ஓடிடி திரைப்பார்வை 14: கலர்புல்லான காதலும் எமோஷனும் தனுஷின் 'கலாட்டா கல்யாணம்'

ஓடிடி திரைப்பார்வை 14: கலர்புல்லான காதலும் எமோஷனும் தனுஷின் 'கலாட்டா கல்யாணம்'
ஓடிடி திரைப்பார்வை 14: கலர்புல்லான காதலும் எமோஷனும் தனுஷின் 'கலாட்டா கல்யாணம்'

டிசம்பர் - இது பண்டிகைக் காலம் என்பதால் நிறைய சினிமாக்கள் வெளியாகி வருகின்றன. பல சினிமாக்கள் ரிலீஸுக்காக அணிவகுத்து காத்திருக்கின்றன. இந்நிலையில் ஓடிடி தளங்களில் புதிய படங்களின் வருகையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வார இறுதி நாள்களில் என்ன படம் பார்க்கலாம் என்ற குழப்பம் நேரும் அளவிற்கு அதிக எண்ணிக்கையில் சினிமாக்கள் வெளியாகின்றன.

எனினும் இந்த பண்டிகை நாள்களில் கலர்புல்லான ஜாலியான சினிமாவை பார்க்க விரும்புகிறவர்களுக்கு அட்ராங்கி ரே நல்ல தேர்வு. தமிழில் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் ஹாட் ஸ்டாரில் வெளியாகியிருக்கும் இந்த சினிமாவில் தனுஷ், அக்‌ஷய் குமார், சாரா அலிகான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மருத்துவக்கல்லூரி மாணவரான தனுஷ் தன் கல்லூரித் தோழியை காதலிக்கிறார். ஆனால் பீகார் சென்ற அவருக்கு சாரா அலிகானுடன் கட்டாய திருமணம் நடந்து முடிகிறது. இந்த கல்யாணத்தில் இருவருக்கும் உடன்பாடு இல்லை என்றாலும் காலம் அவர்களை எந்தப் புள்ளியில் காதலர்களாக இணைத்தது என்பதே கலாட்டா கல்யாணத்தின் கலர்புல்லான திரைக்கதை.

20 முறைகளுக்கு மேல் தன் காதலனுடன் ஊரை விட்டு ஓட முயன்று மாட்டிக் கொள்கிறார் சாரா அலி கான். உண்மையில் அவருக்கு என்னதான் பிரச்னை என்பதை இங்கு கூறினால் அதுவே இப்படம் குறித்த ஸ்பாய்லராக அமைந்துவிடும் என்பதால் நீங்கள் அதனை திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். சாரா அலிகான் பீகார் குறித்து பேசும் ஒரு வசனம் முக்கியமானது “அடிதடி வெட்டு குத்து எதும் இல்லாம நடந்தா அது எங்க ஊர்ல ஏற்பாட்டு திருமணம் தான், அதென்ன உங்க ஊர்ல காதலிச்சா சம்மதம் சொல்லி சேத்து வைக்கிறாங்க. அதெல்லாம் இந்த ஊர்ல நடக்காது” என்பது போன்ற சாராம்சத்தில் சாரா அலிகான் பேசு வசனம் பீகாருக்கும் தமிழகத்திற்கும் உள்ள வித்யாசத்தை உணர்த்துகிறது.

ஆனந்த் எல் ராய் இந்த சினிமாவை ஜாலியான காதல் மசாலா சினிமாவாக இயக்கியிருக்கிறார். பங்கஜ் குமாரின் ஒளிப்பதிவு வானவில். ஏ.ஆர்.ரகுமானின் இசை இத்திரைப்படத்துக்கு மிகப்பரிய பலம். காதல், சோகம், கொண்டாட்டம் என ஒவ்வொரு தருணத்துக்கும் ஒவ்வொரு பாடல். அதேபோல பின்னணி இசை அத்தனை உணர்ச்சிகளையும் கொண்டு வந்திருக்கிறது. அக்‌ஷய் குமார் சின்னச் சின்ன முகபாவங்களில் காதலியுடனான பொஸஸிவ் உணர்வுகளை வெளிக்காட்டும் காட்சிகளில் சிறப்பாக அசத்தியிருக்கிறார். ஆனால் அவருக்கு தமிழில் வழங்கியிருக்கும் பின்னணிக் குரல் பொறுத்தமாக இல்லை. அக்‌ஷய் குமாரை ஒரு மெஜீஸியனாக வடிவமைத்து இருப்பது இன்னுமே இந்த சினிமாவை கலர்புல்லாக அணுக உதவியிருக்கிறது. தாஜ் மஹாலை தன் மேஜிக் திறமையால் மறைக்க முயலும் காட்சியில் அக்‌ஷய் குமார் தோல்வியுறும் போது அப்பாவி குழந்தை போல முகத்தை வைத்துக் கொள்கிறார். அக்‌ஷய் குமார் இந்தி சினிமாவில் மிகப்பெரிய கமர்ஸியல் மெடீரியல். இதேபோல சராவுடன் பேசும் அக்ஷய் குமாரின் கிளைமேக்ஸ் காட்சிகள் அபாரம்.

நகைச்சுவை அவரிடம் ஏகபோகமாக கிடைக்கும். ஆனால் 'அட்ராங்கி ரே' வில் அவரை ஆட்டம் பாட்டம் இல்லாத அப்பாவி போல காட்டியிருப்பதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். இது அக்‌ஷய் குமாரின் ரசிகர்களுக்கு ஏமாற்றமே.தனுஷ் எந்த பாத்திரமாக இருந்தாலும் தன்னை அதற்கு ஏற்ப அப்படியே மாற்றிக் கொள்வார். கல்லூரிப் பையனோ, அசுரனோ அவர் நடிப்பில் எப்போதும் அசுரனே. இந்த சினிமா அவருக்கு தீனி போடும் சினிமா அல்ல. ஆனால் ஒரு கமர்ஸியல் ஹீரோவாக கலாட்டா கல்யாணத்தில் எந்த அளவிற்கு தன் பங்கை வழங்க முடியுமோ அந்த அளவிற்கு தன் பங்கை சிறப்பாகவே கொடுத்திருக்கிறார்.

கட்டாயத் திருமணமாக இருந்த போதிலும் தனுஷ் தன் மனைவியை விட்டுக் கொடுக்காமல் நிற்கும் இடங்கள் அழகு. தனுஷும், சாரா அலி கானும் காதல் மலர இணையும் புள்ளி ரசிகர்களுக்கு நல்ல மன நிறைவைத்தருகிறது. பெரிதாக லாஜிக் இல்லாமல் கமர்ஸியல் காட்சிகள் மற்றும் பெரிய நடிகர்களை நம்பி களமிறங்கியிருக்கும் கலாட்டா கல்யாணம் ஏமாற்றவில்லை. வார இறுதியில் குடும்பத்துடன் அமர்ந்து ஜாலியாக கொண்டாட ஏற்ற சினிமா இந்த கலாட்டா கல்யாணம். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com