ரஷ்யாவிலுள்ள சைபீரியாவில் உப்பு ஏரி ஒன்று கோடைக்காலத்தில் சூரியக்கதிர்கள் பட்டு பிங்க் மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறும் வீடியோ வைரலாகி வருகிறது.
ரஷ்யாவின் பெரும்பகுதியைக் கொண்டுள்ள சைபீரியாவில் குறைவான மக்களே வசிக்கிறார்கள். காரணம், அதன் குளிர்ந்த தன்மைதான். ஜனவரில் மைனஸ் 25 டிகிரி குளிர் அடிக்கும் என்றால் அதன் காலநிலை எப்படி இருக்கும் என்று யோசித்துக் கொள்ளலாம்.
ஆஸ்திரேலியா அளவிற்கு பரப்பளவைக் கொண்ட பெரிய சைபீரியாவில் பெரும்பாலும் பனி மலைகளும் பல்வேறு அதிசயங்களும் உலகின் பழமையான நன்னீர் ஏரியான பைக்கால் ஏரியும் உலகின் பெரிய ஆறுகளும் அமைந்துள்ளது.
பைக்கால் ஏரியின் பரப்பளவு மட்டுமே நெதர்லாந்து நாட்டிற்கு இணையானது. பல்வேறு அதிசயங்களை உள்ளடக்கிய சைபீரியாவில்தான் பர்லின்ஸ்கோய் அதிசய ஏரியும் அமைந்துள்ளது.
இந்த ஏரியில்தான் கோடை காலமான ஜூலை முதல் செப்டம்பர் வரை வானத்தில் சூரியனின் இளஞ்சிவப்பு நிற சூரியக் கதிர்கள் ஏரியில் பட்டு பிங்க் கலரில் காட்சியளித்து மனதை கொள்ளைக் கொள்கிறது.
31 சதூர கிலோமீட்டர் கொண்ட இந்த ஏரியின் ஆழம் இரண்டு கிலோமீட்டருக்கு மேல் வெறும் இரண்டு அடிதான் என்பது இன்னும் வியக்க வைக்கிறது. அதிக அளவிளான உப்புகள் இந்த ஏரியில் உள்ளது என்பதால் இங்கு உடம்பில் காயங்கள் இருப்பவர்கள் வந்து கை கால்களை நனைத்துவிட்டுச் செல்கிறார்கள்.
உடனேயே சரியாவதாகவும் சொல்லப்படுகிறது. அதனாலேயே, ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
Hot weather turns Siberian lake bright pink! #Russia pic.twitter.com/17wF2eYR7t — RT (@RT_com) September 14, 2020
அந்தளவிற்கு ரஷ்யாவிலேயே அதிக உப்புத்தன்மைக் கொண்ட ஏரி இதுதான். ஆர்டிக் கடலின் அருகில் அமைந்துள்ளது. ஏரியின் அருகிலேயே உப்பு தயாரிக்கப்பட்டு ரயிலில் எடுத்துச் செல்லப்பட்டு ரஷ்யா முழுக்க விநியோகம் செய்யப்படுகிறது.
Loading More post
விருகம்பாக்கம் தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டி?
''இந்திரா காந்தி பிரகடனம் செய்த எமர்ஜென்சி ஒரு பிழை'' - ராகுல் காந்தி கருத்து
கட்சிக்கு தனித்துவத்தை விரும்பும் வைகோ: கடந்த பேரவைத் தேர்தல்களும் மதிமுகவும்!
பாலியல் வன்கொடுமைக்கு உரிமமா திருமணம்? தலைமை நீதிபதிக்கு வலுக்கும் கண்டனங்கள்!
அசாம் தேர்தல் களம்: தேயிலைத் தொழிலாளர்களை குறிவைக்கும் பாஜக, காங்கிரஸ்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?