\
Eggs and Child Nutrition: Key Health Benefits Explained by Experts
பள்ளி மதிய உணவுத் திட்டம்Pt web

மதிய உணவு திட்டத்தில் முட்டை அவசியமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

மேற்கு வங்கத்தில், பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்தில் முட்டை நீக்கப்பட்டது சர்ச்சையான நிலையில், முட்டையில் உள்ள ஊட்டச்சத்துகள் தொடர்பாக நிபுணர்கள் தெரிவிப்பது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
Published on

பள்ளிக் குழந்தைகளின் மதிய உணவுத் திட்டத்தில் முட்டையைச் சேர்ப்பது தொடர்பாகப் பல்வேறு மாநிலங்களில் கலாச்சாரம் மற்றும் கொள்கை ரீதியான விவாதங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து மருத்துவம் மற்றும் அறிவியல் ரீதியான முக்கியத் தகவல்கள் மற்றும் விளக்கங்களை ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மனித உடலின் தசை வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஹார்மோன் செயல்பாடுகளுக்குத் தேவையான 20 வகையான அமினோ அமிலங்கள் தேவை. இந்த சூழலில் உடலால் தானாக உற்பத்தி செய்ய முடியாத 9 அத்தியாவசிய அமினோ அமிலங்களை சரியான விகிதத்தில் கொண்டுள்ள ஒரே இயற்கை உணவு முட்டைதான். இதனாலேயே ஊட்டச்சத்து அறிவியலில் முட்டை ’தங்கத் தரம்’ வாய்ந்த புரத உணவாகக் கருதப்படுகிறது.

கோழி - முட்டை
கோழி - முட்டைPt web

மேலும், குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு இன்றியமையாத ’ கோலின்’ சத்து, சோயாபீனை விட 7 மடங்கும், பசும்பாலை விட 20 மடங்கும் முட்டையில் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், முட்டை சாப்பிடாத சைவ உணவுப் பிரியர்களுக்கும் சோயாபீன், பனீர், பால் மற்றும் பருப்பு வகைகள் போன்ற மாற்று வழிகள் உள்ளன. உதாரணமாக, 100 கிராம் வேகவைத்த முட்டையில் 13.43 கிராம் புரதம் உள்ள நிலையில், சோயாபீனில் 13.23 கிராம் புரதம் உள்ளது. இருப்பினும், தாவரப் புரதங்களை உடல் முழுமையாக உறிஞ்சுவதற்குப் பல வகையான உணவுகளைக் கலந்து சாப்பிட வேண்டியது அவசியம்.

எனவே, வளரும் குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டத்தில் முட்டை ஒரு எளிய மற்றும் முழுமையான ஊட்டச்சத்துத் தீர்வாகத் திகழ்வதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு அன்றைய நாளின் மிக முக்கியமான ஊட்டச்சத்து ஆதாரமாக இந்த மதிய உணவு மட்டுமே விளங்குவதால், இதில் உணர்ச்சிபூர்வமான முடிவுகளைத் தவிர்த்து அறிவியல் சான்றுகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

Eggs and Child Nutrition: Key Health Benefits Explained by Experts
நீண்ட கால அழற்சி உடலைப் பாதிக்கும் பேராபத்து.. க்ரானிக் இன்ஃப்ளமேஷன் தடுப்பது எப்படி?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com