560 சதுரடியில், வெறும் ரூ.10 லட்சம் செலவில்! பெரிய தோட்டதோடு அனைத்து வசதிகளுடன் ஒரு MINIMALIST வீடு!

வீடு கட்ட வேண்டும் என்பது ஒவ்வொருவரின் ஆசை மட்டுமல்ல தேவையும் கூட. நாம ஒருதடவ கட்டுற வீடு, அடுத்து நம்மோட 3 தலைமுறைக்கும் கண்டிப்பா பயன்படும் என்றே சொல்லலாம்.
minimalist house
minimalist housept desk

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

வீடு கட்ட வேண்டும் என்பது ஒவ்வொருவரின் ஆசை மட்டுமல்ல தேவையும் கூட. நாம ஒருதடவ கட்டுற வீடு, அடுத்து நம்மோட 3 தலைமுறைக்கும் கண்டிப்பா பயன்படும் என்றே சொல்லலாம்.

அப்படிப்பட்ட வீட்டை நமது தேவைக்கேற்ப நாமலே டிசைன் பண்ணி கட்டுறதுதான் சிறந்தது. இந்த தொடரில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 560 சதுரடியில். 10 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒரு கார்டன் ஹவுஸை பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்..

என்ன சொல்கிறார் வீட்டின் உரிமையாளர்?

’நாங்க ரெண்டு பேருதான் இங்க இருக்கோம்’ என பேச ஆரம்பித்தார் வீட்டின் உரிமையாளர் சுரேஷ் குமார். ’எங்க குழந்தைக ஜெர்மனியில இருக்காங்க. எங்களுக்கு ஒரு பிளாட் ஏற்கெனவே இருக்கு. ஆனாலும் சின்னதா ஒரு வீடு தேவைப்பட்டது. ஈஸியா சுத்தம் செய்ற மாதிரியும், பராமரிக்கிற மாதிரியும், தோட்டத்துல இருக்குற மாதிரி ஒரு வீட்டை கட்ட முடிவு செஞ்சு இந்த வீட்டை கட்டியிருக்கோம். இதில், தோட்டத்திற்கு அதிக இடமும். அதில் சின்னதா ஒரு வீடும் கட்டியிருக்கோம். இது தோட்டத்தோட சேர்ந்த ஒரு வீடு, ஆனால், வீட்டோட சேர்ந்த தோட்டமில்லை’ என்றனர். அப்படி இந்த வீட்ல என்னதான் இருக்கு வாங்க பார்க்கலாம்.

minimalist house
minimalist housept desk

இது ஒரு MINIMALIST வீடு.

இந்த வீட்டுக்கு 4 அடி உயரத்துல பில்லர் பவுண்டேசன் போட்டிருக்காங்க. இந்த வீட்டைச் சுற்றி பச்சை பசேல் என கார்டன் அமச்சிருக்காங்க. அதுல சோலார் விளக்குகள் வைக்கப்பட்டுள்ளது. இது மாலை நேரத்தில் தானாகவே எரியும் வகையில் வடிவமைக்ப்பட்டுள்ளது. கார்டனோட தரைத்தளத்துக்கு சிமெண்ட் டைல்ஸ் பயன்படுத்தி இருக்காங்க. இந்த வீட்டோட முகப்பு படிக்கு தந்தூர் ஸ்டோன் பயன்படுத்தி இருக்காங்க. அதேபோல இந்த வீட்டோட சிட் அவுட் தரைத்தளத்துக்கு வெர்ட்டிபைட் மேட் ப்னிஸ் டைல் பயன்படுத்தி இருக்காங்க.

இது ஒரு MINIMALIST வீடு. இது default design ஆக இருக்கு. அது என்னன்னா, ஹால், ஓப்பன் டைனிங் ஏரியா, ஓப்பன் கிச்சன் இருக்கும். அதே default design தான் இந்த வீட்லேயும் பாலோ பண்ணியிருக்காங்க. இந்த வீட்டோட ஹால், 13 X 12 சைஸ்ல இருக்குற ஒரு பெரிய ஹால். ஹாலோட சீலிங் அமைக்க ஜிப்சம் பயன்படுத்தி இருக்காங்க. இது பாக்குறதுக்கு நல்லா இருக்கு. இங்க இருக்குற கிச்சன் பாக்குறதுக்கு பெரியதாக இருக்கு. இரண்டு பேர் நின்றுகூட வேலை பார்க்குற அளவுக்கு பெரிய மாடுலர் கிச்சன். இதோட சிலாப்புக்கு பிளாக் ஜெட் கிரானைட் பயன்படுத்தி இருக்காங்க. அதேபோல சுவருக்கு மேட் ப்னிசிங் டைல்ஸ் பயன்படுத்தி இருக்காங்க.

ஓப்பன் டூ ஸ்கை ரெஸ்ட் ரூம்

9 X 9 சைஸ்ல அழகான பெட்ரூம் கட்டியிருக்காங்க. அதுல ஓப்பன் டூ ஸ்கை ரெஸ்ட் ரூம் இருக்கு. இதன் மேற்புறம் ஓப்பனாக இருக்கு. இந்த வீட்டை சுற்றி வீடுகள் இருக்கு அதன் மாடியில் இருந்து பார்த்தால் உள்ளே இருப்பவர்கள் தெரியக்கூடாது என்பதற்காக கிளாஸ் போட்டுருக்காங்க. இந்த கிளாஸ் வெளிச்சத்தை மட்டுமே கொடுக்கும். ஆனால் வெளியே இருந்து பார்த்தால் உள்ளே இருப்பது தெரியாது. இந்த டிசைன் எதுக்குன்னா, ஓப்பனாக இருப்பதால் இந்த இடம் விரைவில் காய்ந்து விடும். இது தான் இந்த டிசைனோட அட்வான்டேஜ்

kitchen
kitchenpt desk

சாய்ஸ் ஆப் கலர் ரொம்பவே நல்லா இருக்கு

இந்த வீட்டுக்கு அவங்க பயன்படுத்தி இருக்குற சாய்ஸ் ஆப் கலர் ரொம்பவே நல்லா இருக்கு. இதுல பெரும்பான்மையா ஒயிட் மேமிலியும சேண்டல் பேமிலியும் அதிகமா பயன்படுத்தி இருக்காங்க. அதேபோல் கிரே கலரும் அதிகமா பயன்படுத்தி இருக்காங்க. இந்த கலர் எல்லாம் இந்த வீட்டுக்கு கூடுதல் அழகை சேர்க்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இதுபோன்ற சின்னதா இருக்குற வீட்டுல ஒயிட் கலர் பயன்படுத்தினால் பெரிய வீடு போலவே காட்சியளிக்கும்.

ஒரு நல்ல வீட்டுக்குத் தேவையான எல்லா விசயமும் இந்த வீட்ல இருக்கு

2 பேர் தங்குற மாதிரி சிங்கிள் பெட்ரூம் போதும்னு கேட்டாங்க. இந்த வீட்ல எல்லா இடமும் அவங்களுக்குத் தேவையான அளவு இருக்கும். ரொம்ப இட நெருக்கடியோட இருக்காது. வீட்டு உரிமையாளர் ஆசைப்படும் எல்லா விஷயமும் இந்த வீட்ல இருக்கு. அதேமாதிரி நிறைய ஸ்டோரேஜ் பேஸ் இருக்கு. உபயோகப்படுத்தவும் நிறைய இடம் இருக்கு. ஒரு நல்ல வீட்டுக்குத் தேவையான எல்லா விசயமும் இந்த வீட்ல இருக்கு 8 சென்ட் இடத்துல அமைந்துள்ள இந்த வீட்ல, நல்ல காற்றோடத்தோடு ப்ரீயா நடமாட வீட்டுக்கு வெளியே நிறைய காலி இடம் இருக்க வேண்டும்னு ஆசைப்பட்டாங்க. அதுபோல வடிவமைச்சிருக்கோம் என்றார் கட்டட வடிவமைப்பாளர் ஷெஹீனா.

building designer
building designerpt desk

நிலச்சரிவிpல் இருந்து நம்மை பாதுகாக்கும் கேபியன் வால்

அடுத்ததா இந்த வீட்டோட பால்கனி. இந்த பால்கனிக்கு வர்ற வழியில இரு பிரன்ஸ் வின்டோ வச்சிருக்காங்க. இந்த MINIMALIST வீட்டுல சிலைடிங் டோர் ரொம்பவே இடத்தை அடைக்காது. இந்த பால்கனியோட தரைத்தளத்துக்கு கிரே கலர் பார்க்கிங் டைல் பயன்படுத்தி இருக்காங்க. இந்த பால்கனியோட ஒரு பக்கத்துல கேபியன் வால் வச்சிருக்காங்க. இது எதுக்குன்னா, நிலச்சரிவு அதிகம் உள்ள பகுதிகள்ல இது மாதிரி கட்டியிருப்பாங்க. இதுல அந்த பகுதியில கிடைக்கும் கற்களை பயன்படுத்தி இருக்காங்க. இது நிலச்சரிவுல இருந்த கண்டிப்பா நம்மள பாதுகாக்கும்.

அறிவோம் அரி பெட்டி, கால் பெட்டி

அடுத்ததா இந்த வீட்ல இருக்குற கவுண்டர் டேபிளை பத்தி சொல்ல வேண்டும். இந்த டேபிள், பத்தாயம் ஒன்றிலிருந்த செஞ்சது. பத்தாயம் என்றால் பழைய வீடுகளில் உள்ள பெரிய ஸ்டோரேஜ் பாக்ஸ். இதுல நெல் போன்ற தானியங்களை சேமிக்க பயன்படுத்துவாங்க இந்த பத்தாயத்தை பயன்படுத்தி தான் இந்த கவுண்டர் டேபிளை செஞ்சிருக்காங்க.

radha devi
radha devipt desk

அதேமாதிரி இங்க இருக்குற அரி பெட்டியில அரி (அரிசி) போட்டு வைக்கலாம். இந்த பெட்டியில உள்ள சின்ன சின்ன அறையில மளிகைப் பொருட்களை போட்டு வைக்கலாம். இது என்னோட அம்மாவோட காலத்துல செஞ்சது.. இங்க இருக்குற கால் பெட்டி என்னோட பாட்டி காலத்துல செஞ்சது. இது ஒரு மினி பீரோ மாதிரி. இதுல 3 அல்லது 4 செட் டிரஸ்தான் வைக்க முடியும் என பெருமையுடன் சொன்னார் ராதாதேவி. நான் நிறைய வெளி நாடுகளுக்கு போயிருக்கேன். அங்கு கிடைக்கும் சின்ன சின்ன அழகிய பொருட்களை வாங்குவேன். அதுல நிறைய பழங்கால பொருட்களும் இருக்கும். இந்த பொருட்களை என்னோட பிளாட்ல வைக்கிறதுக்கு பதிலா இதுபோல இயற்கையோடு ஒன்றியிருக்கும் வீட்ல இந்த பொருளை வச்சா நல்லா இருக்கும். என்றார் சுரேஷ் குமார்.

front door
front doorpt desk

இந்த வாரம் பார்த்த வீடும் கண்டிப்பா உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புறோம். மீண்டும் இது போன்ற வீட்டோட தகவலுடன் மீண்டும் பார்ப்போம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com