\
Cultural Activities May Slow Ageing, Finds New Study
Slow AgeingX

நம்மை இளமையாக வைத்திருக்க உதவும் புதிய டிப்ஸ்.. உடற்பயிற்சிக்கு இணையான பயன்கள்!!

படம் பார்ப்பது , இசை கச்சேரிகளுக்கு செல்வது, மியுசியம் சுற்றிப்பார்ப்பது... இவையெல்லாம், நம்மை இளமையாக வைத்திருக்க உதவும் என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
Published on

வயது அதிகரிப்பது இயற்கையான ஒன்று ..ஆனால் உடல் எந்த வேகத்தில் முதுமை அடைகிறது என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.. இதைத்தான் விஞ்ஞானிகள் ஃபிசியாலஜிக்கள் ஏஜ் என்று அழைக்கின்றனர். இது பிறந்த தேதி அடிப்படையிலான வயதல்ல.. உடல் எவ்வளவு ஆரோக்கியமாக செயல்படுகிறது என்பதை காட்டும் அளவுகோல்.. இங்கிலாந்தில் 50வயதுக்கு மேற்பட்ட சுமார் 2000பேரின் தகவல்களை பல ஆண்டுகளாக ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.

அதில் அவர்கள் எவ்வளவு அடிக்கடி சினிமா, நாடகம், இசை கச்சேரி, மியுசியம் அல்லது கண்காட்சி போன்ற கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள் என்பதை ஆய்வு செய்தனர். அதேநேரம் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், உடல் எடை , நடை வேகம்,. கைப்பிடி வலிமை உள்ளிட்ட 10 உடல்நல குறியீடுகளும் பரிசோதிக்கப்பட்டன. இதன் முடிவில், தொடர்ச்சியாக பங்கேற்றவர்களின் உடல், பங்கேற்காதவர்களை விட சராசரியாக 3ஆண்டுகள் இளமையாக இருந்தது என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்ட்டுள்ளது. சில நேரங்களில் இதன் தாக்கம் தொடர்ச்சியான உடற்பயிற்சியால் கிடைக்கும் நன்மைக்கு இணையாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

அதன்படி வெளியே செல்வதால் சமூக உறவு அதிகரித்தல், மன அழுத்தம் குறைவு, மூளை தொடர்ந்து புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளுதல், உடல் அசைவு உண்டாகும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.... ஆகவே ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால், உடற்பயிற்சி மட்டுமில்ல அதுனுடன் சேர்த்து நல்ல படம், சுற்றுலா, இசை கச்சேரி ஆகியவை உங்கள் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரக்கூடும்.

Cultural Activities May Slow Ageing, Finds New Study
கொலஸ்ட்ரால் மாத்திரைகள்.. தசைப் பாதிப்பை ஏற்படுத்துகிறதா?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com