\
Plague Pandemic: The Disease That Shook Human History
பிளேக் நோய்AI

மனித வரலாற்றை உலுக்கிய பிளேக்.. நோயின் வரலாறும் பேரழிவும்!!

வரலாற்றில் மூன்று முறை பேரழிவை ஏற்படுத்திய பெருந்தொற்றாக பிளேக் பதிவாகியுள்ளது.
Published on: 

ரஷ்யாவில் பிளேக் நோய் ஆய்வகத்தில் ஒரு பெண் ஆராய்ச்சியாளர் உயிரிழந்திருக்கிறார். இது மர்மமான பிளேக் கிருமியால் நிகழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனையடுத்து, 200க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இந்தச் சூழலில் உலக வரலாற்றையே நடுங்கவைத்த பிளேக் நோய் குறித்துப் பார்க்கலாம்.

பிளேக் நோய் என்பது யெர்சினியா பெஸ்டிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்றாகும். இது முக்கியமாக எலிகள் மற்றும் அவற்றில் வாழும் உண்ணிகள் மூலமாக மனிதர்களுக்குப் பரவுகிறது. வரலாற்றில் மூன்று முறை பேரழிவை ஏற்படுத்திய பெருந்தொற்றாக பிளேக் பதிவாகியுள்ளது.

பிளேக் நோய்
பிளேக் நோய்AI

கி.பி. 6ஆம் நூற்றாண்டில் பைசான்டைன் பேரரசில் பரவிய ஜஸ்டினியன் பிளேக்தான் இதன் முதல் அலையாகக் கருதப்படுகிறது. இது சுமார் 2.5 கோடி முதல் 5 கோடி மக்களின் உயிரைக் குடித்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனைத் தொடர்ந்து, 14ஆம் நூற்றாண்டில் ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களில் பரவிய இரண்டாவது அலை ’கருப்பு மரணம்’ என்று அழைக்கப்படுகிறது. 1346 முதல் 1353 வரையிலான காலகட்டத்தில் பரவிய இந்த நோய், ஐரோப்பாவின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கைக் கொன்று குவித்து பேரழிவை ஏற்படுத்தியது.

Plague Pandemic: The Disease That Shook Human History
Diego Garcia வெறும் Teaserதான்! லண்டன், பாரிஸ் மீது ஈரானின் அடுத்த குறியா?

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சீனாவில் தொடங்கி இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்குப் பரவிய மூன்றாவது அலை, லட்சக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கியது. இந்த காலகட்டத்தில்தான் 1894ஆம் ஆண்டு அலெக்சாண்டர் யெர்சின் என்ற விஞ்ஞானி பிளேக் நோய்க்கான பாக்டீரியாவைக் கண்டறிந்தார். நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் மற்றும் நவீன சுகாதார முறைகளின் கண்டுபிடிப்புக்குப் பிறகு பிளேக் நோய் முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனினும், ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் இன்றளவும் அவ்வப்போது அரிதாகப் பதிவாகி வருகிறது. மனித நாகரிகத்தின் போக்கையும் மக்கள்தொகையையும் மாற்றியமைத்த நோய்களில் பிளேக் நோய் மிக முக்கியமான ஒன்றாகும்.

Plague Pandemic: The Disease That Shook Human History
10,500 ஆண்டு பழைய நாகரீகம்! ஏரியில் கிடந்த தொல்பொருள் பொக்கிஷம்! மொத்தமாக மாறும் மனித வரலாறு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com