சாதனை பெண்களுக்கு புதிய தலைமுறையின் சக்தி விருதுகள் வழங்கி கௌரவிப்பு

லட்சியத்தை நோக்கி பயணிக்கும் பெண்களுக்கு புதிய தலைமுறை என்றும் துணை நிற்கும் என்று புதிய தலைமுறையின் சக்தி விருதுகள் விழாவில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார் புதிய தலைமுறை குழுமத்தலைவர் சத்திய நாராயணன்.
சக்தி விருதுகள்
சக்தி விருதுகள்புதிய தலைமுறை

உண்மை உடனுக்குடன் என்ற தாரக மந்திரத்துடன் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி ஊடகப் பணியாற்றி வருகிறது. செய்திப் பணியையும் தாண்டி மக்கள் பணியாற்றுவதை கடமையாக கொண்டிருக்கும் புதிய தலைமுறை, இந்த சமூகத்திற்கு தொண்டாற்றும் ஆளுமைகளை அடையாளம் கண்டு அவர்களை அங்கீகரிக்கும் விதமாக தமிழன் விருதுகள், சக்தி விருதுகள் மற்றும் ஆசிரியர் விருதுகள் என்று ஆண்டுதோறும் மூன்று விதமாக விருது விழாக்களை நடத்தி சிறப்பு செய்து வருகிறது.

சமூகம் தழைக்க பெண்கள் ஆற்றும் பங்கினை அங்கீகரித்து ஊக்கப்படுத்தும் வகையில் ஆறு பிரிவுகளில் சிறந்த விளங்கும் பெண் ஆளுமைகளுக்கு சக்தி விருதுகள் #sakthiawards வழங்கப்பட்டு வருகின்றன.

தலைமை, திறமை, துணிவு, புலமை, கருணை மற்றும் வாழ்நாள் சாதனை என்ற ஆறு தலைப்புகளில் சிறந்து விளங்கும் பெண் ஆளுமைகளுக்கான பரிந்துரைகள் நடுவர் குழுவினரால் ஆராய்ந்து, அதிலிருந்து சிறந்தவர்கள் இந்த ஆண்டுக்கான விருதாளர்களால் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்த நிலையில், விருதாளர்களுக்கான விருது வழங்கும் விழா இன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. அப்போது,

1. MS சுவாமிநாதன் அறக்கட்டளை தலைவர், WHO முன்னாள் தலைமை விஞ்ஞானி, மருத்துவர் சௌமியா சுவாமிநாதன் அவர்கள் புலைமைக்கான விருதை பெற்றுக்கொண்டார்.

2. மாற்று பாலினத்தை சேர்ந்த திருநங்கை பிரியா பாபு அவர்கள் கருணைக்கான விருதை பெற்றுக்கொண்டார்.

3. ஆதித்யா எல் 1 திட்ட இயக்குனர் நிகார் சாஜி அவர்கள் தலைமைக்கான விருதை பெற்றுக்கொண்டார்.

4. தீயணைப்புத்துறையில் சிறந்து விளங்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருக்கும் பிரியா ரவிச்சந்திரன் அவர்கள் துணிவிற்கான விருதை பெற்றுக்கொண்டார்.

5. சதுரங்க வீராங்கனை வைஷாலி அவர்கள் திறமைக்கான விருதை பெற்றுக்கொண்டார்.

6. இயற்கை விவசாயி பாப்பம்மாள் (எ) ரங்கம்மாள் அவர்கள் 'வாழ்நாள் சாதனை' விருதை பெற்றுக்கொண்டார்.

சக்தி விருதுகள்
கண்கலங்கிய குடும்பம்.. வீடு தேடி உதவிக்கிரம் நீட்டிய சக மெக்கானிக்குகள்.. மனிதம் ஒன்றே தீர்வாகும்!

விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புதிய தலைமுறை குழுமத் தலைவர் சத்திய நாராயணன், “ஆண், பெண் இருவரும் சரிசமம் ஆனவர்கள். சம உரிமையை இலக்காக வைத்து லட்சியத்தை நோக்கி உத்வேகத்துடன் பயணிக்க வேண்டும். லட்சியத்தை நோக்கி பயணிக்கும் பெண்களுக்கு புதியதலைமுறை என்றும் துணை நிற்கும்” என்று நெகிழ்ச்சி தெரிவித்தார்.

சக்தி விருதுகள்
கால்களால் அற்புதம் நிகழ்த்திய மாணவி.. “இனியாவது மஞ்சப்பையை கையில் எடுங்கள்”

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com