Rewind 2023: விண்வெளிதுறையில் புதிய வெளிச்சங்கள்; ’Space’-ல் மனிதகுலம் சாதித்தது என்ன? (பாகம் 2)

விண்வெளி சுற்றுலாவில் முன்னெடுப்பு; நிலவில் ரஷ்ய திட்டம் தோல்வி; சந்திரயான் 3 சாதனை
விண்வெளி ஆய்வு மையம்
விண்வெளி ஆய்வு மையம்கூகுள்

வர்ஜின் கேலக்டிக் முதல் விண்வெளி சுற்றுலா

அமெரிக்க விண்வெளி சுற்றுலா நிறுவனமான விர்ஜின் கேலக்டிக் (Virgin Galactic) முதல் வணிக விண்வெளி பயணத்தை நிறைவு செய்து வரலாறு படைத்துள்ளது. முன்னதாக ஜூன் 29ம் தேதி சர் ரிச்சர்ட் பிரான்சன் விண்வெளிக்கு சென்று சாதனை படைத்ததைத் தொடர்ந்து, வியாபாரரீதியாக மீண்டும் 6 பேர் விண்வெளிக்கு சென்று திரும்பியுள்ளனர்

ரிச்சர்ட் பிரான்சன் என்பவரது விண்வெளி சுற்றுலா நிறுவனமான விர்ஜின் கேலக்டிக், ஆகஸ்ட் 11 அன்று நியூமெக்சிகோ பாலைவனத்தில் Virgin Galactic 01 எனப்படும் ராக்கெட் அனுப்பினார். இது 80 கி.மீ உயரத்தில் பறந்து விண்வெளியில் நுழைந்தது. 90 நிமிட நீண்ட பயணத்தை முடித்துவிட்டு திரும்பி உள்ளது. இதில் 80 வயட்தான பிரிட்டிஷ் ஒலிம்பியன் ஜான் குட்வின் மற்றும் கரீபியன் நாட்டைசேர்ந்த தாய் மகள் என்ற 3 பயணிகள் மற்றும் 2 இத்தாலிய விமானப்படை கர்னல்கள் மற்றும் இத்தாலியின் தேசிய ஆராய்ச்சி கவுன்சிலின் விண்வெளி பொறியாளர் ஒருவரும் பயணித்தனர். பயணிகள் மற்றும் பொறியளர்கள் என மொத்தம் ஆறு பேருடன் Virgin Galactic 01 விண்வெளியில் பறந்து சாதனை படைத்துள்ளது.

நிலவின் மேற்பரப்பில் விழுந்து நொறுங்கியா ரஷ்யாவின் லூனா

ரஷ்யா லூனா 25 எனப்படும் விண்கலத்தை மாஸ்கோவில் இருந்து 5500 கிலோமீட்டர் கிழக்கில் இருக்கும் வொஸ்டோச்னி காஸ்மோட்ரோம் ஏவுதளத்தில் இருந்து அனுப்பியது. ஆனால் துரதிஷ்டமாக கடந்த ஆகஸ்ட் 30ம் நாள் ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் விழுந்து நொறுங்கியது.

ரஷ்யாவின் லூனா விண்கலம்
ரஷ்யாவின் லூனா விண்கலம்

நிலவின் தென் துருவத்தில் மென்மையாக தரையிறங்குவதற்காக ஏவப்பட்ட ரஷ்யாவின் லூனா25 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் விழுந்து நொறுங்கியதாக ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனம் ரோஸ்கோஸ்மோஸ் உறுதி செய்துள்ளது.ரஷ்யாவின் லூனா 25 விண்கலம், கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. ஆகஸ்ட் 21 அல்லது 22ஆம் தேதி (சந்திரயான் 3க்கு முன்னதாக) இந்த விண்கலத்தை, நிலவின் தென் பகுதியில் தரை இறங்க ரஷ்யா திட்டமிட்டிருந்த நிலையில், தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. திடீரென விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இறுதிக்கட்ட சுற்றுப்பாதையை குறைப்பதில் சிக்கல் ஏற்பட்டது .இந்த நிலையில் நிலவுக்கு ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் நிலவில் மோதி நொறுங்கியது. லூனா 25 விண்கலத்துடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த ரஷ்ய விஞ்ஞானிகள் முயற்சித்த நிலையில் இந்த திட்டம் தோல்வி அடைந்தது.

சாதனை படைத்த சந்திரயான்3

உலகமே எதிர்பார்த்த, இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் ஆகஸ்ட் 23 தரையிறங்கியது. இதன்மூலம் சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் விண்கலம் என்ற பெருமையை சந்திரயான் 3 பெற்றது. அதனை சாதித்துக் காட்டிய முதல் நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

சந்திரயான் 3
சந்திரயான் 3

கடந்த ஜூலை 14ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவாண் விண்வெளி மையத்தில் இருந்து, பிற்பகல் 2.35 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது.சந்திரயான் 3 விண்கலம், ஏவப்பட்ட 16வது நிமிடத்தில், ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாக தனியாகப் பிரிந்தது. கடந்த ஜூலை 15ஆம் தேதி, குறைந்தபட்சம் 173 கி.மீ. மற்றும் அதிகபட்சம் 41,762 கி.மீ. தொலைவு கொண்ட புவிவட்டப் பாதைக்கு விண்கலம் கொண்டு செல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜூலை 17ஆம் தேதி விண்கலம் பயணிக்கும் புவிவட்டப் பாதையின் தொலைவு 41,603 கி.மீட்டராக அதிகரிக்கப்பட்டது.டந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி, புவி ஈா்ப்பு விசையிலிருந்து விலக்கப்பட்டு சந்திரயான் 3, நிலவை நோக்கிய புதிய பயணத்தைத் தொடங்கியது. அடுத்து ஆகஸ்ட் 5ஆம் தேதி, நிலவின் ஈா்ப்பு விசைக்குள் நுழைந்த விண்கலம், குறைந்தபட்சம் 164 கி.மீ. மற்றும் அதிகபட்சம் 18,074 கி.மீ. தொலைவு கொண்ட சுற்றுவட்டப் பாதைக்குள் செலுத்தப்பட்டது.

விண்வெளி ஆய்வு மையம்
Rewind 2023: விண்வெளிதுறையில் புதிய வெளிச்சங்கள்.. சென்ற ஆண்டு ’Space’-ல் மனிதகுலம் சாதித்தது என்ன?

தொடர்ந்து ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல், 14ஆம் தேதி வரை சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்றி வரும் நிலவு வட்ட பாதையின் தொலைவு படிப்படியாகக் குறைக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி சந்திரயான்3 உந்துகலனில் இருந்து லேண்டா் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டது.ன்னர் ஆகஸ்ட் 20ஆம் தேதி, சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து சென்ற விக்ரம் லேண்டர் 25 கிமீ x 134 கிமீ என்ற நீள்வட்டப் பாதையில் நிலவை சுற்றி பின்னர் ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு லேண்டர் நிலவில் மெதுவாக இறங்கியது. பிறகு 15 நாட்கள் நிலவில் பல்வேறு ஆராய்சியை மேற்கொண்ட சந்திரயான் பிறகு தனது சக்தியை இழந்தது.

JAXA லேண்டர் SLIM ஐ கொண்டு சென்ற ஜப்பானின் H-IIA ராக்கெட்

ஜப்பான் தனது எச்-ஐஐஏ ராக்கெட்டை செப்டம்பர் 7ம் தேதி விண்வெளியில் வெற்றிகரமாக ஏவியது. தெற்கு ஜப்பானில் உள்ள ககோஷிமாவில் இருக்கும் தனேகாஷிமா விண்வெளி மையத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து H-IIA ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டில், பிரபஞ்சத்தின் தோற்றத்தை ஆய்வு செய்யும் எக்ஸ்-ரே இமேஜிங் அண்ட் ஸ்பெக்ட்ரோஸ்கோபி மிஷன் XRISM எனப்படும் எக்ஸ்ரே தொலைநோக்கியை இந்த ராக்கெட் கொண்டு சென்றது.

H-IIA ராக்கெட்
H-IIA ராக்கெட்NASA/Bill Ingalls

XRISM ஆனது இண்டர்கலெக்டிக் இடத்தின் கலவை மற்றும் வேகத்தை அளவிடும் என்று தெரியவந்துள்ளது. இந்த விண்வெளி பணியானது பிரபஞ்சத்தின் உருவாக்கம் ஆகியவற்றைப்புரிந்துக்கொள்ள நாசாவுடன் இணைந்து நடத்தப்பட்டது.

வெடித்து சிதறிய ரஷ்ய விண்கலம் ISS

செப்டம்பர் 15 மூன்று விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற ரஷ்ய விண்கலம் ISS விண்கல வெடித்து சிதறியது.

விண்கலம் ISS
விண்கலம் ISS

கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் காஸ்மோட்ரோமில் இருந்து சர்வதேச விண்வெளி நிலயத்திற்கு செல்வதற்காக ஒரு அமெரிக்கா மற்றும் இரண்டு ரஷ்ய விண்வெளிக்குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் சென்ற ரஷ்ய விண்கலமானது வெடித்தது.

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா L1

இந்தியாவின் சூரியனை ஆய்வு செய்யும் கனவு திட்டமான ஆதித்யா L1 விண்கலம் பிஎஸ்எல்வி C-57 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செப்டம்பர் 2ம் தேதி காலை 11 50க்கு விண்ணில் ஏவப்பட்டது. விஞ்ஞானிகளில் திட்டப்படி L1 புள்ளியை சுற்றி வரும் விண்கலமானது சூரியனை பல்வேறு கோணங்களிலும் புகைப்படமெடுத்து அனுப்பியதுடன் தொடர்ந்து ஆராய்சியில் ஈடுபட்டு வருகிறது. திட்டமிட்டபடி ஜனவரி 7ம் தேதி L1 புள்ளியில் நிலைநிறுத்தப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com