கண்களுக்கு அடியில் கருவளையங்கள்.. கல்லீரல் ஆரோக்கியம் முக்கியம்., மருத்துவர்கள் கூறுவது என்ன?
கண் அடியில் தோன்றும் கருவளையங்களுக்குத் தூக்கமின்மை, அதிக நேரம் திரை பார்ப்பது மட்டுமே காரணமல்ல; நமது கல்லீரல் ஆரோக்கியமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
கல்லீரல் சரியாகச் செயல்படாதபோது உடலில் நச்சுக்கள் தங்கி, சருமத்தைப் பொலிவிழக்கச் செய்து கருவளையங்களை உண்டாக்கும். இதனுடன் செரிமானக் கோளாறு, மஞ்சள் கலந்த தோல் நிறம் அல்லது உடல் சோர்வு இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மரபணு, நீர்ச்சத்து குறைபாடு, ரத்த சோகை மற்றும் வயது முதிர்வால் ஏற்படும் கொலாஜன் குறைபாடு காரணமாகவும் கருவளையங்கள் ஏற்படும் என்றும் குறிப்பிடுகின்றனர். கருவளையம் ஏற்படுவதைத் தவிர்க்க ஆழ்ந்த உறக்கம், மிக அதிக தண்ணீர் குடிப்பது அவசியம் என்றும் மதுப்பழக்கங்களை கைவிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். கருவளையங்களைப் போக்க கிரீம்கள் பலன் தராதபோது, ரத்தப் பரிசோதனை மூலம் கல்லீரல் செயல்பாட்டை உறுதி செய்து கொள்வது நல்லது என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

