\
diabetes alternative foods
diabetes alternative foodspt web

சாப்பிட்டபின் சர்க்கரை அளவு உயர்வதால் அச்சமா? மருத்துவர்களின் அறிவுரை என்ன?

உணவு சாப்பிட்டதும் ரத்தச் சர்க்கரை அளவு உயர்ந்தால் பயப்பட வேண்டுமா?, ஒவ்வொரு ரத்தச் சர்க்கரை உயர்வும் ஆபத்தானதா என்பது குறித்து சமூகவலைதளங்களில் பரவிவரும் குழப்பங்களுக்கு மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
Published on

பொதுவாக உணவு சாப்பிட்ட பிறகு குளுக்கோஸ் அளவு உயர்வது, மனித உடலின் இயல்பான செயல்முறை. குறிப்பாக கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிட்டால், குளுக்கோஸ் அதிகரித்து அதை கட்டுப்படுத்த இன்சுலின் சுரக்கிறது. இதனால் சில மணி நேரத்தில் சர்க்கரை அளவு மீண்டும் இயல்புக்கு திரும்பிவிடும். இது ஆரோக்கியமான உடலின் செயல்பாடு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் ஒவ்வொரு சிறிய அளவு ரத்தச் சர்க்கரை உயர்வுக்கும் பயப்பட தேவையில்லை என்று மருத்துவர்கள் அறிவுறுத்திகின்றனர்.

Diabetes
DiabetesFacebook

அதேநேரத்தில், அடிக்கடி மிக அதிக அளவில் சர்க்கரை உயர்வது அல்லது நீண்ட நேரம் குறையாமல் இருப்பது என்பது, இன்சுலின் எதிர்ப்பு அல்லது நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம் என்றும், தினசரி வாழ்க்கையில், தொடர்ந்து சர்க்கரை அளவு அதிகரித்துக் காணப்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் நார்ச்சத்து, புரதம், நல்ல கொழுப்பு கொண்ட சமச்சீர் உணவு உட்கொள்வதும், சாப்பிட்ட பிறகு 10 முதல் 15 நிமிடம் நடைப்பயிற்சி, போதுமான தூக்கம், மற்றும் மன அழுத்தக் கட்டுப்பாடும் ரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

diabetes alternative foods
87% இந்தியர்களுக்கு ரத்தத்தில் கொழுப்பு.. ஐசிஎம்ஆர் ஆய்வு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com