புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டுச் சந்தையின் சிறப்பு என்ன? - ஒரு ஸ்பாட் விசிட்

புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டுச் சந்தையின் சிறப்பு என்ன? - ஒரு ஸ்பாட் விசிட்

புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டுச் சந்தையின் சிறப்பு என்ன? - ஒரு ஸ்பாட் விசிட்
Published on

தமிழர் உணவுகளில் இறைச்சி உணவுகளுக்கு எப்போது தனியிடம் உண்டு. ஆடு வெட்டி திருவிழா நடத்துவதை தனித் திருவிழாவாகவே நடுத்தும் பழக்கம் நம்மிடையே உண்டு. வாரம் இருமுறையேயும் இறைச்சி உணவு உட்கொள்வது பல குடும்பங்களில் பழக்கமாக உள்ளது. இதனால் இந்த ஆடு வளர்ப்புத் தொழிலுக்கும் நல்ல சந்தை மதிப்பு எப்போதும் உண்டு. தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் இன்றளவும் ஆட்டுச் சந்தை நடைபெறும் வழக்கம் உண்டு. அந்தவகையில், தமிழகத்தின் புகழ்பெற்ற ஆட்டுச் சந்தைகளில் ஒன்று, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் நடைபெறும் ஆட்டுச் சந்தை. வாரம்தோறும் சனிக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டுச் சந்தைக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பொதுமக்களும் வியாபாரிகளும் வந்து கலந்துகொள்கின்றனர்.

இந்த ஆட்டுச் சந்தை, எட்டயபுரம் மன்னர் குடும்பத்தினரால் 70 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக எட்டயபுரம் பேரூராட்சி நிர்வாகத்தால் இந்த ஆட்டுச் சந்தை நிர்வகிக்கப்பட்டு வருகிறது. எட்டயபுரம் சந்தைக்கு வெள்ளாடு, செம்மறியாடு உள்ளிட்ட ஆட்டு வகைகள் வாரம்தோறும் ஆயிரக்கணக்கில் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்தச் சந்தைக்கு தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆடு வளர்ப்போர் பலரும் வந்து வியாபாரம் செய்கின்றனர்.

தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் புரட்டாசி மாதம் முதல் தை மாதம் வரை மட்டுமே விவசாயம் நடைபெறும். ஏனென்றால் வானம் பார்த்த பூமியான இந்தப் பகுதிகளில் மழை பெய்தால் மட்டுமே மானாவாரி விவசாயம் நடைபெறும். மற்ற மாதங்களில் இந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஆடுகளை வாங்கி மேய்ச்சலுக்கு விட்டு வருமானம் ஈட்டுகின்றனர்.

இயற்கை முறையில் வளர்க்கப்படுவதால், இந்தப் பகுதி ஆடுகளின் இறைச்சி சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். தூத்துக்குடி, மதுரை, நெல்லை, மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த இறைச்சிக் கடை வியாபாரிகள் அதிகளவில் வந்து இந்தச் சந்தையில் ஆடுகளை வாங்கிச் செல்கின்றனர்.

இந்த ஆட்டுச் சந்தையில் வாரம்தோறும் ஆராயிரம் முதல் எட்டாயிரம் ஆடுகள் வரை விற்பனைக்கு வருகின்றன. சுமார் இரண்டு கோடி ரூபாய் வரை விற்பனையும் நடைபெறும். தீபாவளி, பொங்கல், ரம்ஜான், பக்ரீத் உள்ளிட்ட காலங்களில் எட்டாயிரம் முதல் பனிரெண்டாயிரம் ஆடுகள் வரை இந்தச் சந்தைக்கு விற்பனைக்கு வருகின்றன. இதுபோன்ற முக்கியமான பண்டிகைக் காலங்களில் ஐந்து கோடி முதல் ஏழு கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும்.

மேலும் ஆடு விற்பனை செய்யவருகிறவர்கள், ஆடுகள் வாங்க வருகிறவர்கள், தரகர்கள் என ஆறு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தச் சந்தையில் கூடுவர். பார்ப்பதற்கு திருவிழா போல இருக்கும் எட்டயபுரம் ஆட்டுச் சந்தை விவசாயிகளின் முக்கிய வணிகத்தளமாக உள்ளது.

காதுகுத்தோ, கருமாதியோ நறுக்குனு நாலு நல்லி எலும்ப கடிச்சாத்தானே விழாவ சிறப்பிக்க முடியும் மக்கா..!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com