நிறமிகள்
நிறமிகள்முகநூல்

ஜிலேபி, க்ரில் சிக்கனில் சேர்க்கப்படும் நிறமிகள்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

சமீபத்தில் அமெரிக்காவில், உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் 8 நிறமிகள் தடைசெய்யப்பட்டன.
Published on

ஜிலேபி, சர்பத், மிட்டாய், க்ரில் சிக்கன் உட்பட உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் நிறமிகளால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாகவும், இத்தகைய ஆபத்தான நிறமிகளை அரசு உடனடியாக தடைசெய்ய வேண்டும் என்றும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் அமெரிக்காவில், உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் 8 நிறமிகள் தடைசெய்யப்பட்டன. இந்நிலையில், இந்தியாவிலும் இத்தகைய குரல்கள் வலுவாக எழுத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, சிவப்பு 3, சிவப்பு 40, மஞ்சள் 5 ஆகிய வகை நிறமிகளை உடனடியாக தடைசெய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

நிறமிகள்
மையோனஸ் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து.. ஓராண்டு தடை விதித்த தமிழக அரசு! என்ன காரணம்?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com