teaweb
ஹெல்த்
தேநீர் அருந்துபவர்கள் கவனத்திற்கு! தேநீரை நிறுத்திய 90 நாட்கள் உடலில் என்ன நிகழும்?
தேநீர் குடிப்பதை திடீரென நிறுத்தினால் முதல் இரண்டு வாரங்கள் தலைவலி, சோர்வு, தூக்கக் கலக்கம், தேநீர் மீதான ஆசை போன்ற விலகல் அறிகுறிகள் தோன்றும் என நீரிழிவு நிபுணர் விளக்குகிறார்
தேநீர் குடிப்பதை நிறுத்திய 90 நாட்களில் உடலில் பல மாற்றங்கள் நிகழும் என நீரிழிவு நோய் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். தேநீர் அருந்துவதை நிறுத்திய முதல் 2 வாரங்களுக்கு தலைவலி, சோர்வு, தூக்கக் கலக்கம் மற்றும் தேநீர் குடிக்க வேண்டும் என்கிற ஆசை உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்கும் என தெரிவித்தார்.
model imagemeta ai
3ஆவது வாரங்களில் இவை குறைந்து, உடல் மெதுவாக அதற்கு பழகத் தொடங்கும், தூக்கம் மேம்படும், மனஅமைதி அதிகரிக்கும், காலை நேர சோர்வு குறையும் என்கிறார் மருத்துவர். 2 மாதங்களில் உடலின் தினசரி செயற்பாடு சீரானதாக இருக்கும், 90 நாட்கள் முடிவில், உடல் தேநீர் இல்லாத புதிய இயல்புக்கு முழுமையாக பழகி விடும். மனஅழுத்தம் குறைவாகவும், சிலருக்கு செரிமானம் மற்றும் எடை கட்டுப்பாடும் மேம்படலாம் என மருத்துவர் தெரிவிக்கிறார்.

