திரையில் மெர்சல் காட்டும் அட்லியின் பிறந்தநாள் இன்று..!

திரையில் மெர்சல் காட்டும் அட்லியின் பிறந்தநாள் இன்று..!
திரையில் மெர்சல் காட்டும் அட்லியின் பிறந்தநாள் இன்று..!

இளம் வயதிலேயே அரசியலை திரையில் பேசிய அட்லியின் பிறந்தநாள் இன்று!

மிக இளம் வயது இயக்குநர் ஒருவர்  நடிகர் விஜய்யை வைத்து ஹாட்ரிக் வெற்றி கொடுத்தார் என்றால் அது இயக்குநர் அட்லிதான். ஏ.ஆர் முருகதாஸும் விஜய்யை வைத்து ‘துப்பாக்கி, கத்தி, சர்கார்’ என்று ஹாட்ரிக் வெற்றி கொடுத்திருந்தாலும் அட்லியின் வயது இருக்கும்போது, இந்த வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை ராஜா ராணிக்குப் பிறகு, வேறு நடிகரை வைத்து படம் பண்ணாமல் தொடர்ச்சியாக விஜய்யை வைத்து இயக்கினார் அட்லி. இன்று அட்லியின் 34 வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இயக்குநர் அட்லி 1986 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதி பிறந்தார். சிறு வயதிலிருந்தே சினிமா ஆர்வம் ஏற்பட்டதால், இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். அட்லி இயக்குநர் ஆவதற்கு முன்பே, ’என் அசிஸ்டெண்ட் ஒருவன் இருக்கிறான். அவன் அடுத்த வருடம் படம் பண்ணிருவான். எப்படி படம் எடுக்கிறான்னு பாருங்க’ என்று தனது உதவி இயக்குநர் அட்லி குறித்து பாராட்டித் தள்ளியவர் இந்தியாவின் பிரம்மாண்ட  இயக்குநர் ஷங்கர். அவர் வார்த்தைகள் பொய்க்கவில்லை. மாறாக உயிர் பெற்று இன்று அட்லியை நடிகர் ஷாருக்கானை இயக்கும் அளவிற்கு பாலிவுட்டிற்கு கொண்டு சென்றுள்ளது.

கலை மக்களுக்கானது. அதனால், அரசு கொண்டுவரும் திட்டங்கள் குறித்து சில இயக்குநர்கள் வெளிப்படையாக பேசுவார்கள். சில இயக்குநர்கள் திரையில் பேசுவார்கள். இதில், இயக்குநர் அட்லி இரண்டாம் ரகம். ஒரே படத்தில் இந்தியாவையே அதிர வைத்தார். மெர்சல் படத்தில் அரசின்  திட்டங்கள் குறித்து விமர்சித்து தனது அரசியல் நிலைப்பாட்டை காட்டினார்.

இயக்குநர் கெளதம் மேனனுக்கு அடுத்து ஹீரோயின்களை இளமையாகவும் அழகாகவும் காட்டும் திறமை அட்லிக்கு உண்டு. அது ராஜா ராணி நயன்தாராவாகட்டும், தெறி,மெர்சல் சமந்தாவாகட்டும் இளமையுடன் காட்சிப்படுத்தியிருப்பார்.

அதேபோல் இவரது படங்களில் இடம்பெறும் பாடல்கள் அனைத்துமே ஷங்கர் பாணியில் வித்யாசமாக ப்ரெஷ்ஷாக இருக்கும்.

தமிழின் முன்னணி நடிகர் விஜய் மட்டுமல்ல; லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவையும் ராஜா ராணி, பிகில் படங்களில் வைத்து இயக்கினார். இவரது படங்கள் பலப்  படங்களின் காட்சிகளை ஒத்திருக்கிறது என்று கூறப்பட்டாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறாமல் இருந்ததில்லை.

பிறந்தநாள் வாழ்த்துகள் அட்லி!!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com