திங்கட்கிழமை சீரியஸான ஹார்ட் அட்டாக் வர சான்ஸ் அதிகமாம்.. நிபுணர்கள் சொல்லும் காரணம் இதுதான்!
ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுவது மாதம், நாட்கள் மற்றும் நேரத்தைப் பொறுத்து மாறுபடும் என்று சொன்னால் நம்பமுடிகிறதா.. அப்படி எந்த நாளில் மாரடைப்பு வரும் அரிய விரும்புகிறீர்களா... தற்போது பார்க்கலாம்..
அப்பாடா... வீக்கெண்டு முடிஞ்சுதா திங்கட்கிழமையாச்சேன்னு கவலைப்படுவோம்ல? ஆனா, இந்த திங்கட்கிழமை வெறும் ஆபீஸ் மூட்ஸ் பாயிலர் மட்டும் இல்லையாம், நம்ம ஹார்ட்டுக்கும் ஒரு பெரிய டெஸ்டிங் டே-வாம்.. டாக்டர்ஸ் சொல்றது என்னன்னா, இந்த மண்டேலதான் சீரியஸான ஹார்ட்அட்டாக் வர சான்ஸ் ரொம்ப ஜாஸ்தியாம்.. சும்மா சொல்றாங்கன்னு நினைச்சீங்கன்னா.. அது தான் இல்ல..நெறய ரிசர்ச் பண்ணிதான் இத சொல்லியிருக்காங்க.. மத்த நாள்லாம் இருக்க, ஏன் இந்த திங்கட்கிழமை மட்டும் ஹார்ட்டுக்கு இவ்வளவு வேலையான்னு கேட்குறீங்களா? அதுக்கு பின்னாடி சில செம்ம ஜாலியான, ஆனா சீரியஸான காரணங்கள் இருக்கு.
வீக்கெண்ட்ல ராத்திரி லேட்டா தூங்கி, காலையில லேட்டா எழுந்திருப்போம். திங்கட்கிழமை காலைல "டங் டங்"னு அலாரம் அடிச்சு, "ஏழு மணிக்கு ஆபீஸ் கிளம்புன்னு சொல்றப்போ, பாடிக்ளாக்குக்கு பயங்கர குழப்பம்.. இந்த குழப்பம் ஹார்மோன்ஸ்ல மாற்றம் பண்ணி, ஹார்ட் அட்டாக்குக்கு ரூட்போட்டுருமாம்.. மண்டே ஆயிடுச்சே...திரும்பவும் ஆபீஸ் போணுமேன்னு ஒருடென்ஷன் வரும்ல? அந்த டென்ஷன் சும்மா இல்லாம, ரத்த அழுத்தத்தை ஏத்தி, ஹார்ட்டுக்கு ஓவர்லோடு குடுக்குமாம்... இது மட்டும் இல்லைங்க.. வார இறுதின்னா ஜாலிதான்ன்னு ஃபுல்லா பார்ட்டி, பிரியாணி, பர்கர்னு கொண்டாடுவோம்...
அதெல்லாம் சேர்ந்து, உடம்புல கெட்டகொழுப்பை ஏத்தி, பிளட் பிரஷரை அதிகமாக்கி, திங்கட்கிழமை காலையில ஹார்ட்டுக்கு ஒரு பூகம்பத்தையே உருவாக்குமாம்.. இந்த திங்கட்கிழமை மட்டுமில்லாம, டிசம்பர் மாசம் கடைசி வாரமும் ஹார்ட் அட்டாக் ரிஸ்க் ஜாஸ்தியாம். நியூ இயர்,கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்னு இருக்கறதால, தூக்கம் கலையறது,கண்டதை சாப்பிடுறதுன்னு எல்லாம் ஹார்ட்டுக்கு எக்ஸ்ட்ரா லோடு குடுக்கும்னு டாக்டர்ஸ் சொல்றாங்க..
சரி.. இந்த திங்ககிழமையை தடுக்கமுடியாது.. அப்போ.. ஹார்ட் அட்டக்வராம தடுக்கறது எப்படிப்பானு நீங்க நினைக்கிறது புரியுது.. அதையும் டாக்டர்ஸ் தெளிவா சொல்லியிருக்காங்க.. சும்மா வாக்கிங், இல்ல யோகா, ஜிம்னு ஏதாவது ஒன்னுபண்ணுங்க. பாடி ஆக்டிவா இருந்தா ஹார்ட் ஹாப்பியா இருக்கும். திங்ககிழமை எப்போவும் வரும்தான்.. ஆனா நம்ம LIFE STYLE -ல CHANGES கொண்டு வந்தாலே ஹார்ட்டை ஆரோக்கியமாக வச்சிக்கலாம்..