தமிழகத்திலேயே முதல்முறையாக நடமாடும் தகன வாகனம் அறிமுகம் - எப்படி சாத்தியமானது?

தமிழகத்திலேயே முதல்முறையாக நடமாடும் தகன வாகனம் அறிமுகம் - எப்படி சாத்தியமானது?
தமிழகத்திலேயே முதல்முறையாக நடமாடும் தகன வாகனம் அறிமுகம் - எப்படி சாத்தியமானது?

கிராமங்களில் உயிரிழப்பவர்களை எரியூட்டுவதற்காகவும், அவர்களின் பொருளாதார சிரமங்களை குறைப்பதற்காகவும், ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தினர் தமிழகத்திலேயே முதல்முறையாக நடமாடும் தகன வாகனத்தை அறிமுகப்படுத்தி உள்ளனர். அதன் செயல்முறை என்ன, அதன் மூலம் பயன்பெறுவது குறித்து பார்க்கலாம் இந்த கட்டுரையில் பார்ப்போம்.

மனித வாழ்வில் பிறப்பு என்று உள்ளதுபோல, இறப்பு என்பதும் கட்டாயமாக உள்ளது‌. நகர மயமாக்கல் மற்றும் நாகரீகத்தை நாடி ஓடும் தற்போதைய காலத்தில் நகர்ப்புறங்களில் உயிரிழக்கும் மனிதர்களின் உடல்களை புதைத்தும் எரித்தும் வந்தனர். தற்போது நகரமயமாக்கலினால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு நகர்ப்புறங்களில் தகன மேடை அமைத்து அதன் மூலம் மனித இறப்பிற்கு பிறகு இறுதி காரியங்கள் செய்யப்பட்டு வருகிறது. இதுவே கிராமப்புறங்களில் இறப்பவர்களை எரியூட்டுவதற்கு அதிகளவு செலவு செய்யப்படுகிறது. இதனை போக்க ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தினர் முடிவெடுத்து எளிய முறையில் நகரும் தகன மேடையை உருவாக்கி சாதனைப் படைத்துள்ளனர்.

ஈரோட்டில் காவிரி ஆற்றின் கரையில் பிரசித்தி பெற்ற சோளீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. அதன் அருகில் ஈரோடு மாநகராட்சியும், ரோட்டரி சங்கத்தினரும் இணைந்து கடந்த 14 ஆண்டுகளுக்கு மேலாக நவீன தகன மேடையை உருவாக்கி 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை தகனம் செய்துள்ளனர். தற்போது ரோட்டரி சங்கத்தினரின் அடுத்த மைல் கல்லாக கிராமப்புற மக்களின் சிரமங்களை குறைக்க நகரும் தகன மேடையை உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளனர். தமிழகத்திலேயே முதல்முறையாக நகரும் தகன மேடையால் கிராம மக்களின் பொருளாதார சிரமங்களை குறைக்க புதிய முயற்சியை ரோட்டரி சங்கத்தினர் எடுத்துள்ளனர்.

இதனை கிராமப்புற மக்களின் பயன்பாட்டிற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும், சாதாரணமாக தகனம் செய்ய ஆகும் செலவுகளை பாதிக்கு, பாதியாக 7 ஆயிரத்து 500 ரூபாயாக குறைத்து தகனம் செய்யும் நேரத்தையும் குறைத்துள்ளனர். இதன்மூலம் கிராம மக்களின் சிரமத்தை பெருமளவு குறைத்துள்ளனர். தற்போது இந்த நகரும் தகன மேடையானது பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வரும் காலங்களில் தமிழக அரசுடன் இணைந்து தமிழகத்தின் அனைத்து கிராம புறங்களிலும் இதனை கொண்டு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர். மனித பிறப்பிற்கு கொண்டாடும் இந்த உலகம் இறப்பிற்கு உண்டாகும் சிரமத்தை குறைத்துள்ள இந்த ரோட்டரி சங்கத்தின் சேவையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com