மரபு சார்ந்த கட்டுமானத்தில் நத்தை வடிவ வட்ட வீடு.. பிரம்மாண்டமாக ஆனால் பாதி செலவில் கட்டலாம்!

இந்த உலகம் நிலைத்தன்மை அற்றது என்று சொல்வார்கள். அதற்கு கட்டுமானத் துறையில ஒரு உதாரணம் சொல்லணும்னா மரபு சார்ந்த கட்டுமானத்தை நோக்கி, மறுபடியும் மக்கள் போவதைச் சொல்லலாம்.
Round house
Round houseptdesk

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

தருமபுரி மாவட்டம் நாகர்கூடல் என்ற இடத்தில் 3600 சாதுரடியில் ரூ.40 லட்சம் செலவில், நத்தையின் டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ள வட்ட வடிவிலான வீட்டின் சிறப்பை பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்..

இந்த வீட்டைப் பற்றி அதன் உரிமையாளர்கள் செல்வதென்ன?

2016-ல இந்த வீட்டை கட்ட ஆரம்பித்து, இரண்டரை வருடங்களில் கட்டி முடித்தோம். பெரிய நகரங்களிலேயே வாழ்ந்து வந்த நான், நல்ல காற்று மற்றும் வெளிச்சத்தோட கிராம சூழலில ஒரு வீடு கட்டலாம் என இந்த இடத்தை தேர்ந்தெடுத்து சூழியல் கெடாமல் ஒரு வீடு கட்ட முடிவு செய்து இந்த வீட்டை கட்டியுள்ளோம். இந்த பகுதியில் கிடைக்கு கல் மற்றும் மண்ணை பயன்படுத்தி கட்ட முடிவு செஞ்சோம்.

நாங்கள் இந்த வீட்டை கட்டும்போது, இப்படியொரு வீட்டை கட்டுவது சாத்தியமா என எங்கள் உறவினர்கள் கேட்டார்கள். ஆனால், கட்டி முடித்து நாங்கள் இங்கு இருப்பதை பார்த்து, இருந்தா இப்படியொரு வீட்லதான் இருக்கணும்னு சொல்றாங்க. லைட். பேன், ஏசி எதுவுமே தேவையின்றி, இயற்கையோடு ரொம்ப சந்தோசமா இங்கு வாழ முடியுது. இந்த வீடு வட்ட வடிவில இருப்பதால். சூரியன் ஒரு திசையில் உதித்து மற்றொரு திசைக்கு போகும்போது, சூரியன் உதிக்கும் மற்றும் மறையும் பகுதியிலும் வெப்பம் அதிகமாக இருக்கும். ஆனால் வட்ட வடிவமான இந்த வீட்டில் அதன் எதிர் திசையில் உள்ள அறைகள் எப்போதும்; சில்லென இருக்கும்.

இந்த வீட்டை கட்டுவதில் மிகுந்த சிரமமும் நிறையபேத்தோட உழைப்பும் இருக்கு. இந்த வீட்டை கட்டி முடிப்பதற்குள் நிறை கற்றுக் கொண்டோம். எல்லா வீட்டையும் போல இந்த வீட்டையும் சதுரம் செவ்வகம் வடிவத்தில் கட்டாமல் வித்தியாசமான வடிவத்தில் கட்டலாம் என முடிவு செய்து அதன் படியே வடிவமைத்தோம். அதன்பிறகு இந்த பகுதியில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே இந்த வீட்டை கட்டியிருக்கோம்” என்று இந்த வீட்டை கட்டிய அனுபவத்தையும் அங்கு கிடைக்கும் சந்தோஷத்தையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார்கள் வீட்டின் உரிமையாளர்களான சுரேஷ்குமார் கீதா தம்பதியர். அவர்கள் புகழும் அளவிற்கு இந்த வீட்டில் என்ன இருக்கிறது வாங்க பார்க்கலாம்.

வட்ட வடிவ வீட்டின் மொத்த சிறப்பு என்ன?

பார்ப்பதற்கு நத்தைபோல் இருக்கும் இந்த வீட்டின் வெளிப்புறம் செங்கல் வைத்து தரைத்தளம் அமைத்துள்ளார்கள். அதேபோல் வீட்டோட சிட் அவுட் தரைத்தளத்திற்கு ரெட் ஆக்சைட் போட்டிருக்காங்க. அதில், விரிசல் ஏற்படாமல் இருக்க கயிறு மூலமாக பிரித்திருக்கிறார்கள். அடுத்ததா சேம்பர் செங்கலால் ஆன ஆர்ச். இந்த ஆர்ச்சை எழுப்ப சிமெண்ட் பயன்படுத்தவில்லை அதற்கு பதிலாக சுண்ணாம்பு கலவைதான் பயன்படுத்தி இருக்காங்க. வேங்கை மரத்தால் செய்யப்பட்ட இந்த வீட்டோட முன்கதவில் அழகிய வேலைப்பாடுகள் காணப்படுகிறது.

house
housept desk

இந்த வீட்டோட வெளிப்புறச் சுவர் அனைத்தும் கல்லால் எழுப்பப்பட்டுள்ளது. அதேபோல உட்புற தடுப்புச் சுவர்கள் அனைத்துக்கும் செங்கல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த செங்கல் சுவற்றின் மேல் பகுதியை சாணம் கொண்டு கையால் மொழுகியிருக்காங்க. இந்த வட்ட வடிவ வீட்டோட பெரிய ஹாலில் கடப்பா கல்லால் ஆன சீட்டிங் அமச்சிருக்காங்க. அதில், மண், கடுக்காய், வெல்லம் தண்ணி மற்றும் சுண்ணாம்பு பாலால் ஆன கலவையில் கூலாங்கற்களைக் கொண்டு சாய்மானம் அமைக்கப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு அழகாகவும் வித்தியாசமாகவும் காட்சியளிக்கிறது. அதேபோல் ஹாலின் தரை பகுதிக்கு டெரகோட்டா டைல் போட்டிருக்காங்க.

கீழே அமர்ந்து சாப்பிடும் படி அமைக்கப்பட்டுள்ள ஓப்பன் டைனிங் ஹால்

அடுத்ததா டைனிங் டேபிள் இல்லாத ஒரு ஓப்பன் டைனிங் ஏரியா. தரையில் அமர்ந்துதான் சாப்பிடுவதாக சொன்னாங்க. அதேபோல இயற்கையான பொருட்களைக் கொண்டு சுவர்களுக்கு வர்ணம் தீட்டியிருக்காங்க. இது பார்ப்பதற்கு வித்தியாசமா நல்லா இருக்கு. அடுத்து கிச்சன்..

கிச்சன் ஸ்லாப்புக்கு கடப்பா கல் பயன்படுத்தி இருக்காங்க. பொதுவா கிச்சன் சுவற்றில் டைல்ஸ் ஒட்டியிருப்பாங்க. ஆனா, இந்த வீட்ல தரைத்தளத்துக்கு போட்டிருக்கிற டெரக்கோட்டா ஓடு இங்கும் பயன்படுத்தப்பட்டிருக்கு அதன் மேல் பெயிண்ட் அடித்திருப்பதால் அது பார்ப்பதற்க வித்தியாசமாக தெரியுது.

wall
wallpt desk

இந்த கிச்சன்ல ரொம்ப புடுச்சது என்னன்னா, பாத்திரங்களை கழுவி கவிழ்த்தி வைப்பதற்கு பிரத்யேகமாக ஒரு ஸ்லாப் அமைச்சிருக்காங்க இந்த ஸ்லாப்பில் கவிழ்த்தி வைக்கப்படும் பாத்திரங்களில் உள்ள தண்ணீர் எளிதாக வெளியேறுவதோடு பாத்திரங்கள் விரைவாக உலர்ந்து விடுகிறது.

எனக்கு கிச்சன் ரொம்ப பிடிக்கும். எங்க வீட்டுக்கு வர்றவுங்க எல்லாருமே கிச்சன் ரொம்ப அழகா இருக்குன்னு சொல்லுவாங்க. அவங்க சொல்ற மாதிரியே கிச்சன் நல்லா வெளிச்சமா இருக்கு. சிம்னி எதுவுமே தேவையில்லை. அடுப்படிக்குத் தேவையான அனைத்தும் இயற்கையாகவே அமைந்திருக்கிறது என்றார் கீதா.

house
housept desk

சீலிங் அமைக்க 50 சதவீத செலவு குறைவு காரணமென்ன?

இந்த வீட்டோட தரைத்தளத்தில் உள்ள சீலிங் முழுவதும் பில்லர் ஸ்லாப் சீலிங் முறையில் அமச்சிருக்காங்க. சிமெண்ட் மற்றும் ஸ்டீல் பயன்படுத்தாததால் இந்த வீட்டோட கட்டுமான செலவு 50 சதவீதம் குறைவு என்றும் சொன்னாங்க. சீலிங் முழுவதும் இரண்டு ஓடுகள் பயன்படுத்தி, பட்ஜெட்டை குறைத்து பக்காவா கட்டியிருக்காங்க.

கொஞ்சம் பெரிய வீடுகள்ல பார்த்தால் ஒரு மினி தியேட்டர் செட்டப் இருக்கும், இதேமாதிரி இந்த வீட்லேயும் ஒரு ரூம் ரெடிபண்ணி வச்சிருக்காங்க. இந்த ரூமோட சுவரின் மேற்பகுதியில சிறு சிறு ஓட்டை போட்டு இருக்காங்க. இது எதுக்குன்னா, காற்று வெளியே போவதற்கு என்று சொன்னாங்க. ஒரு ரூமோட சுவரின் கீழ் பகுதியில் ஓட்டை போட்டால் காற்று உள்ளே வரும். அதேபோல் சுவரின் மேல் பகுதியில் ஓட்டை போட்டால் காற்று வெளியே போகும். அதனால் ரூமில் இருக்கும் வெப்ப காற்றை வெளியேற்ற உதவுகிறது.

water tank
water tankpt desk

தண்ணீர் பிரச்னையை தீர்க்கும் மழைநீர் சேகரிப்பு தொட்டி

இந்த வீட்டோட நடுப்பகுதியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மழைநீர் சேகரிப்பு தொட்டி அமச்சிருக்காங்க. ரெண்டு மழை நல்லா பெய்தாலே இந்த தொட்டி முழுவதும் நிறைந்து விடும் என்றும், இந்த பகுதியில் இருக்கும் தண்ணீர் பிரச்னையை இதன் மூலம் தீர்க்க முடியும் என்றும் சொன்னாங்க. கற்களை ஜிக்ஜாக் முறையில் அடுக்கி சுவரை கட்டியிருக்காங்க. சுவரில் மீதமுள்ள இடத்தை மண், மணல், கடுக்காய் வெல்லம் தண்ணி, கற்றாலை மற்றும் சுண்ணாம்பு கலவையை பயன்படுத்தி இருக்காங்க. அதேபோல செங்கல் சுவருக்கும் மேற்சொன்ன இதே கலவையைதான் பயன்படுத்தி இருக்காங்க.

சிமெண்டால் அமைக்கப்பட்டுள்ள மாடி படியின் கைப்பிடிக்கு எம்எஸ் ஸ்டீல் பயன்படுத்தியிருக்காங்க. அதன் மேல் சில்வர் கலர் பெயிண்ட் அடித்திருப்பதால் அது பார்ப்பதற்கு அழகாக இருக்கு. சிமெண்ட் மூலம் அமைக்கப்பட்டுள்ள பாதையின் நடுவே டைல்ஸ் ஒட்டியுள்ளதால், பார்ப்பதற்கு நல்லா இருக்கு. மாடியில் இருக்கும் ரூமில் போடப்பட்டுள்ள கட்டில் மூங்கிலால் செய்யப்பட்டுள்ளது.. அதன் மேல் மெத்தை போட்டுள்ளது. வித்தியாசமான கட்டில் போல் காட்சியளிக்கிறது.

stone wall
stone wallpt desk

சுவற்றின் கீழ் மற்றும் மேற்புறத்தில் ஓட்டை போடுவதன் காரணம் என்ன?

முதல் தளத்தை பொருத்தவரை இரண்டு விதமான சீலிங் அமைத்திருக்காங்க. அது மெட்ராஸ் டரஸ்ஸும் ஒன்னு. இதற்கான மெயின் பீமை கான்கிரீட்டில் போட்டு, அதன் குறுக்கே போட்டுள்ள பீமுக்கு சீமக் கருவேல மரத்தை பயன்படுத்தி இருக்காங்க. அதன் மேல் தட்டை செங்கலை பயன்படுத்தி இருக்காங்க. இந்த செங்கலை ஒட்டுவதற்கும் சுண்ணாம்பு கலவையைதான் பயன்படுத்தி இருக்காங்க. இதன் மூலம் இந்த அறையில் இருக்கும் வெப்பம் சீராக இருக்கும். இந்த முறையை மீண்டும் மக்கள் பயன்படுத்தி ஆரம்பித்து இருக்காங்க. இந்த வீட்ல அழகான ஒரு பால்கனி இருக்கும் இந்த பால்கனியோட தரைத் தளத்துக்கு வேஸ்டான டைல்ஸை பயன்படுததி இருக்காங்க இது பார்ப்பதற்கு அழகாக இருக்கு.

பழமை மாறாமல் பழைய முறையில் வீடுகளை கட்டுவதில் உள்ள ஆர்வர் மக்களிடம் அதிகரித்தே வருகிறது. இந்த வீடு கண்டிப்பா உங்களுக்கு புடுச்சிருக்கும். இந்த மாதிரியான பல வித்தியாசமான வீடுகளின் தகவல்களோடு மீண்டும் பார்ப்போம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com