நீரிழிவு காரணமாக புற்றுநோய் செல்கள் உருவாகலாம்... ஐசிஎம்ஆர் ஆய்வறிக்கை; என்ன செய்தால் தவிர்க்கலாம்?

நீரிழிவு நோயாளிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டி ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது. அதிகப்படியான கொழுப்பு மற்றும் நீரிழிவு காரணமாக புற்றுநோய் செல்கள் உருவாகத் தொடங்குகின்றது என்பது ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மருத்துவர் பிரியங்கா
மருத்துவர் பிரியங்காpt web

ஐசிஎம்ஆர் புதிய ஆய்வறிக்கை

நீரிழிவு நோயின் தலைமையிடம் இந்தியா என்று கூறப்படும் நிலையில், தற்போது நீரிழிவு நோயாளிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டி ஆய்வறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. அதிகப்படியான கொழுப்பு மற்றும் நீரிழிவு காரணமாக புற்றுநோய் செல்கள் உருவாகத் தொடங்குகின்றது என்பது ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் நீரிழிவு நோயின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. நீரிழிவு நோய் சிறுநீரகம் மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. அத்துடன், தற்போது நீரிழிவு நோயால் புற்றுநோய் வருவதற்கும் அதிக வாய்ப்புள்ளது என சமீபத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மருத்துவர் பிரியங்கா
டெல்லி: பிறந்தநாள் அன்று காதலி அழைத்ததாக சென்ற மாணவர் அடித்துக் கொலை... நடந்தது என்ன?

நீரிழிவு நோய் காரணமாக புற்றுநோய் செல்கள் உருவாகலாம்

டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கும், கருப்பை புற்றுநோய் நோயாளிகளின் அதிகரிப்புக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வொன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வின்படி, அதிகப்படியான கொழுப்பு மற்றும் நீரிழிவு காரணமாக உடலில் ஏற்படும் அழற்சியின் காரணமாக புற்றுநோய் செல்கள் உருவாகத் தொடங்குகின்றது என தெரியவந்துள்ளது. நீரிழிவு நோயாளிகள் தங்கள் நீரிழிவை கட்டுக்குள் வைப்பது மிகவும் அவசியம் என்று வலியுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.

இதுதொடர்பாக மருத்துவர் பிரியங்கா கூறுகையில், “டைப்2 நீரிழிவு நோயாளிகளுக்கு, உடம்பில் அதிகளவு இன்சுலின் இருந்தாலும், அதன் வேலையை அதனால் சரியாக செய்ய இயலாது. எனவே இன்சுலின் அதிகமாக இருப்பதால் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனை அதிகப்படுத்தும். இந்த ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன், கர்பப்பை செல்களில் அதன் வளர்ச்சியை அதிகப்படுத்தும்.

மருத்துவர் பிரியங்கா
ஹைதராபாத் பல்கலைக்கழகம்: சட்னியில் நீச்சலடித்த எலி... வீடியோ வைரல்..

என்ன செய்தால் தடுக்கலாம்?

நீரிழிவு நோயின் பொதுவான காரணி என்பது உடல்பருமன். கொழுப்பை உருவாக்கும் செல்கள் அதிகமாகும். இந்த வகையான செல்களிலும் ஈஸ்ட்ரோஜன் அதிகமாகும். அதுமட்டுமில்லாமல் அனைத்து வகையான புற்றுநோய் செல்களின் வளர்ச்சி வீதமும் அதிகரிக்கும். நீரிழிவு நோய் வந்துவிட்டதென்றால் முதலில் செய்ய வேண்டியது அதைக் கட்டுப்படுத்துவது. அடுத்தது ஆரோக்கியமான உடல் எடையுடன் இருப்பதை தொடர வேண்டும். நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்க தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். சரியான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக அளவை கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்” எனத் தெரித்தார்.

புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற கெட்ட பழக்கவழக்கங்களை கை விட வேண்டும் என்று கூறும் மருத்துவர்கள் தினசரி 45 முதல் 60 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்கிறார்கள். நொறுக்குத் தீனிகள், மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதும் மருத்துவர்களின் அறிவுறுத்தலாக இருக்கிறது. இதன் மூலம் நீரிழிவை கட்டுப்பாட்டில் வைப்பதோடு, அதன் நீட்சியாக புற்றுநோய் உருவாவதை தடுக்க முடியும் என்கிறார்கள்.

மருத்துவர் பிரியங்கா
பெங்களூரு: பள்ளி வாகனங்களுக்கு நடத்தப்பட்ட அதிரடி சோதனை; 23 ஓட்டுநர்கள் மது அருந்தி இருந்தது அம்பலம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com