தூக்கமின்மைப் பாதிப்பு: சென்னை முதலிடம்.. வெப்ப இரவுகளால் தூக்கத்தை இழக்கும் இந்தியர்கள்!!
புவி வெப்பமாதல் காரணமாக இந்தியாவில் இரவு நேர வெப்பநிலை அதிகரித்துவரும் நிலையில், இந்தியர்கள் ஆண்டுக்குச் சராசரியாக 90 மணி நேரத்துக்கும் மேலாகத் தங்களின் தூக்கத்தை இழப்பதாக 'கிளைமேட் சென்ட்ரல்' அமைப்பின் புதிய ஆய்வு எச்சரித்துள்ளது. மாநிலங்கள், ஒன்றியப் பிரதேசங்களில் புதுச்சேரி 92 மணி நேர தூக்க இழப்புடன் முதலிடத்திலும், ஆந்திரா 88.6 மணி நேரம் மற்றும் கேரளம் 88.3 மணி நேர தூக்க இழப்புடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
பெருநகரங்களைப் பொறுத்தவரை, சென்னை ஆண்டுக்கு 93 மணி நேரத் தூக்க இழப்புடன் இந்தியாவின் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்த நகரமாக மாறியுள்ளது. மும்பை 84 மணி நேரத் தூக்க இழப்புடன் இரண்டாவது இடத்திலும் கொல்கத்தா 80 மணி நேரத் தூக்க இழப்புடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. காலநிலை மாற்றத்தால் மட்டும் தமிழ்நாட்டில் ஒருவருக்குச் சராசரியாக 7.9 மணி நேரத் தூக்கம் கூடுதலாகப் பறிபோவதாகவும், இது மனிதர்களின் நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் மனநலத்தைப் பாதிக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

