செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை பக்கவாதத்தை ஏற்படுத்துமா?

செயற்கை கருத்தரித்தல் செய்து கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன, இந்த சிகிச்சையை யார் செய்யலாம், செய்யக்கூடாது என்பது பற்றி சொல்கிறார் செயற்கை கருத்தறித்தல் மருத்துவர் அருணா அசோக்.
செயற்கை கருத்தரித்தல்
செயற்கை கருத்தரித்தல்முகநூல்

ஜெர்னல் ஆஃப் அமெரிக்கன் மெடிக்கல் அசோஷியேஷன் என்ற ஆய்வு நிறுவனம், சுமார் 3.1 கோடி பெண்களிடையே 2010- 2018 க்கு வரையிலான காலகட்டத்தில், ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

அந்த ஆய்வறிக்கையில் தெரியவந்த சில விஷயங்கள்...

- 2.8 லட்சம் பேர் குழந்தையின்மைக்கான சிகிச்சை மேற்கொண்டு, குழந்தை பெற்றவர்கள்.

- இவர்களில் பிரசவத்துக்குப்பின் 12 மாதத்திற்குள், ஒரு லட்சம் பேர் என்ற விகிதத்தில் பார்க்கையில் 37 பேர் பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர்.

(3.1 கோடிபேரில், இயற்கை கருவுறுதலின் மூலம் குழந்தை பெற்றவர்களில் ஒரு லட்சம் பேர் என்ற விகிதத்தில் 29 பேருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது)

பக்கவாதம்
பக்கவாதம்முகநூல்

இந்த ஆய்வறிக்கையை அடுத்து, ‘செயற்கை கருத்தரிப்புக்கும் பக்கவாதத்துக்கும் தொடர்புள்ளதோ’ என்ற அச்சம் எழுந்தது. உலகம் முழுவதும், ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரிடையேயும் இறப்புக்கான காரணங்களில் மூன்றாவது முக்கிய காரணமாக பக்கவாதம் உள்ளதென்பதால், இது மருத்துவர்களையேவும் கூட சற்று கலங்கடித்த ஆய்வுமுடிவுதான். ஆகவே இதுகுறித்து, செயற்கை கருத்தறித்தல் மருத்துவர் அருணா அசோக்கிடம் பேசினோம். அவர் கூறியவற்றின் முக்கியத் தகவல்கள் இங்கே:

“நேரடியாக அப்படி சொல்வது சரியல்ல. செயற்கை கருத்தரித்தலால் சில சில பக்கவிளைவுகள் ஏற்படலாம். ஆனால் அவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள, சம்பந்தப்பட்டவர்கள் ஒரு சில உடல்நலம் சார்ந்த கண்காணிப்பை பின்பற்ற வேண்டும் என்பதே போதுமானது. முன்னதாக என்ன பக்கவிளைவுகள் ஏற்படலாம், இந்த சிகிச்சை யாரெல்லாம் மேற்கொள்ளலாம் என்பதையெல்லாம் சொல்லிவிடுகிறேன்.

செயற்கை கருத்தரித்தல் செய்து கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன?

கரு பரிமாற்றத்திற்குப் பிறகு ரத்த உறைவு உருவாகும் அபாயம் அதிகம் உள்ள பல குழந்தையின்மை சிகிச்சை பெறுபவர்களுக்கு, பக்கவாதம் அபாயம் ஏற்படுவதை குறைக்க ஹெப்பரின் எனப்படும் ரத்த ஓட்டத்தை சீராக்குவதற்கான ஊசியானது செலுத்தப்படும். அதுவும் சிகிச்சையின் முதல் 3 மாதம் வரையுமோ அல்லது குழந்தை பிறப்பிற்கு பிறகு 6 வாரங்கள் வரையுமோ கொடுக்கப்படும்.

IVF
IVFமுகநூல்

இத்தகைய ஊசிகளை எடுத்துக் கொள்வதில் குறுகிய கால பக்க விளைவுகளாக வலி, வீக்கம் மற்றும் தூக்க பாதிப்பை ஏற்படக்கூடும். மற்றபடி நீண்ட கால பக்க விளைவுகளென்பது, 1-2 IVF சிசிக்சைகளில் மிகவும் குறைவாகவே இருக்கும்.

(இதேபோல எக்டோபிக் கர்ப்பம் மற்றும் சினைப்பை ஹைப்பர் ஸ்டிமுலேஷன் சிண்ட்ரோம் ஆகியவை குறுகிய கால அபாயங்களை ஏற்படுத்துவதாக அமைகிறது.)

யாருக்கெல்லாம் பக்கவிளைவுக்கான வாய்ப்பு அதிகம்?

IVF சிகிச்சை முறை மூலம் கருத்தரித்தல் செய்யும் பெண்களில்,

- உடல் பருமன்,

- உயர் இரத்த அழுத்தம்,

- நீரிழிவு நோய்,

- அதிக கொழுப்பு அளவுகள்,

இருப்பவர்கள்,

மருத்துவர் அருணா அசோக்
மருத்துவர் அருணா அசோக்

- கூடுதல் வயதாகி கருவுறுவோர் (38 வயதுக்கு மேல்) ,

- மரபணு பிரச்னைகளை ஏற்படுத்தும் காரணிகளை கொண்டிருப்போர்,

- APLA நோய்க்குறி (ஒருவகை ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர்),

- ஏற்கெனவே மாரடைப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பவர்

போன்றவர்கள், பக்கவிளைவுக்கான வாய்ப்பு அதிகம். ஏனெனில் ஐ.வி.எஃப் சிகிச்சையில் அவர்களுக்கு ஈஸ்ட்ரோஜன்கள் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன்கள் போன்ற ஹார்மோன் ஊசிகள் அதிக அளவு செலுத்தப்படும். ஏற்கெனவே அவர்களுக்கு சிக்கல்கள் இருப்பதால், பக்கவாதம் போன்ற பக்கவிளைவுகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றது.

செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை - யார் செய்யலாம், யாரெல்லாம் செய்யக்கூடாது?

  • ART சட்டத்தின்படி, இந்தியாவில் 21 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் இந்த சிகிச்சையை செய்து கொள்ளலாம்.

  • நீரிழிவால் பாதிக்கப்பட்ட பெண்கள் HBA1C<7 என்ற இரத்த சர்க்கரை அளவை கொண்டிருந்தால் செய்யலாம்.

செயற்கை கருத்தறித்தல்
செயற்கை கருத்தறித்தல்முகநூல்
  • உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் அளவை கொண்டிருப்போர், அவற்றை கட்டுப்படுத்திய பிறகு IVF செய்யவேண்டும்.

  • உடல் பருமனான பெண்களுக்கு BMI < 29 என்ற அளவில் 5 % எடையானது குறைந்ததற்கு பிறகு செய்து கொள்வது நல்லது.

  • 38 வயதிற்குப் பிறகு அல்லது 1-2 IVF சுழற்சியில் முறையானது வெற்றி பெறாமல் போனால், மாஸ்டர் ஹெல்த் செக்-அப், மார்பக ஸ்கேன், முழுமையான வயிறு ஸ்கேன், ECG, ECHO மற்றும் மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்ற பிறகு IVF செய்து கொள்வது நல்லது.

செயற்கை கருத்தரித்தல்
நீரிழிவு நோயால் கண் பாதிப்பு வருமா? - நீரிழிவு ரெட்டினோபதி பற்றிய முக்கிய தகவல்கள்!

IVF மூலம் குழந்தை பெற்ற அம்மாக்கள்... பக்கவிளைவுகளை தடுக்க, இந்த அறிகுறிகளை தவிர்க்காதீங்க!

குறைப்பிரசவம், குழந்தைகளின் எடையில் குறைவு, கர்ப்பகால நீரிழிவு, உயர் ரத்த அழுத்த சிக்கல்கள் போன்ற சில உடல்நலக் காரணிகள் கொண்ட கர்ப்பிணிகள், பிரசவத்திற்கு பின் 6 வாரம் வரை மருத்துவரின் ஆலோசனை கட்டாயம் பெற வேண்டும். அதன்பிறகும் உங்கள் உடல் முன்னேற்றத்தை பொறுத்து மருத்துவ ஆலோசனை பெறவும். இதன்மூலம் பக்கவிளைவுகளை முடிந்தவரை தடுக்கலாம், அல்லது விரைந்து கட்டுப்படுத்தலாம்.

தொடர்ந்து மருத்துவரை சென்று ரத்த அழுத்தத்தை கண்காணிக்கவும். இவற்றின்மூலம் பக்கவாதத்தை தடுக்கமுடியும்.

பிரசவம்
பிரசவம்முகநூல்

செயற்கை கருவுறுதலுக்கு பிறகு குழந்தைகளுக்கு எதாவது குறைகள் ஏற்படுமா?

செயற்கை கருத்தரித்தலின் (IVF/ICSI) மூலம் குழந்தை பெற்றெடுக்கையில், இயற்கையான கருத்தரிப்பின் மூலம் பெறப்படும் குழந்தையை போல (97%) ஆரோக்கியமாக பிறப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இயற்கையான கருத்தரித்தலுக்கு பின் பெறப்படும் குழந்தைகளில் 2% குறையுள்ள குழந்தைகளாகவும், செயற்கை முறை கருத்தரித்தலின் மூலம் பெறப்படும் குழந்தைகள் 3% குறைபாடுடைய குழந்தைகளாகவும் பிறக்க வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

35 வயதை கடந்து பெண்கள் குழந்தை பெறுகையில், அக்குழந்தைக்கு குறை ஏற்படும் விகிதம் 1% உயரலாம்.

IVF
IVF Facebook

IVF-லும் ஆரோக்கிய குழந்தைகள் சாத்தியம்தான்!

IVF பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. உலகம் முழுவதும் 15 மில்லியனுக்கும் அதிகமாக குழந்தைகள் இம்முறையில் பிறந்துள்ளனர். இவர்கள் ஆரோக்கியமாகவே இருக்கின்றனர். சில சமயங்களில் இரட்டைக் கர்ப்பம், குறைப்பிரசவம் காரணமாக குறைந்த எடையுடன் பிறக்கும் வாய்ப்புகள் இருக்கின்றது என்பதால் கூடுதல் விழிப்புணர்வு அவசியம்.

செயற்கை கருத்தரித்தல்
‘செயற்கை இனிப்புகள் சாப்பிட்டா நீரிழிவு நோய் வருமா?’ - WHO சொல்வது என்ன? விளக்கும் மருத்துவர் மோகன்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com