வெளிச்சமும், காற்றோட்டமும் வேண்டுமா?.. குளத்தை மையப்படுத்தி ஸ்லோப் ரூப், போரோதெர்ம் பிரிக்ஸ் வீடு!

ஒரு குளம், அந்த குளத்தை பார்த்தபடி ஒரு பெரிய பால்கனி, இரண்டு பெட்ரூம். இப்படி டிசைன் பண்ணினால் எப்படி இருக்கும். அதுபோல டிசைன் பண்ணி 1250 சதுரடியில் 29 லட்சம் செலவில் கேரளாவில் கட்டப்பட்டுள்ள வீட்டின் தனிச்சிறப்பை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
house
housept desk

வீட்டு உரிமையாளார் முரளி மோகனன் சொல்வதென்ன?

"நான் ரிட்டயர் ஆன பின்பு என்னோட சொந்த ஊர்ல வீடு கட்டணும்னு திட்டமிட்டிருந்தேன். அதற்காக கட்டிட வடிவமைப்பாளரை தேடிக்கிட்டு இருந்தென். அப்பதான் ஆசிப் என்பவர் பண்ணியிருந்த ஒரு ப்ரோஜக்ட்ட இணையத்துல பார்த்தேன். அதுல ஒரு மட் ஹவுசும் இருந்தது. இதையடுத்து நான் அவருடன் போனில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது அவர், முதலில் இடத்தை பாத்துட்டு அப்புறம் முடிவு செய்யலாம்னு சொன்னாரு. அதுக்கு அப்புறமா இங்கே வந்தாரு.

murali
muralipt desk

எங்க மனசுல என்ன இருக்குன்னு சொன்னப்ப மண்வீடு வேலைக்கு ஆகாதுன்னு சொன்னாரு. அதுக்கு காரணம் எங்களுக்கு நிறைய காற்றோட்டம் தேவைப்பட்டது. அதனால வேற மாதிரி வித்தியாசமாக முயற்சி செய்யலாம்னு சொன்னாரு. அவருதான் இந்த போரோதெர்ம் கற்களை பத்தி சொன்னாரு. இந்த கற்கள் வெப்பத்தை உள்ளே விடாம பாதுகாக்கும் அதேபோல் ஈரப்பதத்தையும் உள்ளே விடாதுன்னு தெருஞ்சுக்கிட்டோம். இது நல்ல யோசனையா இருந்ததால இந்த முறையை நாங்க தேர்ந்தெடுத்தோம்" என்றார் வீட்டு உரிமையாளார். முரளி மோகனன்.

குளத்தை மையப்படுத்தி கட்டப்பட்ட வீடு?

ஓவ்வொரு வீட்டோட டிசைனும் ஒவ்வொரு வீட்டோட ஐடியாவும் ஒவ்வொரு இடத்தில் இருந்து ஆரம்பிக்கும். அதோ மாதிரி இந்த வீட்டோட ஐடியா வீட்டிற்கு அருகில் உள்ள குளம்தான். இந்த குளத்தை பார்த்த மாதிரி ஒரு வீட்டை கட்டணும்னு ஆசைப்பட்டு எழுப்பப்பட்ட வீடுதான் இது. அவங்களோட ஆசை எந்த அளவுக்கு நிறைவேறி இருக்கிறது என்பது நாம் பார்க்கும் போதே தெரிகிறது. இந்த வீட்டோட டிசைனை குளத்துடன் பார்ப்பதற்கு, ஒரு பறவை தனது இறக்கைகளை விரித்தபடி ஓய்வெடுப்பது போல இருக்கும். அந்த இரண்டு இறக்கை இருக்கும் இடத்தில்தான் இரண்டு பெட்ரூம்கள் இருக்கிறது.

pond
pondpt desk

லோ போரிங் பவுண்டேஷன்

இந்த வீட்டுக்கு சாதாரண லோ போரிங் பவுண்டேஷன். கல்லை அடுக்கிதான் போட்டிருக்காங்க. ஆனால், இந்த மனையில் இருக்குற மண் மிகவும் லூசான மண். இந்த மண் லோ போரிங் பவுண்டேஷனுக்கு உகந்ததா இல்ல. அதனால எவ்வளவு ஆழமாக போக முடியுமோ. அதுவரையிலும் ஆழமாக போயி பவுண்டெஷன் போட்டிருக்காங்க. சாதாரணமா இரண்டு அடியிலேயே பவுண்டெஷன் போடுவாங்க ஆனா, இங்க 5அடி வரை ஆழமான பவுண்டேஷன் போட்டிருக்காங்க.

தூண்களுடன் கூடிய அழகான வராண்டா

அடுத்ததா இந்த வீட்டோட வராண்டா. இந்த வராண்டால 6 தூண்கள் இருக்கு. இந்த 6 தூண்களும் ஜிஐ பைப்லதான் பண்ணியிருக்காங்க. வராண்டாவோட தரைத் தளத்திற்கு கிளாஸி ப்னிஸ் வெர்டிபைட் டைல்ஸ் பயன்படுத்தி இருக்காங்க. இந்த டைல்ஸ் பாக்குறதுக்கு இத்தாலியன் மார்பிள் ஸ்டைல் போல இருக்கு. அதேமாதிரி தரைத்தளத்தோட கார்னர்ல மேட் ப்னிஸ் டைல்ஸ் பயன்படுத்தி இருப்பதால் பார்ப்பதற்கு வித்தயாசமாக இருக்கு.

house
housept desk

ஜிஐ பைப்பில் செய்யப்பட்ட பெரிய பெரிய ஜன்னல்கள்

இந்த வீட்டோட முன்பகுதியில லிண்டல் வரைக்கும் பார்த்தால், இரண்டு புறமும் ஒரு கல்லை அடுக்கி உருவான சுவர் மட்டுமே இருக்கிறது. மீதமுள்ள பகுதி முழுவதும் ஜன்னலும் கதவும் மட்டுமே இருக்கிறது. ஜன்னலோட பிரேம்-க்கு ஜிஐ பைப்தான் பயன்படுத்தி இருக்காங்க. ஜிஐ பைப் பயன்படுத்தி இருப்பதை தொட்டும் தட்டிப் பார்த்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் இல்லையெனில் மரம் போலவே தெரியும்.

போரோதெர்ம் பிரிக்ஸ் பயன்படுத்தி எழுப்பப்பட்ட சுவர்கள்

இந்த வீட்ல 12க்கு 14 சைஸ்ல அமைந்துள்ள பெரிய ஹால். இந்த வீட்டோட உயரம் 22.5 அடி என்று சொன்னாங்க. அதாவது டபுள் ஹைட் உயரமுள்ள சீலிங். அதே மாதிரி இந்த வீட்டோட சுவர் முழுவதும் போரஸ் தெர்மல் என்று அழைக்கப்படும் போரோதெர்ம் பிரிக்ஸ் பயன்படுத்தி இருக்காங்க. இது களிமண்ணால் செய்யப்பட்ட ஒரு பிளாக். ஆனால், அதனுள் நிறைய துளைகள் இருக்கும்.

bricks
brickspt desk

அந்த துளைகள் மூலமாக ஏர் சர்குலேஷன் இருப்பதால் தெர்மல் இன்சுலேஷன் இருப்பதாக சொல்வாங்க. இதனுடன் சாதாரண செங்கலை ஒப்பிடும்போது, 60 சதவீதம் வரை எடை குறைவு. அப்படி எடை குறைவான பொருளை வைத்து நாம் வீட்டை கட்டும்போது, கட்டுமானம் மிகவம் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் லைட்வெயிட் பில்டிங் லாங் லாஸ்டிங் ஆக இருக்கும். சாதாரண செங்கலுடன் ஒப்பிடும் போது 5 டிகிரி வரையிலும் தெர்மல் இன்சுலேஷனை எதிர்பார்க்கலாம்.

இந்த வீட்டோட மெயின் கதவை ஒட்டி இருபுறமும் ஃபே விண்டோஸ் அமைச்சிருக்காங்க. அதே மாதிரி சுவரின் அடுத்த இருபுறுமும் இரண்டு பெரிய ஜன்னல்கள் வச்சிருக்காங்க. அதனால் இந்த வீட்டோட ஹாலுக்குள் வெளிச்சமும் காற்றோட்டமும் நல்லாவே இருக்கு. இந்த ஹாலோட தரைத்தளம் கிளாசி ப்னிஸ் டைல்ஸ் தான் போட்டிருக்காங்க.

ஒரே மாதிரியான அழகான இரண்டு பெட்ரூம்

இந்த வீட்ல மொத்தம் இரண்டு பெட்ரூம் இருக்கு. இந்த இரண்டு பெட்ரூமையும் ஒரே மாதிரி டிசைன் பண்ணியிருக்காங்க. இந்த வீடு மாதிரியான ஸ்லோப் ரூப் வீடுகளில் பார்த்தால், ரூம் என்ட் ஆகும் இடத்துல பெட்ரூம் வச்சிருப்பாங்க. ஆனா அந்த ரூஃப்பை ஹாலோடு முடித்துக் கொண்டு பெட்ரூமுக்கென தனியாக ஸ்லோப் ரூப் போட்டிருக்காங்க. இதனால் சீலிங் உயரமாக இருப்பதோடு காற்றோட்டமாகவும் இருக்கிறது. பெட்ரூம் தரைத்தளத்துக்கு ஒயிட் கலர் மேட் ப்னிஸ் வெர்ட்டிபைட் டைல்ஸ் பயன்படுத்தி இருக்காங்க.

windows
windowspt desk

சிமிலி இல்லாத மாடுலர் கிச்சன்

இந்த வீட்ல ஓப்பன் டைனிங் ஏரியா மற்றும் ஓப்பன் கிச்சன் வச்சிருக்காங்க. இது இரண்டுக்கும் டிசைனில் ஒரு ஒற்றுமை இருக்கு, டைனிங் ஏரியா கார்னர்ல எல் ஷேப்ல பென்ச் போட்டிருக்காங்க. இங்க இருக்குற டைனிங் டேபிளை நாம கடையில போயி வாங்குறதுக்கும், நாம செய்வதற்கும் உள்ள வித்தியாசம் என்னன்னா, நாமளாக செய்யும் போது அந்த இடத்திற்கு தகுந்தவாறு டிசைன் செய்து கொள்ளலாம். இதை நாம் கடையில் வாங்கும் போது சரியானதாக கிடைக்காது. அதே மாதிரி கிச்சனோட கேபினட் டிசைனும் எல் ஷேப்ல தான். இது காம்பெக்டான சின்ன கிச்சன்தான். இந்த கிச்சனில் சிமிலி மட்டும்தான் கிடையாது ஆனால், மாடுலர் கிச்சன் டிசைன்ல தான் பண்ணியிருக்காங்க. இந்த கிச்சனோட சிலாப்-க்கு பிளாக் கேலக்ஸி கிரானைட் பயன்படுத்தி இருக்காங்க. அதே மாதிரி சுவர்களுக்கு சாதாரண கிளாஸி டைல்ஸ் பயன்படுத்தி இருக்காங்க.

டபுள் டைல் ரூபிங்

அடுத்ததா மாடிக்கு செல்ல ஜிஐ பைப்பால் ஆன retractable staircase வச்சிருக்காங்க இந்த படிக்கட்டு நமக்கு இடத்தை அடைக்காது நமக்கு தேவையில்லாத போது சுவரோடு சாய்த்து வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் போது இறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வீட்டுக்கு டபுள் டைல் ரூபிங் பயன்படுத்தி இருக்காங்க. அதுக்கு ஃபிரேமாக ஜிஐ பைப்தான் பயன்படுத்தி இருக்காங்க.

stair case
stair casept desk

இந்த வீட்டுக்குள் நான் வரும்போது வெயில் அடித்தது ஆனால் இப்ப மழை பெய்து கொண்டுள்ளது. இது தான் கேரளாவோட அழகு என்றே சொல்லலாம். இந்த வீடு கண்டிப்பாக உங்களுக்கு பிடித்திருக்கும் மீண்டும் இதே போன்ற சிறப்புடைய வீட்டை பற்றிய தகவல்களுடன் பர்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com