100 வயது வரை வாழணும்னு ஆசையா? அன்றாட வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் தேவை?
100 வயது வரை வாழனும்னு ஆசைப்படாதவர்கள் யாருமே இருக்க முடியாது.. ஆனால் நீண்ட ஆயுள் வரை ஆரோக்கியமாக வாழ, நம் அன்றாட வாழ்க்கையில் சில மாற்றங்கள் தேவை என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அந்த வகையில் 100 வயதை கடந்து வாழும் சிலரை ஆய்வு செய்த நிபுணர்கள், அவர்களுடைய வாழ்க்கை முறையில் சில பொதுவாக பழக்கவழக்கங்கள் இருந்ததை அறிந்தனர்.
அதாவது தினசரி உடற்பயிற்சி, சீரான தூக்கம், காய்கறி பழங்கள் உள்ளிட்ட சமச்சீர் உணவு, மனதை சுறுசுறுப்பாக வைத்திருப்பது, குடும்பம், நண்பர்களுடன் இணக்கமாக இருப்பது மற்றும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவது போன்ற அன்றாட வாழ்க்கை முறைக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள் நீண்டகாலம் வாழும் வாய்ப்பு அதிகம் என்கிறது ஆய்வு முடிவு. நீண்ட ஆயுள் என்பது நம்மால் கட்டுப்படுத்தக்கூடிய விஷயம் இல்லையென்றாலும், ஆரோக்கியமாக வாழும் வாய்ப்பை, நம் வாழ்க்கைமுறை மூலம் அதிகரிக்க முடியும். 100 வயதை நோக்கி ஓடுவதற்கு முன், இருக்கும் ஒவ்வொரு வயதையும் மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக வாழ்ந்து கடப்போம்.

