நீண்ட கால அழற்சி உடலைப் பாதிக்கும் பேராபத்து.. க்ரானிக் இன்ஃப்ளமேஷன் தடுப்பது எப்படி?
நமது உடலில் காயம், கிருமி தொற்று ஏற்பட்டால் அதை எதிர்த்து குணப்படுத்த நோய் எதிர்ப்புச்சக்தி மண்டலம் செயல்படும். இந்த இயல்பான எதிர்வினையையே அழற்சி என்கிறோம்.. பொதுவாக இவ்வகை அழற்சி சில நாட்களில் குறைந்து உடல் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.. ஆனால் ஒரு சிலருக்கு இந்த அழற்சி மாதங்கள் அல்லது ஆண்டுகள் நீடித்தால் அது நீண்டகால அழற்சி அதாவது க்ரானிக் இன்ஃப்ளமேஷன் ஆக மாறுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.
க்ரானிக் இன்ஃப்லமேஷன் வருவதற்கு மோசமான உணவுப் பழக்கவழக்கங்கள் , உடற்பயிற்சி இல்லாமை, மது மற்றும் புகைப்பழக்கம் மற்றும் அதிக சர்க்கரை, பதப்படுத்தபட்ட உணவை உட்கொள்வது முக்கியம் காரணம் எனவும் க்ரானிக் இன்ஃப்லமேஷன் வெளிப்படையான அறிகுறிகள் மட்டுமின்றி , உள்ளுருப்புகளை பாதித்து இதய நோய் உள்ளிட்ட நோய்கள் உருவாக வித்திடும் எனவும் கூறுகிறார் மருத்துவர் மெலிசா சத்யன்.
க்ரானிக் இன்ஃப்லமேஷன் வராமல் தங்களை தற்காத்து கொள்ள, சரிவிகித உணவும் உடற்பயிற்சியும் அவசியம், அதிக புரதம், நல்ல கொழுப்பு சத்து சாப்பிட வேண்டும், பழங்கள், நட்ஸ் வகைகள் சாப்பிடுதல் போன்ற சில வாழ்க்கைமுறை மாற்றங்கள் அவசியம் எனவும் கூறுகிறார் மருத்துவர் மெலிசா சத்யன்..
மொத்தத்தில் க்ரானிக் இன்ஃப்லமேஷன் என்பது ஒரு தனி நோய் அல்ல .. உடலில் சமநிலையின்மை இருப்பதை உணர்த்தும் ஒரு எச்சரிக்கை மணி. ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து வாழ்க்கைமுறையில் மாற்றங்களை மேற்கொண்டால் ஆரோக்கியமான வாழ்வை வாழலாம்.

