மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி நட்டா
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி நட்டாPt web

புற்றுநோய் பாதிப்பில் தமிழ்நாடு முதலிடம்., மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிக்கை!

மத்திய சுகாதார அமைச்சகம் மக்களவையில் வெளியிட்ட தகவலின்படி, 2024ஆம் ஆண்டில் தமிழகத்தில் 98,386 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இந்திய அளவில் 2024இல் 15.33 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் அதிக எண்ணிக்கையிலான புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதுகுறித்த தகவல்கள் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் மக்களவையில் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசியப் புற்றுநோய் பதிவேட்டுத் திட்டத்தின் மதிப்பீடுகளின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பதிவான புதிய புற்றுநோய் பாதிப்புகளின் விவரம் மற்றும் ஒட்டுமொத்த இந்திய பாதிப்பு நிலை பற்றி பார்க்கலாம்.

புற்றுநோய் பாதிப்பு விவரம்!

cancer cases increasing in india
புற்றுநோய்pt web

2022 ஆம் ஆண்டில் இந்திய அளவில் 14,61,427 புற்றுநோய் பாதிப்புகள் பதிவான நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 93,536 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. 2023 ஆம் ஆண்டில் இந்திய அளவில் 14,96,972 ஆகவும் தமிழ்நாட்டில் மட்டும் 95,944 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. 2024 ஆம் ஆண்டில் இந்திய அளவில் 15,33,055 ஆக இருந்த புற்று நோய் பாதிப்பு, தமிழ்நாட்டில் 98,386 ஆக இருந்திருக்கிறது. அதன்படி, தமிழ்நாடு 2024 ஆம் ஆண்டில் சுமார் 98,386 புதிய பாதிப்புகளுடன், நாட்டில் அதிக பாதிப்புகளைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி நட்டா
சுடும் வார்த்தைகள்.. கற்றோர் நிறைந்த தமிழ் சமூகத்தில் இவ்வளவு பிற்போக்கா?

புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பதற்கான காரணங்கள்.!

புற்றுநோய் பாதிப்புகள் அதிகரிப்பதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், சில முக்கிய காரணங்களை அடையாளம் கண்டுள்ளது. அதன்படி, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், புகையிலை மற்றும் மது அருந்துதல், போதுமான உடல் செயல்பாடுகள் இல்லாதது, அதிக அளவிலான கொழுப்பை உணவில் சேர்த்துக் கொள்ளுதல், போன்றவற்றை காரணமாக கூறுகிறது.

புற்று நோய்க்கு எதிரான சுகாதாரத்துறையின் நடவடிக்கைகள்.!

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்x

புற்றுநோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான திட்டங்கள் மத்திய அரசு, தேசியத் திட்டம் மூலம் நாடு முழுவதும், குறிப்பாகக் கிராமப்புறங்களில், புற்றுநோய் சிகிச்சை மற்றும் தடுப்பு வசதிகளை மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

தேசிய தொற்றுநோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் , மாநில புற்றுநோய் நிறுவனங்கள் மற்றும் மூன்றாம் நிலைப் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்க மாநிலங்களுக்கு ஆதரவு வழங்கப்படுகிறது.

தேசிய தொற்றுநோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் நாடு முழுவதும் 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு உலகளாவிய ஸ்கிரீனிங் செய்வதற்கான பிரச்சாரத்தை சுகாதார அமைச்சகம் மேற்கொண்டது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி நட்டா
பீகார் | தாய்ப்பாலில் யுரேனியமா..? குழந்தைகளுக்கு புற்றுநோய் வருமா? மருத்துவர்கள் எச்சரிக்கை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com