிலங்கள்

  • பி வைட்டமின்கள்

  • வைட்டமின் ஈ

  • கனிமங்கள்

  • ஆக்ஸிஜனேற்றிகள்

இப்படி தோல் பிரச்னை முதல் தலைமுடி உதிர்தல் வரை அனைத்திற்கும் இதன் மூலம் நல்லதொரு தீர்வு காணலாம் என்கின்றனர் மருத்துவர்கள். அதுமட்டுமல்லாது ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் அரிசி கழுவிய தண்ணீரானது பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்பனை கூட செய்யப்படுகிறது.

அரிசி கழுவும் தணணீர்
‘Split Tongue’ விபரீதம் தெரியாமல் இறங்கும் இளைஞர்கள்... மருத்துவர் தரும் எச்சரிக்கை!

அரசி கழுவும் நீரை உபயோகிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை, இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

சரும நலன்:

அரிசி கழுவு தண்ணீரை சருமத்திற்கு பயன்படுத்தினால், குளிர்காலத்தில் சருமத்தில் ஏற்படும் வறட்சியை போக்க உதவுகிறது. மேலும், வெளியிலில் நீண்ட நேரம் நிற்கும்போது தோல் சிவப்பாக மாறக்கூடும். இதனை, சரிசெய்யவும் அரிசி கழுவும் நீர் பயன்படுகிறது.

மேலும், வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்டுகள் அதிக அளவில் காணப்படும் அரிசி தண்ணீர் நமது சருமத்தில் ஏராளமான நன்மைகளை செய்யக்கூடிய திறன் கொண்டது.

அரிசி கழுவும் தணணீர்
உடலுறுப்பு தானம்: நாட்டிலேயே சிறந்து விளங்கும் தமிழ்நாடு

முடி பராமரிப்பு:

இதில் எஞ்சியிருக்கும் மாவுச்சத்து நீர், தலைமுடியை மிருதுவாகவும் பளபளப்பாகவும் வைத்திருப்பதோடு இயற்கையான கண்டிஷ்னராகவும் செயல்படுகிறது. அதனால்தான் நம்முடைய முன்னோர்கள் அரிசி கழுவிய நீரை குளிக்கும் நீரிலும் தலைக்கு தேய்க்கும் சீயக்காயிலும் கலந்து பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இதில், இருக்கும் அமினோ அமிலங்கள் சேதமடைந்த மயிர்க்கால்களை சரி செய்து முடி உதிர்வை குறைக்கிறது. மேலும், தலைமுடியின் சிதைவுகளை சரிசெய்து, தலைமுடியை மென்மையாக்கவும், பளபளப்பாக்கவும் உதவும். தலைமுடியை வலிமையானதாக மாற்றுகிறது. முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர அரிசி தண்ணீர் உதவுகிறது.

அரிசி கழுவும் தணணீர்
குறைவான தூக்கம், ஆனால் புத்துணர்ச்சி.. சரியானதா? நவீன ஆய்வுகள் சொல்வது என்ன? மருத்துவர் விளக்கம்!

செரிமானத்தில் முக்கிய பங்கு:

கடந்த 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின்படி, அரிசி கழுவிய நீரில் இருக்கும் மாவு சத்து ஒரு சில செரிமான பிரச்னைகளை தீர்ப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அரிசி கழுவும் தணணீர்
செர்லாக்கில் கூடுதல் சர்க்கரை? கேள்வி எழுப்பிய எம்.பி! மருத்துவர் சொல்லும் விளக்கம் என்ன?

நோய் எதிர்ப்பு சக்தி:

அரிசி நீரில் உள்ள வைட்டமின் B, இரும்புச்சத்து, ஜிங்க், மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நமது நோய் எதிர்ப்பு அமைப்பின் செயல்பாடுகளுக்கு பெரிதும் ஆதரவு தருவதாக 2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com