ஃபேஸ்புக்கை அதிகம் பயன்படுத்துவது யார்?

ஃபேஸ்புக்கை அதிகம் பயன்படுத்துவது யார்?

ஃபேஸ்புக்கை அதிகம் பயன்படுத்துவது யார்?
Published on

கவலையில் இருப்பவர்களே, ஃபேஸ்புக்கில் அதிக நேரத்தை செலவழிப்பதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. 

ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்-ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தற்போது அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நியூயார்க்கில் உள்ள ஒரு பல்கலைக்கழகம், ஃபேஸ்புக் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. 5,208 பேரிடம் மேற்கொண்ட இந்த ஆய்வில், ஃபேஸ்புக் பயன்பாடு சமூக, உடல் மற்றும் உளவியலுடன் இணைக்கப்பட்டுள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஃபேஸ்புக்கில் சுயவிவரங்களை அடிக்கடி மாற்றுபவர்கள், அதில் அதிக நேரம் செலவழிப்பவர்கள், மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு கவலையில் இருப்பவர்கள் ஆகியோர்களே ஃபேஸ்புக்கை அதிகம் பயன்படுத்துவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com