இந்தியர்களுக்கு 2018 ஐபிஎல் ரொம்ப ஸ்பெஷல் ! ஏன் தெரியுமா..?

இந்தியர்களுக்கு 2018 ஐபிஎல் ரொம்ப ஸ்பெஷல் ! ஏன் தெரியுமா..?
இந்தியர்களுக்கு 2018 ஐபிஎல் ரொம்ப ஸ்பெஷல் ! ஏன் தெரியுமா..?

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் 7 ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் தொடங்க என்னவோ இன்னும் 10 நாட்களுக்கு மேல் இருக்கிறது. ஆனால் கிரிக்கெட் ரசிகர்களிடம் ஐபிஎல் ஜூரம் இப்போதே தொற்றிக் கொண்டுவிட்டது. அதுவும் இந்த ஐபிஎல் கொஞ்சம் ஸ்பெஷல் தான் ! எப்படி என்பதை கீழே பார்ப்போம். 

கடந்த 2008 ம் ஆண்டு ஏப்ரல் 18 தேதி பெங்களூரில் ஐபிஎல் எனப்படும்  ‘இந்தியன் பிரீமியர் லீக்’ தொடர் தொடங்கபட்டது. அப்போதே இதற்கான எதிர்பார்ப்பு இருந்தது என்னவோ உண்மை தான். ஆனால் இவ்வளவு தூரம் வெற்றி பெரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. கோடிகளில் புரளும் ஐபிஎல் தொடர் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் வந்ததில்லை. லலித்மோடி ஊழல் விவகாரம் தொடங்கி , சூதாட்டம் நடைபெற்றதாக அணிகள் தடை வரை என எக்கசக்கமான சர்ச்சை தொடர்ந்தாலும் ஆண்டுக்கு ஆண்டு ஆதரவு என்பதும் அதிகரித்து கொண்டேதான் போகிறது.

ஏன் இந்தியாவில் ஐபிஎல் வெற்றி பெற்ற பிறகே பல நாடுகளும் இதை ‘காப்பி’ அடிக்க தொடங்கின. எத்தனை நாடுகள் இது மாதிரியான தொடர் நடந்தாலும் நம்ப ஊர் ஐபிஎல் போல வரவேற்போ, வருமானமோ அங்கு கிடைப்பது இல்லை என்பதை வெளிநாட்டு வீரர்களே ஒப்பு கொள்ளும் அளவுக்கு தான் இருகிறது. ஐபிஎல் என்பது ரசிகர்களை பொருத்தவரை டி20 கிரிக்கெட்டி என்பது விருந்து. ஆனால் கிரிக்கெட் வீரர்களுக்கு தேசிய அணியில் நுழைய உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடினால் தான் முடியும் என்ற நிலையை மற்றி அமைத்தது ஐபிஎல் தான். ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினால் தேர்வாளர்களின் கவனத்தை திருப்ப முடியும் என்பதை நம் வீரர்களும் நன்கே புரிந்துவைத்துள்ளனர். இந்த தொடர் புதிய வீரர்களின் ஏணிபடி மட்டுமல்ல ஏற்கெனவே தேசிய அணியில் இருந்தும் சில காலமாய் ரன் குவிக்க முடியாமல் இருந்தால் ஐபிஎல்-யை தான் பயன்படுத்தி கொள்கின்றனர். இதற்க்கு சிறந்த உதாரணம் தவான் ! 

இத்தனை சிறப்புமிக்க ஐபிஎல் இதுவரை 10 தொடர்கள் பிரமாண்டமாக முடிந்த நிலையில் 11வது சீசன் அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சூதாட்டப்புகார் காரணமாக விளையாடாமல் இருந்த சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த முறை களம் காண்கின்றன. தோனியின் தலைமையில் சென்னை அணி மீண்டும் களமிறங்குவதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இதுவரை தோனி இருக்கும் அணியிலோ விளையாடி வந்த தமிழக வீரர் அஸ்வின், இந்த முறை பஞ்சாப் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தமுறை கொல்கத்தாவும் கவுதம் காம்பீர்-ரை கழற்றிவிட அவர் கேப்டனாக இருந்த கொல்கத்தா அணிக்கு தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த ஐபிஎல் தொடரில் இரண்டு அணிகளுக்கு மட்டும்தான் வெளிநாட்டு வீரர்கள் கேப்டன்களாக செயல்பட இருந்தனர். இருவருமே ஆஸ்திரேலியர்கள். ராஜஸ்தான் அணிக்கு ஸ்மித்தும் ஹைதராபாத் அணிக்கு வார்னரும் கேப்டன்களாக இருந்தனர். தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக புகாரின் காரணமாக ஸ்மித்தும், வார்ணரும் பதவியை இழந்தனர். இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் ஸ்மித் விலகியுள்ளார். அவர்கள் இருவருக்கும் வாழ்நாள் தடை விதிப்பது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பரிசீலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் இருவருக்குமே ஒரு ஆண்டு தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது .

இந்த விவகாரத்தின் எதிரொலியாக ராஜஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஸ்மித்தை நீக்கிவிட்டு ரஹானேவை கேப்டனாக நியமித்துள்ளது அந்த அணி நிர்வாகம். ஹைதராபாத் அணியும் ஆஸ்திரேலிய அணியின் அறிக்கைக்கு காத்திருப்பதாக நேற்று விவிஎஸ் லட்சுமணன் கூறி இருந்த நிலையில் ஹைதராபாத் அணியும் வார்னரை நீக்கிவிட்டு தவானை கேப்டனாக நியமிக்க வாய்ப்புள்ளது. அப்படி தவான் நியமிக்கப்பட்டால், ஐபிஎல்-லின் எட்டு அணிகளுக்கும் இந்திய வீரர்கள் கேப்டன்களாக செயல்படுவர். இதுவரை எந்த ஐபிஎல் தொடரிலும் அனைத்து அணிகளுக்கும் இந்திய வீரர்களே கேப்டன்களாக செயல்பட்டது கிடையாது என்பது குறிப்பிடதக்கது .

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com