இந்திய ரயில்வே துறையில் வேலை பெறுவது எப்படி?.

இந்திய ரயில்வே துறையில் வேலை பெறுவது எப்படி?.

இந்திய ரயில்வே துறையில் வேலை பெறுவது எப்படி?.
Published on

இந்திய ரயில்வே துறையில் வேலை கிடைக்க வேண்டும் என்பது பலரின் கனவு. தமிழகத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு மிகவும் சவாலான தேர்வாக இருந்து வருவதும் இந்திய ரயில்வேத்துறையின் தேர்வு மட்டுமே. தேர்வின் அடிப்படையில் தான் அடுத்தகட்ட பிரிவுக்கு செல்ல முடியும் என்பதால் கடின முயற்சியும், வேகமும் இருந்தால் நிச்சயம் ரயில்வே பணியை கைப்பற்றிவிடலாம்.

ரயில்வே நிறுவனம் இரண்டு பிரிவுகளாக பணியிட விவரங்களை அறிவித்துள்ளது. முதல் பிரிவில் 26502 காலியிடங்களுடன் அசிஸ்டெண்ட் லோகோ பைலட், டெக்னீசியன் பணிகளுக்கும், இரண்டாவது பிரிவில் 62907 காலியிடங்களுடன் டிராக்மேன், கேட்மேன், பாயிண்ட்ஸ்மேன், எலெக்ட்ரிக்கல் ஹெல்பர், மெக்கானிக்கல், சிக்னல் & டெலிகம்யூனிகேஷன் பணிகளுக்கும் தேர்வுகளை நடத்த இருக்கிறது. 
முதல் பிரிவுகளில் இருக்கும் அசிஸ்டெண்ட் லோகோ பைலட் அல்லது டெக்னீசியன் பணிகளில் தேர்ச்சி பெறுவதற்கான வழிகளை தற்போது பார்ப்போம்.

அசிஸ்டெண்ட் லோகோ பைலட் பணிக்கு ஆர்மட்சூர் & காயில் வைண்டர், எலெக்ட்ரீசியன், எலெக்ட்ரானிக் மெக்கானிக், ஃபிட்டர், ஹீட் என்ஜீன், இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக், மெஷினிஸ்ட், மெக்கானிக் டீசல், மெக்கானிக் மோட்டார், மில்ரைட் மெயின்டெனன்ஸ் மெக்கானிக், மெக்கானிக் ரேடியோ & டி.வி, ஏ.சி மெக்கானிக், டிராக்டர் மெக்கானிக், டர்னர், வயர்மேன் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் ஐ.டி.ஐ படிப்பு அல்லது மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிப்ளமோ அல்லது பி.இ/ பி.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். (பி.இ/ பி.டெக் படித்தவர்கள் அப்ரண்டீஸ் பயிற்சி பெற்றிருந்தால் இந்த பணிக்கு விண்ணப்பிக்க இயலாது)

டெக்னீசியன் பணிக்கு Forger and Heat Treater, பைண்டர், ஃபிட்டர், கார்பெண்டர், வெல்டர், பிளம்பர், பைப் ஃபிட்டர், எலெக்ட்ரீசியன், மெக்கானிக் ஆட்டோ எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ், வயர்மேன், எலெக்ட்ரானிக் மெக்கானிக், மெக்கானிக் பவர் எலெக்ட்ரானிக்ஸ், வெல்டர், ஏ.சி மெக்கானிக் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் ஐ.டி.ஐ படித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறையை எப்படி?

முதல்கட்டமாக CBT எனப்படும் கம்ப்யூட்டர் பேஸ்ட் தேர்வு இருக்கும். கம்ப்யூட்டர் பேஸ்ட் தேர்வில் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் இருக்கும். கணிதம், ஜெனரல் அவேர்னஸ், ஜெனரல் இன்டலிஜன்ஸ், ரீசனிங் பிரிவுகளில் இருந்து 75 கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வுக்கு 60 நிமிடம் வழங்கப்படும்.

தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு, அடுத்தகட்டமான CBT 2nd Stage தேர்வுகள் இருக்கும். இத்தேர்வில் இரண்டு பகுதிகள் உள்ளன. Part A பிரிவில் கணிதம், ஜெனரல் இன்டிலிஜின்ஸ் & ரீசனிங், சயின்ஸ் & என்ஜினீயரிங், ஜெனரல் அவேர்னஸ் ஆகிய பகுதிகளில் இருந்து 100 கேள்விகளுடன் 90 நிமிடங்கள் வழங்கப்படும். Part B பிரிவில் டெக்னிக்கல் சம்பந்தமான 75 கேள்விகள் இருக்கும். இத்தேர்வுக்கு 60 மதிப்பெண்கள் வழங்கப்படும். பின்னர், தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் மருத்துவ பரிசோதனை நடைபெறும். 2018, ஏப்ரல் மாதத்திலிருந்து மே மாதத்திற்குள் முதல்கட்ட சி.பி.டி தேர்வை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளன.

முதல்கட்ட தேர்வுக்கு தயார் ஆவது எப்படி?

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்க இருக்கும் முதல் கட்ட கணினி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான சில வழிகளை தெரிந்துகொண்டு தயாராக ஆரம்பித்தால் வெற்றி நம்கையில் தான்.

கணிதம்: Number system, BODMAS, Decimals, Fractions, LCM, HCF, Ratio and Proportion, Percentages, Mensuration, Time and Work; Time and Distance, Simple and Compound Interest, Profit and Loss, Algebra, Geometry and Trigonometry, Elementary Statistics, Square Root, Age Calculations, Calendar & Clock, Pipes & Cistern ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

ஜெனரல் இன்டலிஜென்ஸ் & ரீசனிங்: Analogies, Alphabetical and Number Series, Coding and Decoding, Mathematical operations, Relationships, Syllogism, Jumbling, Venn Diagram, Data Interpretation and Sufficiency, Conclusions and Decision Making, Similarities and Differences, Analytical reasoning, Classification, Directions, Statement – Arguments and Assumptions ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். 

ஜெனரல் சயின்ஸ்: பத்தாம் வகுப்பு பாட அளவிலான இயற்பியல், வேதியியல் மற்றும் லைஃப் சயின்ஸ்.

ஜெனரல் அவேர்னஸ் (தற்போதைய நிகழ்வுகள்): சயின்ஸ் & டெக்னாலஜி, ஸ்போர்ட்ஸ், Culture, Personalities, Economics, Politics ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். தற்போதைய நிகழ்வுகளை அதிகம் தெரிந்துகொள்வது அவசியம்.

முதல்கட்ட தேர்வுக்கான சில பகுதிகளை தயார் செய்வதற்காக கொடுத்துள்ளோம். இதற்கான புத்தகங்கள் கடைகளிலும், ஆன்லைனிலும் கிடைக்கிறது. தயார் செய்வதற்கு முன் புத்தகங்களையும், குறிப்புகளையும் சேகரித்துகொள்வது நல்லது… இன்னும் இந்த பணிக்கு விண்ணப்பிக்காதவர்கள் மார்ச் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும். 

(தொடரும்)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com