மகாராஷ்டிரா
மகாராஷ்டிராமுகநூல்

மகாராஷ்டிரா | ‘கருவில் கரு’ - கண்டறிந்த மருத்துவர்களுக்கு காத்திருந்த ஆச்சரியம்!

மகாராஷ்டிராவில் கர்ப்பிணியின் வயிற்றுக்குள் இருக்கும் கருவில் மற்றொரு கரு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Published on

மகாராஷ்டிராவில் கர்ப்பிணியின் வயிற்றுக்குள் இருக்கும் கருவில் மற்றொரு கரு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, 32 வயதான கர்ப்பிணிக்கு சோனோகிராபி செய்து பார்க்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணியின் ஸ்கேன் ரிப்போர்ட்
கர்ப்பிணியின் ஸ்கேன் ரிப்போர்ட்

அப்போது ஸ்கேனில், கர்ப்பிணியின் கருவில் இருந்த கருவிற்குள், மற்றொரு கரு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், ஆச்சரியமடைந்த மருத்துவர், இதை மீண்டுமொருமுறை உறுதிசெய்ய உடனடியாக வேறு மருத்துவர்களிடத்தில் ஸ்கேனை காண்பித்துள்ளார்.

மகாராஷ்டிரா
உ.பி | இப்படியொரு வசதியா..! பெண்களின் பாதுகாப்புக்காக பள்ளி மாணவர்கள் உருவாக்கிய ’SOS’ காலணி!

இதுகுறித்து கர்ப்பிணிக்கு சிகிச்சையளித்த மகப்பேறு மருத்துவர் பிரசாத் அகர்வால், கூறுகையில், “இதை பார்த்ததும் ஆரம்பத்தில் நான் ஆச்சரியமடைந்தேன். பிறகு, மீண்டும் அந்த ஸ்கேனை உற்று நோக்கினேன். அப்போதுதான், கருவில் உள்ள இன்னொரு கரு வளர்ச்சியடையாமல் இருக்கிறது என்று தெரிந்தது. பிறகு இரண்டு மருத்துவர்களிடத்தில் இதை காண்பித்து உறுதி செய்துகொண்டேன்” என்றுள்ளார்.

இதுகுறித்து தெரிவித்துள்ள மருத்துவர்கள், இது மிகவும் அரிதானது எனவும், உலகிலேயே இதுவரை 200 சம்பங்கள்தான் இதுபோன்று பதிவாகியுள்ளதாகவும், அதில், இந்தியாவில் 15 - 20 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

9 ஆவது மாதம் வரை அந்தப் பெண்ணின், முந்தைய ஸ்கேன்களில் இதுகுறித்து எதுவும் தென்படாத நிலையில், இந்த ஸ்கேனில்தான் இவ்விஷயம் கண்டறியப்பட்டுள்ளது..

தொடர்ந்து கருவுக்குள் இருக்கும் கருவை என்ன செய்வது என்பது குறித்து தாயிடம் தகுந்த ஆலோசனை செய்த பின்னர் முடிவெடுக்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் மருத்துவ உலகில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com