முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும்முகநூல்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும்|அடக்க முடியாதவர் திருவாளர் டிரம்ப்!

" பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அப்படியே மாயமாக மறைந்துவிடமாட்டாரா என்று உள்ளூர நினைப்பார் என்றே ஊகிக்கிறேன்." - ப. சிதம்பரம்
Published on

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏதேனும் ஒரு தருணத்தில் - ‘நம்மைவிட்டு இவர் விலகியிருந்தால் நிம்மதி’ என்று நினைப்போம், ஆனால் அவரோ விடாக்கண்டராக நம்மையே சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருப்பார்; அப்படி அட்டைபோல ஒட்டிக் கொண்டிருப்பவரைத்தான் ‘ஒட்டுண்ணி’ என்கின்றனர். இந்த நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அப்படியே மாயமாக மறைந்துவிடமாட்டாரா என்று உள்ளூர நினைப்பார் என்றே ஊகிக்கிறேன் - ஆனால் டிரம்போ அவருடைய ஆசையை நிச்சயம் நிறைவேற்றமாட்டார்!

பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-இல் நிகழ்ந்த பயங்கரவாதிகள் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலில், அமெரிக்காவுக்கும் சில பொறுப்புகள் இருப்பதாக டிரம்ப் நம்புகிறார். ஒவ்வொரு முறை பேசும்போதும், அறிக்கைகள் தரும்போதும் இதை அவர் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். இதற்கு மோடியின் பதில், இதுவரையில் மௌனமாகத்தான் இருக்கிறது. அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் டொனால்ட் டிரம்ப் இரண்டாம் முறை போட்டியிட்ட போது (2019 செப்டம்பர் ஹூஸ்டனில்), ‘அடுத்த முறை – டிரம்ப் சர்க்கார்’ என்று ஆதரித்துப் பேசியதற்காக தன்னையே நொந்து கொண்டிருப்பார் மோடி என்றே நம்புகிறேன். 2023 இறுதியில் நடந்த அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக வென்று மீண்டும் வெள்ளை மாளிகைக்கு வந்துவிட்டார் டிரம்ப் – இன்னும் மூன்றரை ஆண்டுகளுக்கு அவர் அந்தப் பதவியிலேயே இருப்பார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும்... |‘தோற்றவரின் தோழனாக’ இருக்கப் போகிறதா இந்தியா?

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் சுற்றி வளைத்து சுட்டுக்கொன்ற ஏப்ரல் 22-ஆம் நாள், உலகின் பிற தலைவர்களைப் போலவே டிரம்பும் அதிர்ச்சியும் கண்டனமும் தெரிவித்தார். ஏப்ரல் 25-இலிலோ, ‘இரு நாடுகளும் ஏதோ ஒரு வகையில் இதை முடிவுக்குக் கொண்டுவரும்’ என்றார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும்.. |பேராபத்தில் பல்கலைக்கழக கல்வி! உயர் கல்விக்கு சேதம்!

மே 7-ஆம் நாள் குறிப்பிட்ட சில இலக்குகளை மட்டும் தேர்ந்தெடுத்து பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரத்திலும் டிரோன்கள், ஏவுகணைகள் மூலம் துல்லியத் தாக்குதல் நடத்திய இந்தியா, முழு அளவுப் போரில் இறங்க இப்போது விரும்பவில்லை என்று உணர்த்தியது; ‘இது வெகு விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன்’ என்றுதான் டிரம்பும் கருத்து தெரிவித்தார். அடுத்த நாளும் தாக்குதல்கள் தொடர்ந்தபோது, ‘என்னால் ஏதேனும் உதவி செய்ய முடியுமென்றால், நிச்சயம் அங்கிருப்பேன்’ என்றும் அறிவித்தார். இவையெல்லாம் நிகழ்வுகளை ஒட்டிய அவருடைய எதிர்வினைகள்.

அதிர்ச்சி, குழப்பம்

மே மாதம் 8 – 9 ஆம் தேதி இரவுக்குள் பெரிய மாறுதல் ஏற்பட்டது. சீனத்தில் தயாரிக்கப்பட்ட போர் விமானங்களும் துருக்கியில் தயாரிக்கப்பட்ட டிரோன்களும் இந்திய இலக்குகளைத் தாக்க பாகிஸ்தானால் பயன்படுத்தப்பட்டன. அப்படி அலையலையாக இந்திய ராணுவ கேந்திரங்கள், விமான தளங்கள் மீது பாகிஸ்தான் நிகழ்த்திய அனைத்து தாக்குதல்களும் தடுத்து முறியடிக்கப்பட்டன என்று மூத்த இந்திய ராணுவ அதிகாரி தெரிவித்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும்... |ஒருபுறம் கடல்பாறை – மறுபுறம் நீர்ச்சுழல்!

இந்த மோதல்களின்போது இந்திய ராணுவத் தரப்பிலும் சிறிது சேதம் ஏற்பட்டது என்பதையும் ஒப்புக்கொண்ட ராணுவத் தலைமை, அதைப் பற்றி அதிகம் கவலை கொள்ளவில்லை. மக்களும் இந்த மோதல்களால் அச்சத்தில் உறையவில்லை. ஆனால், மே 10-இல் அமெரிக்க அதிபர் தனிப்பட்ட தன்னுடைய (ட்ரூத் சோஷியல்) சமூக ஊடக வலைதளத்தில் மாலை 5.25 மணிக்கு பதிவிட்ட தகவல்தான் எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தியது. ‘இரவு நீண்ட நேரம் நாங்கள் நடத்திய மத்தியஸ்த பேச்சுக்குப் பிறகு இரு நாடுகளும் உடனடியாகவும் முழுமையாகவும் போர் நிறுத்தத்துக்கு சம்மதித்தன; இரு நாடுகளுக்கும் பாராட்டுகள்…’

சில நிமிடங்களுக்கெல்லாம் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியிட்ட பதிவு, ‘இந்தியாவும் பாகிஸ்தானும் நடுநிலையான ஓர் நாட்டில் அடுத்து சந்தித்துப் பேசும்’ என்று தெரிவித்தது. “முந்தைய நாள் இரவில் பிரதமர் மோடியுடன் பேசிய அமெரிக்க துணை அதிபர் வான்ஸ், இந்தியாவுக்கு பெரிய கவலையை ஏற்படுத்தக்கூடிய ஒரு தகவலைப் பகிர்ந்துகொண்டார்” என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தன.

இந்தத் தகவல்கள் அனைத்துமே புதிராகவும் அதிர்ச்சி அளிப்பதாகவும் உள்ளன என்பதை சுட்டிக்காட்டியாக வேண்டும்.

இரு நாடுகளின் ராணுவத் தலைமை அதிகாரிகள் பிற்பகல் 3.35 மணிக்கு சந்தித்துப் பேசினர், மாலை 5 மணி முதல் போர்நிறுத்தம் உறுதியானது என்று இந்திய வெளியுறவுத்துறை செயலர் மே 10 மாலை 6 மணிக்கு உறுதிப்படுத்தினார். அதற்குப் பிறகு மோதல்கள் நின்றன. அதிபர் டிரம்ப் தெரிவித்த தகவல்கள் அனைத்துமே தவறானவை. நம்முடைய ராணுவத்தின் முப்படைகளும் தீரத்துடன் போரிட்டு பல வெற்றிகளை வெவ்வேறு இடங்களில் பெற்றதால் மோதல்கள் நின்றன.

வெகுமதியும் வெருட்டல்களும்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும்|பஹல்காமுக்கு தக்க பதிலடி!

 ‘மிகப்பெரிய அணு ஆயுத மோதலைத் தடுத்து நிறுத்திவிட்டதாக’ மே 12-இல் டிரம்ப் பெருமைப்பட்டுக்கொண்டார். “நாம் இதை நிறுத்தியாக வேண்டும். நீங்கள் (இந்தியா – பாகிஸ்தான்) இதை நிறுத்தினால் நாம் வர்த்தக உறவைத் தொடரலாம். நிறுத்தாவிட்டால் நாங்கள் வர்த்தக நடவடிக்கைகளை நிறுத்திவிடுவோம்” என்று டிரம்ப் சார்பில் எச்சரித்ததாக தெரிவிக்கப்பட்டது. (இதையே அவர் சவுதி அரேபியா, கத்தார் ஆகிய நாடுகள் பயணத்தின்போதும் நிருபர்களிடம் தெரிவித்தார்.) இனி பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கு இந்தியா எப்படிப்பட்ட எதிர்வினைகளை ஆற்றும் என்பதை மே 13-ஆம் அறிவித்த பிரதமர் மோடி, ‘அணு குண்டுகளை வைத்திருக்கிறோம் – வீசி விடுவோம் என்ற பூச்சாண்டிக்கெல்லாம் இந்தியா இனி அஞ்சாது’ என்றும் எச்சரித்தார்.

நாம் நம்முடைய ராணுவத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கெல்லாம் ஆதரவு தர வேண்டும் என்பது சரிதான்; ஆனால் அரசின் முடிவுகள் குறித்து நிச்சயம் கேள்விகள் கேட்கப்படும். அரசைக் கேள்வி கேட்பது ஜனநாயகத்தில் மக்களுடைய உரிமை.

கேள்விகளும் பதில்களும்

சில நியாயமான கேள்விகள் வருமாறு:

1. அரசின் மூன்று அம்ச உத்தியில் ‘புதிது’ ஏதுமில்லை: பயங்கரவாத தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்; அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவோம் என்ற மிரட்டலை சகித்துக் கொள்ள முடியாது; அரசே முன்னின்று நிகழ்த்தும் பயங்கரவாதச் செயல்களுக்கும் - அரசின் ஆதரவில் இயக்கங்கள் அல்லது அமைப்புகள் நிகழ்த்தும் பயங்கரவாதச் செயல்களுக்கும் வேறுபாடுகள் கிடையாது. இவ்வாறு ஏற்கெனவே நன்கு உறுதியாக கடைப்பிடிக்கப்பட்ட ராணுவக் கொள்கைகளுக்கு, மோடி இப்போது சிவப்பு அடிக்கோடுதானே இட்டிருக்கிறார்?

2. அமெரிக்க துணை அதிபர் வான்ஸ், வெளியுறவு அமைச்சர் ரூபியோ இருவரும் மே 8 -9 ஆகிய நாள்களில் போர் நிறுத்தம் குறித்துப் பேசினரா? அதே நாளில் அவர்கள் பாகிஸ்தானுடனும் பேசினார்கள் என்றால் அது மத்தியஸ்தம் என்றாகிவிடாதா?

3. இந்தியாவுக்கு அச்சமூட்டும் உளவுத்தகவல் – அணு ஆயுதத்தைப் பாகிஸ்தான் பயன்படுத்தும் என்பதை மே 9 பேச்சில் மோடியுடன் பகிர்ந்து கொண்டாரா வான்ஸ்? அப்படி இல்லையென்றால் பிரதமர் (மே 12), ராணுவ அமைச்சர் (மே 15) இருவரும் ஏன் அணு ஆயுதத் தாக்குதல் மிரட்டல் குறித்துப் பேசினர்?

4. இரு நாடுகளின் ராணுவத் தலைமை அதிகாரிகள் (டிஜிஎம்ஓக்கள்) மாலை 3.35 மணிக்கு போர் நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டனர் என்பது அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எப்படித் தெரிந்து, மாலை 5.25 மணி ட்வீட்டில் அதைப் பகிர்ந்துகொண்டார்?

5. இரு நாடுகளுக்கும் இடையில் இறக்குமதி வரியை விதிப்பது தொடர்பான மோதலை ஏப்ரல் 2-இல் டிரம்ப் தொடங்கிய பிறகு, மாற்று யோசனைகளை இந்தியா அனுப்பவில்லையா? இந்தியாவுக்கு வந்த அமெரிக்க துணை அதிபர் வான்ஸ், மோடியுடனான சந்திப்பின்போது அதை வலியுறுத்திப் பேசவில்லையா?

6. ‘இரு நாடுகளுக்கும் இடையில் நான்தான் மத்தியஸ்தம் செய்தேன், நான் சொல்வதைக் கேட்காவிட்டால் வர்த்தகத்தை நிறுத்திவிடுவேன் என்று எச்சரித்ததாக’ டிரம்ப் பின்னர் அறிவித்ததற்கு இந்தியா எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லையா?

7. பாகிஸ்தானுக்குப் பெரும் தொகையை ‘பன்னாட்டுச் செலாவணி நிதியம்’ (ஐஎம்எஃப்) வழங்குவதற்கான வாக்கெடுப்பில் இந்தியா ஏன் கலந்துகொள்ளவில்லை?

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும்|பஹல்காமுக்கு தக்க பதிலடி!

இவையெல்லாம் இந்த விவகாரம் தொடர்பான பிற கேள்விகள், ஆனால் அவற்றைக் கேட்பதற்கான நேரமும், இடமும் இதுவல்ல. கட்டுக்கடங்காதவர் டிரம்ப். அவர் திடீரென்று மாயமாக மறைந்துவிடவும் மாட்டார், தொடர்ந்து தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் அறிக்கைகளை வெளியிட்டுக்கொண்டே இருப்பார், பல கேள்விகளுக்கு அவர் நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டே இருப்பார்; இந்தக் கேள்விகளுக்கெல்லாம் (அரசிடமிருந்து) விடை கிடைக்குமா - அல்லது மௌனமே விடையாகிவிடுமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com