தமிழக்கத்தில் வேகமாக அதிகரிக்கும் டெங்கு... ஒரே வாரத்தில் 227 பேருக்கு பாதிப்பு!

சென்னை மட்டுமல்லாது செங்கல்பட்டு, ஈரோடு, தென்காசி, காஞ்சிபுரம், திருச்சி, மதுரை உள்ளிட்ட மாநிலங்களிலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
டெங்கு
டெங்கு PT

தமிழ்நாட்டில் ஒரே வாரத்தில் 227 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாநிலம் முழுவதும் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

டெங்கு
டெங்கு கொசுவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை; காரணம் என்ன?-விஞ்ஞானி மாரியப்பன் விளக்கம்

ஒருநாளில் 30 முதல் 35 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்படுவதாகவும், குறிப்பாக சென்னையில் காய்ச்சல் பாதிப்பு உடையவர்களில் 5 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதியாவதாகவும் சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

சென்னை மட்டுமல்லாது செங்கல்பட்டு, ஈரோடு, தென்காசி, காஞ்சிபுரம், திருச்சி, மதுரை உள்ளிட்ட மாநிலங்களிலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் 610 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டெங்கு காய்ச்சல்
டெங்கு காய்ச்சல் புதிய தலைமுறை

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த வரும் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த மக்கள் நல்வாழ்வுத்துறை திட்டமிட்டுள்ளது. எனினும் டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள், உடனடியாக மருத்துவமனையை அணுக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com