மையோனஸ் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து.. ஓராண்டு தடை விதித்த தமிழக அரசு! என்ன காரணம்?
மையோனஸ் என்ற உணவு பொருள் பத்தாண்டுகளுக்கும் மேலாக சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் எளிதாக கிடைக்கிறது. சிக்கன் தந்தூரி, மோமோஸ், சாண்ட்வெஜ், பிரட் ஆம்லேட் என பல உணவு வகைகளுடன் மையோனஸ் சேர்த்து சாப்பிடுகிறார்கள்.
சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பலரும் விரும்பி சாப்பிடும் மையோனஸை ஓராண்டுக்கு உற்பத்தி செய்யவும், பதப்படுத்தி வைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.
பச்சை முட்டையுடன் எண்ணெய் கலந்து தயாரிக்கப்படும்
மையோனசில் அதிக அளவு கொழுப்புச்சத்து இருக்கும் நிலையில், இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் வயிற்று வலி, காய்ச்சல் மற்றும் உணவு தொற்று ஏற்பட அதிகளவு வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஓராண்டு தடை.. என்ன ஆபத்து?
மையோனசை வீட்டில் தயாரிப்பதால் ஆபத்து இல்லை எனக் கூறுவது நல்லதல்ல என்றும், முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். குழந்தைகளுக்கு உடல் எடை கூடும் ஆபத்து இருப்பதால், மாற்று உணவுகள் எடுக்க பழகிக் கொள்ள வேண்டும் எனக் கூறுகின்றனர்.
ஒட்டல்களில் மையோனஸ் பதப்படுத்தி வைப்பதால் மற்ற உணவு
பொருட்களுடன் சேர்த்து சாப்பிடுவதால் எளிதில் உடல் பாதிப்பு ஏற்படும் என்கின்றனர். இதில் விழிப்புணர்வு ஒருபுறம் இருந்தாலும் தமிழக அரசு எடுத்திருக்கும் முயற்சி வரவேற்க
வேண்டியது என்கின்றனர்.
மையோனசுக்கு தடை விதிக்கப்பட்டாலும் இந்த தடை முறையாக அமல்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டியதும்
அவசியம்.