Rewind 2023: விண்வெளிதுறையில் புதிய வெளிச்சங்கள்.. சென்ற ஆண்டு ’Space’-ல் மனிதகுலம் சாதித்தது என்ன?

கடந்த ஆண்டு விண்வெளி துறையில் மனிதகுலம் அடைந்த சாதனைகளின் தொகுப்பை இந்த செய்தியில் விரிவாக காணலாம்.
பிரபஞ்சம்
பிரபஞ்சம்நெட்

2023ம் ஆண்டு நேற்றோடு கடந்து சென்றுவிட்டநிலையில், விண்வெளி துறையில் ஓராண்டாக எந்தெந்த நாடுகள் வெற்றியை பெற்று இருக்கிறது, தோல்வியில் கற்றுக்கொண்ட அனுபவம் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

விண்வெளி துறையில் ராக்கெட் ஏவுதல், விண்வெளி சுற்றுலா பயணிகள், புதிய விண்மீன் திரள்கள் நிலவில் சாதித்த தருணங்கள் சூரியனை ஆய்வு செய்ய அனுப்பிய ராக்கெட் வரை என்னென்ன சாதனைகள் நடந்துள்ளது என்பதை பார்க்கலாம்.

ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்ஷிப்!

அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், நிலவுக்கும்-செவ்வாய் கிரகத்துக்கும் மனிதர்களை அனுப்ப வேண்டும் என்ற முயற்சியில் ஸ்டார்ஷிப் (சீரியல் 8 அல்லது SN 8) என்ற ராக்கெட்டை உருவாக்கியது. இதில் மனிதர்கள் மட்டுமின்றி 100 டன் சரக்குகளையும் இதில் கொண்டு செல்ல முடியும். இந்த ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்ஷிப் 395 அடிஉயரத்துடனும், ராப்டார் ராக்கெட் என்ஜின்கள், மற்றும் வளிமண்டலத்தின் வழியாக பறக்க canards மற்றும் wing flaps ஆகியவை பொருத்தப்பட்டிருந்தன. சுமார் 13 கி.மீ தூரத்துக்குச் செல்லும் திறனுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது.

space x video

இத்தகைய அதி நவீனமுறையில் தயாரிக்கப்பட்ட ஸ்டார்ஷிப் முதல் சோதனை முயற்சியாக டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள போகா சிகா கடற்கரை பகுதியிலிருந்து விண்வெளிக்கு செலுத்தப்பட்டது. ஆனால் புறப்பட்ட 8 வது நிமிடத்திலேயே இந்த ராக்கெட்டானது தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெடித்து சிதறியது, இருப்பினும், ராக்கெட்டின் ஏறும் கட்டம் வெற்றிகரமாக இருந்ததாகவும், தங்களுக்கு தேவையான தரவுகள் கிடைத்துவிட்டதால் இத்திட்டம் தங்களுக்கு வெற்றியான திட்டமே எனவும் ஸ்பேஸ் எக்ஸ் உரிமையாளர் எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார்.

பென்னு விண்கல்!! (asteroid Bennu)

விண்வெளி ஆராய்சியாளர்கள் தொடர்ந்து விண்வெளியை ஆய்வு செய்து பல ஆராய்சியை மேற்கொண்டு வந்தநிலையில், பூமிக்கு மிக அருகில் விண்கல் ஒன்று பூமியை நோக்கி வருவதை தெரிந்துக்கொண்ட நாசா விஞ்ஞானிகள், அந்த விண்கல்லிற்கு பென்னு என்று பெயரிட்டனர். பென்னுவை ஆராய்ச்சி செய்ய நினைத்து அதிலிருந்து விண்கல் மாதிரியை எடுப்பதற்காக, 2016ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி நாசா ஓசிரிஸ் ரெக்ஸ் (OSIRIS-REx) என்ற விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பியது.

ஓசிரிஸ் ரெக்ஸ்
ஓசிரிஸ் ரெக்ஸ்

ஓசிரிஸ் ரெக்ஸ் பென்னுவை கண்காணித்து, பென்னுவிலிருந்து சில பகுதிகளை சேகரித்துக்கொண்டு, பூமிக்கு செப்டம்பர் 24 ம் தேதி உட்டா பாலைவனத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. பென்னு விண்கல்லின் மாதிரியை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இந்த ஆராய்ச்சியின் மூலம் சூரியக் குடும்பத்தின் தோற்றமும் அதன் பரிணாம வளர்ச்சியும், கோள் உருவாக்கம், புவியியல் உயிர்களின் தோற்றம் ஆகியவற்றை கரிமச்சேர்மங்களின் மூலம் ஆகியவை தெரியவரும் என்கிறார்கள்.

நாசா ஆர்ட்டெமிஸ் 2 மிஷன்னுக்காக விண்வெளி பயணத்திற்கு தேர்வான 4 பேர்!!

ஆர்ட்டெமிஸ் மிஷன் (Artemis missions, NASA)

ஆர்ட்டெமிஸ் 1 என்பது, சந்திரனைச் சுற்றி ஓரியன் விண்கலத்தை அனுப்பும் ஒரு ஆளில்லாத சோதனை விமானம் ஆகும்.

ஆர்ட்டெமிஸ் 2 என்பது விண்வெளி வீரர்களை சந்திரனைச் சுற்றி அனுப்பும் ஒரு மிஷன் ஆகும். இந்த பயணத்திற்கு அமெரிக்காவும் கனடாவும் இணைந்து நான்கு பேரை தேர்வு செய்து கடந்த ஏப்ரல் 3 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன்படி விண்வெளி பயணத்திற்கு, விண்வெளி அனுபவம் வாய்ந்த கிறிஸ்டினா கோச், குளோவர், கனடாவை சேர்ந்த கர்னல் ஜெர்மி ஹேன்சன், அமெரிக்க கடற்படை போர் விமானியான ரீட்வைஸ்மேன் ஆகியோர் ஆர்ட்டெமிஸ்2 மிஷனுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

கிறிஸ்டினா கோச், குளோவர்,கர்னல் ஜெர்மி ஹேன்சன்,ரீட்வைஸ்மேன்
கிறிஸ்டினா கோச், குளோவர்,கர்னல் ஜெர்மி ஹேன்சன்,ரீட்வைஸ்மேன் நாசா

நாசாவின் செவ்வாய் பயணத்தில் ஆர்ட்டெமிஸ் மிஷன் ஒரு முக்கிய மைல்கல். சந்திரனுக்கு மனிதர்களைத் திருப்பி அனுப்புவதன் மூலம், செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதற்குத் தேவையான அனுபவத்தையும் அறிவையும் நாசா பெறும். ஆகவே ஆர்ட்டெமிஸ் மிஷன் நாசாவின்ஒரு தைரியமான மற்றும் லட்சிய முயற்சியாகும்,

விண்வெளி எல்லைக்கு சென்று திரும்பிய மனிதன்!!

ஜுன் 29 ரிச்சர்ட் ப்ரான்சனின் விர்ஜின்கேலக்டிக் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முதல் பயணத்தை நிறைவு செய்தது.

விண்வெளியின் எல்லைக்கு சென்று திரும்ப வேண்டும் என்ற தனது வாழ்நாள் கனவை 71 வயதில் நனவாக்கிக் கொண்டுள்ளார் பிரிட்டன் வணிகர் சர் ரிச்சர்ட் பிரான்சன். அதுவும் அவர் பணத்தில் உருவாக்கிய ராக்கெட் மூலம்.

சர் ரிச்சர்ட் பிரான்சன்
சர் ரிச்சர்ட் பிரான்சன்

சர் ரிச்சர்ட் பிரான்சன் ஒரு தொழில் அதிபர். வர்ஜின் கேலக்டிக் என்ற அவரது நிறுவனம் உருவாக்கிய யுனிட்டி என்ற ராக்கெட் முலம், விண்வெளிக்கு சென்ற ரிச்சர்ட் ப்ரான்சன் தனக்கு உதவியாக இரண்டு இத்தாலிய விமானப்படை வீரர்கள் மற்றும் ரஷ்ய நாட்டைசேர்ந்த கர்னல் ஒருவரும் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்களையும் கூட்டிச் சென்றுள்ளார். ஒன்றரை மணி நேர விண்வெளிப் பயணத்தை முடித்துக்கொண்டு வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பி இருக்கிறார்.

ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி! (James Webb Space Telescope)

இந்த பிரபஞ்சத்தில் 1350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்திருக்கும்? சூரியன் எப்படி உருவாகி இருக்கும்? பூமியில் உயிர்கள் எப்படி தோன்றிருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வதற்காக விஞ்ஞானிகள் பலஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் முதல் படியாக ஜேம்ஸ் வெப் என்ற தொலைநோக்கியை பிரஞ்சு கயானாவிலிருந்து அமெரிக்கா கடந்த வருடம் விண்ணிற்கு ஏவியது.

ஜேம்ஸ் வெப்
ஜேம்ஸ் வெப்

இந்த தொலைநோக்கியானது கடந்த ஜூலை 12 தேதியன்று விண்வெளியிலிருந்து சுமார் 390 ஒளி ஆண்டுகள் தொலைவில், புதிதாக உருவாகும் நட்சத்திரத்திரத்தை (ஈரெண்டல்) படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது.

HH212
HH212

நவம்பர் 7 அன்று இத்தொலைநோக்கி HH212 பெயர்கொண்ட புதியவகை நட்சத்திரம் உருவாவதை மீண்டும் படம்பிடித்து அனுப்பியது. HH212 நட்சத்திரமானது சுமார் 50000 ஆயிரம் பழமையானது. இந்த நட்சத்திரம் பூமியிலிருந்து சுமார் 1300 ஒளி ஆண்டுகள் தூரம் உள்ளது.

இதைத்தொடர்ந்து நவம்பர் 22ம் தேதி ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி பால்வெளிமண்டலத்தின் மையத்தை படமெடுத்து அனுப்பியுள்ளது. இந்த மையமானது 500,000 நட்சத்திரங்கள் ஒன்றாக ஒளிரக்கூடிய வகையில் அமைந்திருந்தது .

இப்படி பல அதிசய நிகழ்வுகளை விண்வெளி ஆராய்சியாளர்கள் சாதித்து காட்டிய நிலையில், இந்தியாவின் ISRO சாதித்ததை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம். (புத்தாண்டு வாழ்த்துகள்)

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com